இடுகைகள்

டெக்ஸ் வில்லர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புதிய டெக்ஸின் அதிரடி! - புதிய கதைக்களம் - புதிய முகம்!

படம்
segio bonelli ஒரு தலைவன் ஒரு சகாப்தம் லயன் காமிக்ஸ் - தீபாவளி மலர் விலை. ரூ. 150 ப்ளூமூன் எனும் கமான்சே குழுக்கள், நவஹோ எனும் தங்களின் எதிரியான பழங்குடிகளை தாக்கி கொன்றுவிடுகின்றனர். அங்கு அடைக்கலமாகி வந்த பெண் ஒருவரையும் தூக்கிக்கொண்டு வந்துவிடுகின்றனர். அவர்களை வேரறுக்க டெக்ஸ் வில்லர் செல்கிறார். நீதியை நிலைநாட்டி அவர்களை இடதுகையால் சமாளித்து தோட்டாக்களையும் கோடாரிகளையும் பரிசளித்து, குருதியால் பூமியை குளிப்பாட்டுகிறார். இறுதியில் ப்ளூமூனோடு ஒற்றைக்கு ஒற்றையாக மோதி வென்று தன் சவாலில் சாதிக்கிறார். எப்படி என்பதுதான் காமிக்ஸின் கதை. கதை தொடங்குவதும் முடிவதும் செம ட்விஸ்ட். கதையை சொல்வது டெக்ஸ் வில்லரின் ஆயுள்கால சகாவான கார்சன். ஏறத்தாழ நினைவிழப்பு நோய்க்கு ஆளாகியது போல உள்ள கார்சன், தனது நண்பரின் கதையை சொல்கிறார். நண்பர்தான் டெக்ஸ் வில்லர். இக்கதையில் டெக்ஸ் வில்லர் சற்று வேறுபட்டு தோன்றுகிறார். இதுவரையில் நாம் பார்த்த டெக்ஸ் வில்லர் இவர் கிடையாது. அழகாய் ஒரு அதிரடி ரேஞ்சர்களில் ஒருவரான ஜாரியூ என்பவர் சக ரேஞ்சர்களால் முதுகில் சுடப்பட்டு கொல்லப்படுகிறார்

மர்மம்,பீதி தரும் தலையில்லாப் போராளி - டெக்ஸ் வில்லர்

படம்
டெக்ஸ் வில்லர் கலக்கும் தலையில்லாப் போராளி கதை: போசெல்லி ஓவியம் சிவிடெல்லி டெக்சாஸின் தென்பகுதியில் செவ்விந்தியப் போராளி செய்த குற்றங்களை காரணம் சொல்லி, அவரைக் கொடூரமாக ரேஞ்சர்கள் குழு சுட்டுக்கொல்கிறது. அடுத்து அவரை அவமானப்படுத்த தலையை வாளால் வெட்டி, குதிரையில் வைத்துக்கட்டி முண்ட உடலுடன் திரியும்படி குதிரையை விரட்டி விடுகின்றனர். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த கொலையில் தொடர்புடைய ரேஞ்சர்கள், அங்குள்ள மனிதர்கள் சிலர் மர்ம மனிதரால் கொலை செய்யப்படுகிறார்கள். யார் அவர்கள் என கண்டுபிடிக்க மருத்துவர் மோரிஸ்கோ நினைக்கிறார். உதவ வருகிறார் டெக்ஸ் வில்லர். அந்த தலையில்லா போராளி யார்? கற்பனையா? உண்மையா என்பதை அவர் டூமில். தடால், கும் சத்தங்களுடன் கண்டுபிடிப்பதுதான் கதை. லயன் காமிக்ஸ் போட்ட புத்தகம் நல்ல பெரிய சைஸ் என்பதால் கதைகளின் ஓவியம் ஓரத்திற்கு போய்விடாமல் ரசித்துப் படிக்க முடிகிறது. இந்த காமிக்ஸில் டெக்ஸ் வில்லரோடு அவரின் மகனும் உண்டு. இம்முறை புத்தகத்திலுள்ள சண்டைக்காட்சிகளை டெக்ஸின் மகன் பார்த்துக்கொள்ள, மிக லாவகமான எளிதான சண்டைக் காட்சிகளை மட்டும் டெக்ஸ் செய்

டெக்ஸ் வில்லர் அசத்தும் நீதியின் நிழலில்- மரணதேசம் மெக்ஸிகோ!

