இடுகைகள்

ஹங்கேரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புகழ்வெளிச்சம் எப்போதும் ஆபத்தானது! - எர்னோ ரூபிக், க்யூப் கண்டுபிடிப்பாளர்

படம்
  ”க்யூபை எப்படி உருவாக்கினேன் என்றே எனக்கு தெரியாது!” ரூபிக் க்யூபைப் பயன்படுத்தி பிறரோடு சவால் விட்டு விளையாடிய அனுபவம் பலருக்கும் இருக்கலாம். இந்த விளையாட்டுப் பொருளை 1974ஆம் ஆண்டு, ஹங்கேரி நாட்டின் புதாபெஸ்ட் நகரைச் சேர்ந்த கட்டுமானத்துறை பேராசிரியரான  எர்னோ ரூபிக் உருவாக்கினார்.   1944 ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி புதாபெஸ்டில் பிறந்தார் எர்னோ ரூபிக். சிறுவயதில் ஓவியம் வரைவது, சிற்பங்கள் செதுக்குவது ஆகியவற்றில் பேரார்வம் கொண்டிருந்தார். அதனால், புதாபெஸ்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை படிப்பை தேர்ந்தெடுத்து படித்தார்.  1974ஆம் ஆண்டு 29 ஆம் வயதில், மரத்தில் செய்த எட்டு க்யூப் வடிவங்களை ஒன்றாக்கி தற்போதைய க்யூப் வடிவத்தை உருவாக்கினார். அதற்கு வண்ணங்களைத் தீட்டி பரிசோதனை செய்து பார்த்தார். க்யூப்பை உருவாக்கியபோது தனது அம்மாவின் வீட்டில் இருந்தார். ஜியோமெட்ரிக் வடிவங்களின் மீது ஆர்வம் கொண்ட எர்னோ ரூபிக், பல்வேறு வடிவங்களில் க்யூபை செய்து பார்த்தார். ஆனால் எதுவுமே சரியாக வரவில்லை. பிறகுதான், உருவாக்கிய அனைத்தையும் இணைத்துப் பார்த்தால், அனைத்தும் ஒன்றுக்குள் ஒன்றாக இயந்திரத்தில்

மனைவியை கொன்று பீப்பாயில் ஊற வைத்த பாசக்கார கணவர் - பெலாகிஸ்

படம்
மென்டல் ஃபிளாஸ் அசுரகுலம் - இன்டர்நேஷனல் பெலா கிஸ் ஹங்கேரியின் சின்கோட்டா என்ற நகரில் டின்களை தயாரித்து விற்று வந்தார் பெலா கிஸ். வயது 37. திருமணமாகாத வாலிபர். ஆளும் பார்க்க உயரமாக திடகாத்திரமாக இருந்தார். அதனால் அடிக்கடி அவர் வீட்டில் நடக்கும் பார்ட்டியில் பெண்கள் அவரோடு நடனமாட போட்டியிட்டனர். இதனால் ஒரு பார்ட்டியில் அவரோடு நடனமாடிய பெண் மறுமுறை நடனமாட மாட்டார். அந்தளவு பெண்களின் ஈர்ப்பு இருந்த்து. அவர் தன் தொழில் மூலம் கிடைத்த பணத்தில் பெரிய வீட்டை வாங்கி வசித்து வந்தார். அவருக்கு வீடு தொடர்பான பணிகளை திருமதி ஜாகுபீ செய்துகொடுத்து வந்தார். நேர்மையான பணியாள் என்றால் இவரைத்தான் சொல்லவேண்டும். கிஸ் என்ன சொன்னாரோ அதை அப்படி சாலையில் வெள்ளைக்கோடு மீது மாறாமல் வண்டி ஓட்டுவது போல கடைப்பிடித்தார். கிஸ் வெளியூருகளுக்கு செல்லும்போது வீட்டைப் பராமரிப்பதும் அவள்தான். 1914ஆம் ஆண்டில் உலகப்போர் காலகட்டம். ஹங்கேரி ராணுத்திற்கான அழைப்பு வர அதனை ஏற்றார். வீட்டைப் பார்த்துக்கொள்ள திருமதி. ஜாகுபீயிடம் கேட்டுக் கொண்டார். போர் முடிந்தபிறகும் கிஸ் வரவில்லை. உடனே ஊருக்குள் செர்பியாவிலே