இடுகைகள்

சிவன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிவன் கோவிலை புனரமைக்கும் இரட்டைத் தலை நாகம் - நந்தி ரகசியம் - இந்திரா சௌந்தர்ராஜன்

படம்
நந்தி ரகசியம்  இந்திரா சௌந்தர்ராஜன் மின்னூல்  இறைவனை நம்பினால் இன்னல் நீங்கும். அதற்கு மனித முயற்சியும் சிறிது தேவை என்பதை நூலாசிரியர் கூறுகிறார். கதையும், அதற்கான சம்பவங்களும் வலுவாக இல்லை என்பதே நாவலின் பெரும் பலவீனம்.  நாவலை படிப்பதை விட நூலில் உள்ள கோவில் அமைவிடம், ஏன் கோவில் குறிப்பிட்ட கன்னி மூலையில் அமைக்கப்படுகிறது என்ற தகவல்கள் துணுக்குகளாக வாசிக்க நன்றாக இருக்கின்றன.  ஊர் பெரிய மனிதர் உடையார். அவர் சிந்தாமணி என்ற பெண்ணை உடலுறவுக்கென காதலியாக சேர்த்துக்கொள்கிறார். இதனால் அவரை திருமணம் செய்த மனைவி திரௌபதி கணவனை விட்டு விலகுகிறாள். அதே ஊரில் தனது மனநிலை சரியில்லாத மகனுடன் தங்கியிருக்கிறாள். ஒருநாள் உடையார் இறந்துவிட, காதலி அழுதுக்கொண்டிருக்க ஊர் பெரியவர்களில் ஒருவர் உடையாருக்கு உரிய மனைவி என்பவள் திரௌபதிதான்.அவளைக் கூப்பிட்டால்தானே உடலுக்கான காரியங்களை செய்ய முடியும் என சொல்லுகிறார். இந்த நேரத்தில் சொத்து தொடர்பான வாக்குவாதம் தொடங்குகிறது. உடையாரின் வழக்குரைஞர் வாதிராஜ், அனைத்து சொத்துகளும் காதலியான சிந்தாமணிக்கு சொந்தம் என்று எழுதிய உயிலைக் காட்டுகிறார். கூடவே கட்டாந்தரையாக கிட

கடவுளின் சாபத்தால் நாட்டுக்கு தனியாக சொல்லும் மன்னன் ஒடிஸியஸ் ! ஹோமரின் ஒடிஸி - தமிழில் சிவன்

படம்
  ஹோமரின் ஒடிஸி தமிழில் சிவன் சுருக்கப்பட்ட வடிவம் மொத்த நூலின் பக்கங்களே 111 தான்.  இதாக்கா நாட்டு அரசர் ஒடிஸியஸ் ட்ரோய் போரில் பங்கேற்று வெற்றி பெறுகிறார். அந்த வெற்றிக் களிப்புடன் கடலில் வருகையில் கடவுள் ஒருவரின் மகனுடன் சண்டை போட நேரிடுகிறது. அவர் ஒரு அரக்கன், ஒடிஸியஸின் படை வீரர்கள் தக்காளி தொக்கு போல கொன்று சாப்பிட, ஒடிஸியஸ் அவனது ஒற்றைக் கண்ணை குருடாக்குகிறான். இதனால் கோபம் கொண்டு வன்மத்தோடு ஒடிஸியஸ் மற்றும் அவனது படைவீரர்கள் மீது சாபம் விடப்படுகிறது. அதாவது, அவர்கள் தங்கள் சொந்த  நாட்டை சென்று சேர மாட்டார்கள் என. இதன் அர்த்தம் சொந்த நாட்டுக்கு செல்லும் வழியிலே வீரர்கள் அழிந்துபோவார்கள் என.  இந்த சாபத்தை சக கடவுளான ஸியூஸ் கூட மாற்றமுடியாது. ஏனெனில் சாபம் கொடுத்தது கண் குருடான பையனின் அப்பா, வேறு யாருமில்லை. ஸியூஸின் தம்பி தான். அவரும் கடவுள் என்பதால் தன் பக்தன் ஒடிஸியை காக்க தனது மகள் ஆதீனி தேவியை அனுப்பி வைக்கிறார் ஸியூஸ்.  நூல் முழுக்க ஒடிஸியஸும், ஆதீனிதேவியும் தான் நிறைந்திருக்கிறார்கள். ஒடிஸியஸ் எப்போது தடுமாறினாலும் அவனுக்கு உதவிகளை நிரம்பச்செய்து சாபத்தை தடுக்காமலும் அதேசம

சூரியவம்சிகளை அழிக்க பாசுபாஸ்திரத்தை ஏவும் சிவன்! - வாயுபுத்திரர் வாக்கு- அமிஷ் திரிபாதி

