இடுகைகள்

புலிகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புலிகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கலாமா? - பதில் சொல்லும் ஆவணப்படம்

படம்
  பொதுவாக வன விலங்குகளை யாரும் சங்கிலி போட்டு கட்டி செல்லப் பிராணிகளாக்க முடியாது. ஓநாய் குலச்சின்னம் நாவலில் ஒரு மாணவர் அப்படி செய்து இறுதியில் தோற்றுப்போவார்.  கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்தால் விரியும் படம் எட்டு நிமிடங்கள் ஓடும். அதன் மையக்கதையே, புலிகள் அழிவும். அதனை சிலர் குட்டியாக இருக்கும்போதே எடுத்து செல்லப்பிராணியாக வளர்ப்பதும் தவறு என்பதைப் பற்றியதுதான்.  அமெரிக்காவில் மட்டுமல்லாது  உலகம் முழுக்கவுமே புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போது தோராயமாக 3900 புலிகள் மட்டுமே உயிருடன் உள்ளன. மீதியுள்ள புலிகள் எங்கே போயின என்பதை நாம் நமது மனத்திடம்தான் கேட்டுப்பார்க்க வேண்டும். பெரும்பாலான புலிகள் வீரிய மாத்திரைகள், சூப் ஆகியவற்றுக்காக பலியாகிவிட்டன.  மீதி நினைவில் மட்டுமே காடுள்ள மிருகமான புலிக்குட்டிகளும் பல பிரபலங்களின் வீட்டில் சங்கிலி போட்டு கட்டி வைக்கப்பட்டுள்ளன. ஆவணப்படத்தில் காட்டப்படும் செல்லபிராணி காட்சிகள் மனதை ரணப்படுத்தக்கூடியது.  ஆவணப்படத்தில் ஏராளமான இயற்கை அமைப்பு சார்ந்த நிபுணர்கள் புலிக்குட்டிகளை செல்லப்பிராணிகளாக வீட்டில் வளர்ப்பது ஏன் தவறு என்று பேசுகிறார்

உறவுகளையும் உணர்ச்சிகளையும் நிலப்பரப்பு வழியாக இணைக்கும் சிறுகதைகள்! - உறவுப்பாலம் - இலங்கை சிறுகதைகள்(சிங்களம், ஆங்கிலம்)

படம்
                    உறவுப்பாலம் இலங்கை சிறுகதைகள் மொழிபெயர்ப்பு கண்ணையன் தட்சிணாமூர்த்தி நேஷனல் புக் டிரஸ்ட் விலை 150 பக்கம் 254 நூலில் மூன்று பகுதிகள் உள்ளன சிங்களச் சிறுகதைகள் , தமிழ் சிறுகதைகள் , ஆங்கிலச் சிறுகதைகள் . இதில் உருப்படியாக இருக்கும் கதைகள் அனைத்தும் சிங்களம் , ஆங்கிலத்தில்தான் உள்ளன என்பதை கவனிப்பது அவசியம் . மொத்த கதைகள் இருபத்தைந்து அதில் , 18 கதைகளை நம்பிக்கையோடு படிக்கலாம் . மோசமில்லை . சிங்களச் சிறுகதைகளில் மறுபடியும் , இன்று என் மகன் வீடு திரும்புகிறான் , அக்கா ஆகிய கதைகள் சிறப்பாக உள்ளன . முதல்கதையான மறுபடியும் எழுத்தாளர் குணதாச அமரசேகர எழுதியது . பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட ஆசிரியை ஒருவர் தனது பள்ளியை சென்று மீண்டும் பார்ப்பதுதான் கதை . இதற்குள் , அங்கு நடைபெறும் பிரச்னைகள் , அதனை இளைஞர்கள் எப்படி பார்க்கிறார்கள் , உணர்ச்சிப்பூர்வமாக பள்ளி என்பதை பார்க்கும் ஆசிரியையின் கோணம் என பல்வேறு உணர்ச்சிகளின் கதம்பமாக கதை ரசிக்க வைக்கிறது . இன்று என் மகன் வீடு வருகிறான் - கருணா பெரைரா எழுதியது . இக்கதையை அங்கு நட