படம்
டெக்ஸ்வில்லர் மிரட்டும் மரணதேசம் மெக்ஸிகோ - நீதியின் நிழலில் இக்கதையை நிஸ்ஸி எழுத,  ஓவியம்  வரைந்திருக்கிறார்  மேன்பிரட் ஸோம்மர் அரிசோனாவில் உள்ள பாதர் மாத்யூவின் காப்பகத்தில் உள்ள சிறுவன் ஜூவானிடோ ஜோஸ், அடையாளம் தெரியாத ஆட்களால் கடத்தப்படுகிறான். அதுபோல நிறைய குழந்தைகள் அங்கு கடத்தப்பட்டாலும், மக்கள் யாருமே அது குறித்து பேச மறுக்கின்றனர். இந்த குற்றச்செயலுக்கு காரணம் யார் என்று டெக்ஸ் வில்லர் கண்டுபிடிப்பதே கதை.  அரசு காவல்துறையில் உள்ள ஊழல், துரோகம் என அனைத்தையும் தவிடுபொடியாக்கி டெக்ஸ் வில்லர் தன் நண்பர் கிட்டுடன் சேர்ந்து நியாயத்தை நீதியை நிலைநாட்டுவதுதான் கதை. எக்கச்சக்க ட்விஸ்டுடன் செல்லுகிற கதை.  பால் மெண்டிஸ், சுரங்க அதிபர் டான் ஓப்ரேகான் ஆகியோரின் ஆட்களைச் சந்திக்கும் இடங்கள் ரகளையாக உள்ளன. இறுதியில் சுரங்கம் மக்கள் வசம் செல்வது கம்யூனிச முடிவாக இருந்தாலும்,  ரசிக்க வைக்கிறது.  நீதியின் நிழலில் செவ்விந்தியர்களுக்கும், வெள்ளையர்களுடன் பணிபுரியும் நாய் மாஸ்டர் லாபார்ஜ் ஆகியோருக்கு இடையிலான சண்டைதான் காமிக்ஸ் கதை.  டெக்ஸ் வில்

டெக்ஸ் வில்லர் அதிரடிக்கும் காவல் கழுகு- குற்றத்தின் தடம்

படம்
காவல் கழுகு லயன் காமிக்ஸ் ரூ.35 கதை: பொசெல்லி ஓவியம்: செய்ஜாஸ் டெக்ஸ் வில்லரின் வீரதீர பராக்கிரம கதை. இம்முறை நவஜோ தலைவரான மாண்புக்குரிய நம் தலைவர், செவ்விந்திய சகோதர ர்கள் ஸெல்காடோ, க்லானே என இருவரையும் சேர்த்து வைக்கிறார். இதற்காக பனிரெண்டு பேர்களுக்கு மேல் உயிரிழக்க வேண்டியிருக்கிறது என்பதே கதை. வெள்ளையர் பார்ரெல், அரிசோனாவின் பழங்குடிகளை கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டிருக்கிற அரசு அதிகாரி. ஆனால் நேர்மையில்லாதவர். இவரின் ஊழல்களை அறிகிற க்லானேவைத் தீர்த்துக்கட்ட அவர் பழங்குடிகளுக்கு நீரில் விஷம் கலந்தார். நல்ல மாடுகளை தான் எடுத்துக்கொண்டு நோயுற்ற மாடுகளை அரசு கொட்டிலில சேர்த்தார். இதற்கும் புரட்சிக் குரல் கொடுக்கும் க்லானேவை காரணமாக்கி அவரின் சகோதரர் ஸெல்காடோவைத் தூண்டிவிட அவர் சல்வா ஜூடுமாவாக மாற கிளைமேக்ஸ் என்ன என்பதுதான் கதை. கதை சுபமாக முடிகிறதுதான் என்றபோதும் ஆக்சனுக்குப் பஞ்சமில்லை. கிரே வோல்ஃப், பில்லி ஜோ, சூக் ஆகியோரின் பேச்சுகளும் டயலாக்குகளும் பிரமாதம். கோமாளிமேடை டீம் நன்றி: ஓவியர் பாலமுருகன்