படம்
  சிவா முத்தொகுதி வாயு புத்திரர் வாக்கு அமிஷ் திரிபாதி வெஸ்ட்லேண்ட் முதல் இரு பாகங்களில்... இதுவரை..... குணாக்களின் தலைவரான சிவன், நீலகண்டர் என அடையாளம் காணப்படுகிறார். அவரை அடையாளம் கண்ட சூரிய வம்சிகள் தங்களுக்கு ஏற்ப அவரை மூளைச்சலவை செய்கின்றனர். இதனால் சோமரஸம் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து சந்திரவம்சிகளால் உருவானது என நம்புகிறார். இதனால் போர் நேரிடுகிறது. இதில் சந்திரவம்சிகள் தோற்றுப்போகின்றனர் அயோத்யாவின் ஸ்வத்பீட மன்னர் திலீபர், தோற்றுப்போனாலும் அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் சூரியவம்சிகள் பக்கம் நீலகண்டர் இருப்பது அவரை நிலைகுலைய வைக்கிறது. உண்மையில் நீலகண்டர்  சூரியவம்சி மற்றும் சந்திரவம்சிகளுக்கு பொதுவான ஆளுமை, கடவுள். இதை நீலகண்டர் உணர வாசுதேவர்கள் உழைக்கிறார்கள். டெலிபதி மூலம் அவரிடம் தொடர்புகொண்டு மனதில் எழும் கேள்விகளுக்கு பதில் சொல்லுகிறார்கள்.  சிவனுக்கு இயல்பிலேயே டெலிபதி திறன் உள்ளது. ஆனால் அதனை செயல்படுத்த சற்று உயர்ந்த இடத்திலுள்ள கோவில்களுக்கு செல்லவேண்டியுள்ளது. முதல்பாகத்தில் சிவன் நீலகண்டராக மாறுகிறார். தேவகிரி செல்கிறார். சூரியவம்சி மன்னரான

தனித்தமிழை வளர்க்க தன்னை அர்ப்பணித்த தமிழ் அறிஞர்! - மறைமலையடிகள் கடிதங்கள்

படம்
  மறைமலையடிகள் படம் - புதிய தலைமுறை மறைமலையடிகளின் கடிதங்கள் தமிழ் மின்னணு நூலகம் மறைமலையடிகள், தமிழ்த்தொண்டு ஆற்றியவர். தனித்தமிழில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். சொற்பொழிவுகளையும் ஆற்றியவர்.  அவர் இந்த நூலில் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக பல்வேறு கடிதங்களை எழுதியுள்ளார். இதில் அவரே முந்தைய பக்கங்களில் குறிப்பொன்றை குறிப்பிடுகிறார். அஞ்சலட்டையில் ஆங்கிலத்திலும், இன்லேண்ட் தாளில் தமிழிலும் எழுதுவேன் என்று. எதற்காக இந்த விதி என்று புரியவில்லை.  அவரது காலத்தில் அவருக்கான சில நெறிமுறைகளோடு வாழ்ந்திருக்கிறார் என்று நாம் புரிந்துகொள்ளலாம்.  1920 தொடங்கி 1950 ஆம் ஆண்டு வரையில் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. இவை முறையாக ஆண்டு கணக்கில் தொகுக்கப்படவில்லை. எனவே நடைபெறும் சம்பவங்கள் தாறுமாறாக இருக்கும் என்பதால் வாசகர்களே மனதில் தொகுத்துப் பார்த்து புரிந்துகொண்டு சிவனை  மனதில் நினைத்து வாசிக்க வேண்டியதுதான்.  கடிதங்கள் குறிப்பிட்ட நபர்களுக்கு எழுதப்படுபவைதான். அதனை நூலாக தொகுக்கும்போது குறிப்பிட்ட நபரின் பெயரைக்கூட எடுத்துவிட்டால் அதனை வாசிப்பவர்கள் எப்படி பொருந்திப் பார்ப்பார்கள் என்று புரியவில்லை. இந்த

