இடுகைகள்

உணவுப்பயிர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உணவு பாதுகாப்புக்கு ஆபத்தாகும் எத்தனால் உற்பத்தி!

படம்
  உணவுப்பயிர்கள் எரிபொருளாகிறது... இந்திய அரசு எரிபொருளில், எத்தனால் கலக்கும் திட்டத்தை வைத்துள்ளது. தற்போது 8 சதவீதம் கலக்கப்படும் எத்தனாலின் அளவை விரைவில் இருபது சதவீதமாக்க அரசு யோசித்து வருகிறது. அரிசி, சோளம், கரும்பு ஆகியவற்றிலிருந்து எத்தனால் தயாரிக்கப்பட்டு வருகிறது. எத்தனாலை இப்பொருட்களிலிருந்து உற்பத்தி செய்யத் தொடங்கினால் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் என வல்லுநர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.  எத்தனால் கடந்த ஜூன் மாதம், ஒன்றிய அரசு எத்தனால் உற்பத்தியை ஐந்தே ஆண்டுகளில் இருமடங்காக்க திட்டங்களை வகுத்துள்ளது. 2025ஆம் ஆண்டில் எரிபொருளில் 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்டிருக்கும். இதற்காக எத்தனாலை உற்பத்தி செய்ய ஏதுவான பயிர்களை விளைவிக்கும் விவசாயிகளுக்கு நிதியுதவிகளை வழங்கவும், சூழல் தொடர்பான அனுமதியை கொடுக்கவும் தயாராக  இருக்கிறது அரசு. இதன் காரணமாக அரசிடம் உள்ள தானியங்கள் நிறுவனங்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட உள்ளன. இதனால் இத்தானியங்கள் தேவைப்படும் மக்கள் சிரமப்படும் நிலை உருவாகியுள்ளது.  அரசுக்கு புதிய எத்தனால் திட்டம் மூலம் ஆண்டுக்கு 4 பில்