இடுகைகள்

மின் சைக்கிள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறந்த கண்டுபிடிப்புகள் 2023!

படம்
  சிறந்த கண்டுபிடிப்புகள் 2023 ட்ரீ டேக்  காட்டுத்தீயால் அழியும் மரங்களை காப்பாற்றுவதற்கான முயற்சி. இதில், ட்ரீ டேக் என்பது ஏஐ, சென்சாரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறது. இதை மரத்தில் பதித்து வைக்க வேண்டும். ஒரு மரத்தின் அடிப்படையான தன்மைகள், நீரின் அளவு, ஒளிச்சேர்க்கை ஆகியவற்றைக் கணிக்கிறது. தகவல்களை சேமிக்கிறது. மரங்கள் பேசும் மொழியை ட்ரீடேக் மொழிபெயர்க்கிறது என்கிறார் ட்ரீடேக் நிறுவனத்தின் இயக்குநர் கிரகாம் ஹைன். உங்கள் வீட்டுத்தோட்டத்தில் உள்ள மரங்கள், செடிகளுக்கும் கூட இதை முயன்று பார்க்கலாம்.  பியானோ தரமான பியானோக்களைத் தயாரிக்கும் ரோலாண்ட் நிறுவனத்திற்கு வயது 50. எனவே, ஸ்பெஷலாக நான்கு பியானோக்களை தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளனர். இதில் இசை ஏற்கெனவே பதிவாகியிருக்கும். 360 டிகிரியில் இசையைக் கேட்கலாம். இதை வைத்து மாணவர்களுக்கு இணையத்தில் பாடம் கூட எடுக்கலாம். வின்டேஜ் தன்மையில் கவனம் ஈர்க்கும் பியானோ. ஆர்க்  ப்ரௌசர்  இணையம் நிறைய மாறிவிட்டது. மாறாதது இணைய உலாவிகள்தான். அதாவது ப்ரௌசர்கள். அதை மாற்றவே ஆர்க் வந்துள்ளது. இதை ஏற்கெனவே டெக் வல்லுநர்கள் பயன்படுத்திவிட்டு ஆகா, ஓகோ

சந்தைக்குப் புதுசு! - காலேஜ் கேம்பஸிற்குள் ஜாலியாக ஓட்ட மின் சைக்கிள்

படம்
    சந்தைக்குப் புதுசு! கோ சைக்கிள் ஜிஎக்ஸ் ஏழு மணிநேரம் சார்ஜ் செய்தால் 65 கி.மீ தூரம் செல்லும் எலக்ட்ரிக் சைக்கிள் இது. காலேஜின், பல்கலைக்கழகத்தின் கேம்பஸிற்குள் ஜாலியாக ஒட்டிச்செல்ல ஏற்ற வண்டி இது. மூன்று ஸ்பீடு செட்டிங்குகள் உள்ளன. மணிக்கு 25 கி.மீ வேகத்தில் விரையலாம். எரிபொருளின் அளவை எளிதாக மானிட்டர் செய்துகொள்ளலாம். வேகம் பற்றிய தகவலையும் எளிதாக சரிபார்த்து ஓட்டலாம். விலை 3299 டாலர்கள் சிப்போலா ஒன் வீட்டுச்சாவி, போன் தொலைந்துவிட்டால் இந்த ஆப் மூலம் தேடிக் கண்டுபிடித்துவிடலாம். இதற்கென நாம் செல்லும் அனைத்து இடங்களையும் மானிட்டர் செய்து கண்காணிக்கிறது. எனவே, சாவியை தொலைத்தாலும் சிப்போலோ ஒன்னை உசுப்பி கண்டுபிடித்துவிடலாம். எனவே சர்வ அஜாக்கிரதையாக இருங்கள். தப்பில்லை. விலை  27. 50 டாலர்கள். லாசி மொபைல் டிரைவ் எப்போது வேலை செய்தாலும் நாம் அடிக்கடி மறப்பது, அதனை சரியானபடி பேக்அப் செய்து வைப்பதுதான். அதைத்தான் செய்ய மொபைல் டிரைவ் செய்ய உதவுகிறது. ஐந்து டெராபைட் அளவுக்கு தகவல்களை சேகரித்து வைக்கலாம். 5 லட்சம் புகைப்படங்கள், 165 மணிநேரங்கள் வீடியோக்களையும் சேர்த்துக்கொள்ளலாம். விலை 94.99