நிழல் இல்லாத பைசாசிகம்! - கோட்டயம் புஷ்பநாத்

படம்
நிழல் இல்லாத மனிதன் கோட்டயம் புஷ்பநாத் தமிழில் -  சிவன் கேரளத்திலுள்ள பிரபலமான மருத்துவமனை சிட்டி ஹாஸ்பிடல்ஸ். இதன் உரிமையாளருக்கு காசும் தேவை அதோடு அதன் மூலம் நிறைய புகழும் தேவை. இதற்காக மருத்துவச்சேவை செய்துவருகிறார். கூட்டம் அள்ளுகிறது.  கூடுதலாக இதய மாற்று மருத்துவம் சார்ந்த படிப்புக்கு லூயிஸ் என்பவரை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்கிறார். இவருக்கு தன் பெண நான்சியைக் கட்டிக்கொடுத்து தன் சொத்தையும் மருத்துவத் தொழிலையும் நடத்தும் எண்ணம் அவருக்கு.  அப்போதுவரை மருத்துவமனையில் நிர்வாக இயக்குநராக இருப்பவர் ஸ்டீபன். அவருக்கும் ஷைனி என்ற நர்ஸ் ஒருவருக்கும் கசமுசா என மருத்துவமனை கிசுகிசுக்கும் அளவு நெருக்கம் செல்கிறது. ஆனால் கல்யாணம் செய்தால் வேலை போய்விடும். மருத்துவமனை உரிமையாளர் நர்ஸ்களை அழகு என்ற காரணத்தை வைத்து மட்டுமே தேர்ந்தெடுக்கிறார்.  கல்யாணம் செய்தால் வேலையில் கவனமாக இருக்கமாட்டார்கள் என்பதால், ஆன்டிகளுக்கு அங்கே இடமில்லை என்று கூறிவிட்டார். இதனால் ஜோடிகள் என்ன செய்வது என்றபோதுதான் லூயிஸ் உள்ளே நுழைகிறார். லூயிஸ் உள்ளே நுழைந்த பிறகு, அங்கு நடக்கும் ஆபத

சிவன் ஆடும் தாண்டவம்! - கோட்டயம் புஷ்பநாத் ஸ்பெஷல்!

படம்
தாண்டவம் கோட்டயம் புஷ்பநாத் தமிழில் - சிவன் ஹரி கிருஷ்ணன், நம்பூதிரி குடும்பத்தைச் சேர்ந்தவன். அவனது அப்பா காசிக்கு போகும்முன்பு கொடுத்த ஓலைச்சுவடிகளை வாசிக்கிறான். அதில் எழிமலைக்காவு கோவில் பற்றி தகவல்கள் இருக்கின்றன. அங்கு போகவேண்டும் என்கிற எண்ணம் தீவிரமாகிறது. அந்த ஊருக்குச் சென்றால் தங்குமிடம் கறையான்கள் அரித்துக் கிடக்கிறது. அங்கு சென்று மோகினிகளோடு சேர்ந்து துர் மந்திரவாதிகளோடு போரிட்டு தேவியை வெளியே கொண்டு வருவதுதான். கதை. ஸ்பெஷல் என்ன? கோபிகா, ஸ்ரீதேவிக்குட்டி, நாகவதி, விஷ்ணுப்பிரியா ஆகியோர்தான் ஹரி கிருஷ்ணனின் இன்ஸ்டன்ட் காதலிகள். இதில் நாகவதிக்கு இடம் அதிகம். நாகவதியும் பெண் கிடையாது என்பது ட்விஸ்ட். புஷ்பநாத் பொதுவாக சர்ச், லூசிபர் என்றால் கதையை மேலே நகர்த்த தடுமாறுகிறார். ஆனால் தறவாடு, கோவிலகம், பகவதி என்றால் கையில் கூடுதல் பலம் வருகிறது. மோகினிகள், பைசாச சக்திகள், கருடன், யட்சினி, தேவி ஏராளமான கதாபாத்திரங்களை உருவாக்கி பரவசத்தைத் தருகிறார். இதில் ஹரிக்கு வில்லன்கள் அதிகம். அதேசமயம் ஹரி தன் செய்யும் உதவிக்கு பரிகாரமாக மோகினிகளின் பாலைப்பூ, தாமரைப்பூ

அதிரவைக்கும் பழிக்குப்பழி - இது கோட்டயம் புஷ்பநாத் கோட்டா!

படம்
பிரம்ம ரட்சஸ் கோட்டயம் புஷ்பநாத் தமிழில் - சிவன் திருமகள் புத்தக நிலையம் தறவாட்டில் வாழும் ராஜ வம்ச பெண் கார்த்திகா அந்தர்ஜனம். அங்கு பணியாற்றும் வாசுதேவன் தம்பி, அவளை திருமணம் செய்வதாக கூறி சொத்துக்களை ஏமாற்றப் பார்க்கிறான். அதனை தேவி கார்த்திகாவிடம் கூறிவிட, அவள் அவனை வீட்டை விட்டு விரட்டப் பார்க்கிறாள். ஆனால் வாசுதேவன் தன் நண்பர்களுடன் எழுமாற்றூர் அரண்மனைக்குச் சென்று அவளை பலாத்காரம் செய்து கொல்கிறான். அவளது உடலை குளத்தில் மிதக்கவிடுகின்றனர். ஊரே வாசுதேவனின் செல்வாக்குக்கு முன்பு ஒன்றும் செய்யமுடியாமல் பதுங்குகிறது. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு அல்லவா? வாசுதேவன் நல்ல வரும்படியான இடத்தில் கல்யாணம் முடிக்கிறார். அதற்காக காத்திருந்த கார்த்திகா, பிரம்ம ரட்சஸாக எழுந்து வாசுதேவனை பழிவாங்க புதைக்கப்பட்ட இடத்திலிருந்து எழுகிறார். அவர் ஆடும் ரிவென்ஞ் ஆட்டம்தான் பிரம்ம ரட்சஸ். காதல், துரோகம், பேராசை, நிரம்ப காமம் என அனைத்துமே இதில் உண்டு. தன் பழிக்குப்பழி வாங்குவதற்கு திருமேனி ஒருவர் தேவை என கார்த்திகா உணரும்போது அங்கு மாந்த்ரீகம் கற்க வருகிறார் விஜயதேவன். முதலில்

