இடுகைகள்

உருது லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேசியமொழியாக இந்தியே இருக்க முடியும்! - நமது மொழிப்பிரச்சினை - காந்தி- அ.லெ.நடராஜன்

படம்
  காந்தி நமது மொழிப்பிரச்னை காந்தி தமிழில்  அ.லெ. நடராஜன் இந்த நூல் காந்தி எழுதிய பல்வேறு கட்டுரைகள், பேசிய சொற்பொழிவுகளிலிருந்து பெறப்பட்டு கோவையாக்கி நூலாக்கப்பட்டுள்ளது. நூலின் தமிழாக்கம் சிறப்பாக உள்ளதை குறிப்பிட்டு கூறவேண்டும்.  பனியா சாதியில் பிறந்தவர் காந்தி. அவர், தன் வாழ்பனுவத்தில்  சமூகத்தில் உள்ள மக்களைப் பற்றி இறுதி வரை கற்றுக்கொண்டே இருந்தார். இந்த வகையில் அவர் தன் வாழ்வின் இறுதிக் காலகட்டம் வரை பல்வேறு விஷயங்களைக் கற்றும் கற்றதை பரிட்சித்தும் பார்த்து வந்தார்.  இந்த நூலில் முழுக்க மொழிகளைப் பற்றிப் பேசுகிறார். இந்தியாவின் தேசிய மொழியாக ஒரே மொழி. அது எதுவென்பதுதான் விஷயமே. இந்த வகையில் நாடு முழுவதையும் ஒருங்கிணைக்க இந்தி தான் உதவும் என தனது தரப்பு கருத்தை கூறுகிறார். ஒருகட்டத்தில் பிற மொழிகளைக் கூட தேவநாகரி லிபியில் எழுதிப்பழகலாம். இதனால் தாய்மொழி அழிந்துவிடாது என தன் கருத்தை கூறுகிறார்.  நூலில் முக்கியமான மொழிகளாக இந்தி வட்டாரத்தில் பேசப்படும் இந்தி, உருது ஆகிய மொழிகளில் எது சிறந்தது என வாதிடும் போக்கிலேயே நூல் பெரிதும் பயணிக்கிறது. இந்துஸ்தானி என்பது எந்த மொழியைக் குறிக்