இடுகைகள்

பழச்சாறு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நீருக்கு மாற்றாக பழச்சாறுகளை குடிக்கலாமா?

படம்
  தண்ணீர் குடிப்பது சலிப்பை ஏற்படுத்துகிறதா? நீரைப் பொறுத்தவரை ஆற்றுத்தண்ணீர், ஆழ்குழாய் தண்ணீர் என வேறுபட்ட சுவை கொண்ட நீரை குடித்திருப்பீர்கள். பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும் அக்வாஃபினா, கைஃண்ட்லி ஆகியவற்றை குடித்தாலும் அதன் பயன் ஒன்றுதான். நீங்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் மயங்கி விழாமல் இருப்பீர்கள். உடலின் வளர்சிதைமாற்ற செயலுக்கு நீர் அவசியம். இதில் உள்ள கணக்கு பற்றி அறிந்திருப்பீர்கள். தினசரி எந்தளவு நீரை குடிப்பது? எட்டு கிளாஸ் குடியுங்கள், மூன்று அல்லது ஐந்து லிட்டர் குடியுங்கள் என்று பலர் வாய்க்கு வந்ததைக் கூறுவார்கள். உண்மையில் உடலுக்கு எந்தளவு நீர் தேவை என்பதை உடல்தான் தீர்மானிக்கும். தேவைப்படும்போது நீர் குடிக்கலாம்.. தவறில்லை. சில மருத்துவ இதழ்கள் சினிமா பிரபலங்களின் டயட் முறைகளை எழுதி மக்களை நிர்பந்தப்படுத்துகிறார்கள். உண்மையில் எது உண்மை, எதைப் பின்பற்றுவது? உடலுக்கு நீர்த்தேவை குறைவாக இருந்தால் தலைவலிக்கும்.,அடுத்து, செரிமான பிரச்னை வரும். உடலின் ரத்த அழுத்தம் குறைந்து   கண்கள் இருண்டு கீழே விழுந்துவிடுவீர்கள். மேற்சொன்னது உடனே நடக்கும் விளைவுகள். நீண்டகால அடிப

திருச்சியில் மறுசுழற்சி பொருட்களை விற்கும் மருத்துவர் பாரதி பவாதரன்!

படம்
  நாம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களை மறுசுழற்சி செய்வது கடினமானது. பிளாஸ்டிக் பிரஷ்ஷை எடுத்துக்கொள்ளுங்கள். நாம் முதன்முதலில் சிறுவனாக இருந்தபோது என்ன நிறத்திலான பிரஷ்ஷைப் பயன்படுத்தினோம் என்பதை மறந்திருப்போம். ஆனால் அந்த பிரஷ் இன்னும்  மக்கிப்போகாமல் மண்ணுக்குள்தான் இருக்கும். காரணம், அது முழுக்க மட்கிப் போக 400 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.  இதுபோல ஏராளமான தகவல்களை படித்த மருத்துவர் பாரதி, நம்மைப்போல அடுத்த செய்திக்கு போகவில்லை. ஃபார்ம்வில்லே வேதா பிஸ்கெட்டையும் கூட தொடாமல் யோசித்தார். இதன் விளைவாக ஈகோடோபியா என்ற கடையைத் திறந்தார். அதில் மறுசுழற்சி செய்யப்பட்ட பைகள், பொருட்களை விற்று வருகிறார். இவரிடம் மூங்கில் பிரஷ்கள் கிடைக்கின்றன. வீட்டை சுத்தம் செய்ய அல்ல. பற்களை சுத்தம் செய்ய என்பதுதான் இதில் விசேஷம். நாம் என்ன மாதிரியான உலகை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்கிறோம் என்ற கேள்வி எனக்குள் வந்தது. அதனால்தான் நான் இயற்கையை, சூழலை பாதிக்கும் விஷயங்களை நோக்கி நகர்ந்தேன் என்கிறார் பாரதி.  மறுசுழற்சி காகிதம், விதைகளைக் கொண்ட குண்டு ஆகியவற்றையும் விற்கிறார். உணவுப்பொருட்களை வாங்குபவர்களுக்கு ச

பழச்சாறு vs ஸ்மூத்தி Vs கார்பன் பானங்கள் எது சிறந்தது?

படம்
pixabay உடனுக்குடன் பிழியப்பட்ட பழச்சாறு, பழத்திலிருந்து எடுக்கப்பட்ட கான்சென்ட்ரேட் என இரண்டு இருக்கிறது. இவற்றில் எது நல்லது? இரண்டிலும் வித்தியாசம் ஏதுமில்லை. கான்சென்ட்ரேட்டில் கூடுதலாக சர்க்கரை சேர்க்கப்படுகிறது. அதாவது ப்ரக்டோஸ். இது கலோரி அளவைக் கூட்டுகிறது. இது சிறுவர்களின் பற்களை பெருமளவு பாதிக்கிறது. பெப்சி, கோலா இவற்றைவிட பழரசம் சிறப்பானது என நினைப்பீர்கள். ஆனால் பழரசத்தில் சர்க்கரை அளவை குறைத்துக்கொண்டால் மட்டுமே நீரிழிவு போன்ற பிரச்னைகளிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியும். இல்லையெனில் நீரிழிவு பிரச்னை பெரியவர்களுக்கு மட்டுமல்ல ப்ரூட்மிக்ஸ் குடிக்கிற சிறுவர்களுக்கும் வந்துவிட வாய்ப்பு உள்ளது. பழங்கள், காய்கறிகளை கலந்து செய்யும் ஸ்மூத்தி பழச்சாறுகளுக்கு நல்ல மாற்று என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவற்றை கவனமாக தயாரிக்கவேண்டும். ஒவ்வொரு பழங்களுக்கும் உள்ள தன்மையைப் பொறுத்தே அவற்றை ஒன்றாக சேர்க்கவேண்டும். இவற்றைக் குடித்தபின் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். இல்லையெனில் இதிலுள்ள இயற்கையான சர்க்கரையும் கூட பற்களை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. பழச்சாறுகளையோ