இடுகைகள்

தேசிய தேர்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீனாவின் கல்விச் சாதனை! - கல்வி சீர்திருத்தங்கள்

சீனா, 1978ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் சந்தை பொருளாதார சக்தியாக மாறத் தொடங்கியது. அதுவரை நாடு வெறும் சோசலிச கருத்தியலைக் கொண்டதாக மட்டுமே இருந்தது. முன்னாள் அதிபர் டெங் ஷியோபிங்கின் காலத்தில் கல்வி, மத்திய அரசிடமிருந்து மையப்படுத்தாததாக, தனியார்மயமாக, சந்தைமதிப்பு கொண்டதாக மாறியது. மாவோவின் சீடராக டெங் அறியப்பட்டாலும், காலத்திற்கேற்ப நாட்டை மாற்றவேண்டும் என்ற சீர்திருத்த எண்ணம் கொண்டவர். இன்றும் கூட சீனாவில் அவருக்கு சிலைகளோ, கூறிய மேற்கோள்களோ கூட இல்லை. அதாவது அவற்றை வெளிப்படையாக பார்க்க முடியாது. ஆனாலும் முன்னாள் அதிபர் டெங் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்ற முக்கியமான தலைவர் என்பதை யாரும் மறுப்பதில்லை. சீன அரசு, 1949ஆம் ஆண்டு, வணிக நோக்கம் கொண்ட கல்வி அமைப்புகளை தடை செய்தது. சோசலிச கல்வியை அடிப்படையாக கொண்டு சமூகத்தை வலுவாக்க முயன்றது. மாவோவின் கலாசாரப் புரட்சி காரணமாக சீன மாணவர்கள் பலரும் நாட்டை விட்டு வெளியேறினர். வெளிநாடுகளில் கல்வி பயின்றனர். அரசின் அத்துமீறல் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லாதவர்களுக்கு கல்வி கற்பிக்கவேண்டும் என டெங் நினைத்தார். எனவே, கல்வி சீர்திர...