நிலவுக்குச் செல்லும் தீவிரம் ஏன்?

படம்
சந்திரயான் சிறப்பிதழ்! நிலவுக்குச்செல்ல ஏன் இந்த அவசரம்? அமெரிக்கா அப்போலோ 11 விண்கலம் மூலம் நிலவுக்கு சென்று வந்த வரலாற்று நிகழ்ச்சி நடந்து அரைநூற்றாண்டு ஆகிவிட்டது. ஆனால் இன்றும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவுக்குச் செல்ல பேரார்வத்துடன் செயற்பட்டு வருகின்றன. இதற்கு என்ன காரணம்? பூமியைப் போல மற்றொரு மனிதர்கள் வாழும் சூழல் கொண்ட கோளைக் கண்டுபிடிப்பதுதான். இந்தியா நிலவை ஆராய முடிவெடுத்து சந்திரயான் -1 விண்கலனை விண்ணில் செலுத்தியபோது பல்வேறு விமர்சனங்கள் கிளம்பின. ஆனால், நிலவின் பரப்பில் நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததும்தான் விமர்சகர்கள் அமைதியானார்கள்.  சந்திரயான் 1 இல் வட்டப்பாதையைச் சுற்றிவரும் ஆர்பிட்டர் மட்டுமே உண்டு. அமெரிக்கா, ரஷ்யா ஆகியோர் செலவழித்த தொகையில் பாதிக்கும் குறைவாக 386 கோடி ரூபாயை மட்டுமே இந்தியா கொண்டு புதிய கண்டுபிடிப்பை சாதித்தது. சந்திரயான் 2 இல் ஆர்பிட்டர், ரோவர், லேண்டர் ஆகிய சாதனங்களும் இடம்பெற்றுள்ளன. சோவியத் ரஷ்யா 1959ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று லூனா 2 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இதுவே நிலவுக்குச் சென்ற முதல்

அமானுஷ்யத்தை அள்ளிவழங்கும் தேவமோகினி!- கோட்டயம் புஷ்பநாத் ஸ்பெஷல்

படம்
தேவமோகினி கோட்டயம் புஷ்பநாத் தமிழில் சிவன் கேரளத்தின் பழமையான கோவிலகம் அது. நம்பூதிரிகள் வாழ்ந்த இடம். பாழ்பட்டு கிடக்கிறது. அதனை சந்திரமோகன் என்பவர் காசுகொடுத்து வாங்குகிறார். பல்வேறு இடங்களிலுள்ள கோவிலக சிலைகளை கொண்டு வந்து வீட்டில் கண்காட்சி போல அடுக்குகிறார். அப்போது அதன் கொடுமையான விளைவுகள் அவருக்கு தெரியவில்லை. ஆனால் பின்னர், தெரியவரும்போது அவற்றைக் காக்கும் பெரும் பொறுப்பு வந்து சேருகிறது. அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் கதை. முதல் அத்தியாயம் முதலே பரபரப்பு தொடங்கிவிடுகிறது. சந்திரமோகன், அமைதியாக வாழ விரும்புபவர். ஆனால் அங்குள்ள ராஜசேகரன் உள்ளிட்டோருக்கு அவர் புகழ்பெறுவது பிடிக்கவில்லை. எனவே, கிரகப்பிரவேசத்திற்கு அழைப்பிதழ் வழங்காத அவரை அங்கேயே கொல்ல நினைக்கிறார்கள். அந்த திட்டத்தை எளிமையாக தடுக்கிறாள் அங்கு வசிக்கும் தேவ மோகினி. இவள் மட்டுமல்ல அங்கு வசிப்பது. சந்திரமோகனின் உயிரைப் பறிக்கும் வேகம் கொண்ட பைசாச சக்திகளை மிக எளிதாக விலக்கிக் காக்கிறது அங்குள்ள சில சக்திகள். அவை ஏன் அப்படிச் செய்கின்றன? அதன் பின்னாலுள்ள ரகசியங்கள் என படித்தால் கதை முடிந்துவ