இடுகைகள்

டிஸ்தா சென் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சமூக அக்கறையுடன் உணர்வுகளை குழைத்து விளம்பரங்களை உருவாக்கியவர்!- டிஸ்தா சென்

படம்
  டிஸ்தா சென் டிஸ்தா சென் வொண்டர்மன் தாம்சன், தெற்காசியத் தலைவர். ஆசியாவில் முக்கியமான விளம்பர ஆளுமைகள் பத்து பேர்களை சொல்லச்சொன்னால் டிஸ்தா சென்னின் பெயர் மிஸ் ஆகாது. அந்தளவு பல்வேறு கலாசாரங்களைச் சேர்ந்தவர்களையும் தனது விளம்பர படங்களால் ஒன்றாக இணைக்கும் வித்தை தெரிந்தவர். வொயிட்லைட் எனும் விளம்பர நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின்னாளில் வொண்டர்மன் தாம்சன் நிறுவனத்திற்கு இடம் பெயர்ந்தார். இவர் வெறும் வணிக விளம்பரம் என்றில்லாமல் அதில் மனிதர்களையும் சமூகத்தின் முக்கியமான பிர்சனைகளையும் இணைத்து சொல்லுவார். அதுதான் இவரின் பாணி கூட. ஆங்கில இலக்கிய பட்டம் பெற்றவர் டிஸ்தா சென். லக்ஸ் சோப்பிற்காக சோப் வித் லம்ப் என்ற விளம்பரத்தை உருவாக்கினார். பெண்கள் தங்கள் குளியலறையில் மார்பகங்களைத் தாங்களே சோதித்து அதில் மாறுதல் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்கவேண்டும். இதைத்தான் யுனிலீவருக்காக புற்றுநோய் மையத்துடன் இணைந்து செய்தார். இந்த சமூக கரிசனை லக்ஸ் சோப்பின் வியாபாரத்தையும், அதன் செயல்பாட்டையும், சமூக அக்கறையையும் பெரிதும் மாற்றியது. இதன் விளைவாக பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு ஜூரியாக செயல்படும் வாய்ப்ப