இடுகைகள்

சோப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யுனிலீவரை பீதியடையச் செய்த மாமா எர்த் நிறுவனம் ! - ஃபார்ச்சூன் 40/40

படம்
  நடிகை ஷில்பா, நிறுவனர்கள் வருண், கசல், மாமாஎர்த் கசல் ஆலாக் 34 வருண் ஆலாக் 38 மாமா எர்த்   குழந்தைகளுக்கான வேதிப்பொருட்கள் இல்லாத அல்லது அளவில் குறைந்த சோப்புகளை, ஷாம்பூகளை தயாரிப்பதும், சந்தைபடுத்தி வெற்றி பெறுவதும் கடினம். மாமாஎர்த் நிறுவனம், இந்த விஷயத்தில்தான் மகத்தான வெற்றி பெற்று யுனிலீவர் போன்ற பன்னாட்டு நிறுவனத்திற்கே போட்டியாக மாறியுள்ளது. கடந்த ஆண்டில்தான், டவ் பிராண்டில் குழந்தைகளுக்கான சோப்புகள், ஷாம்புகள் அறிமுகமாகி உள்ளன. இந்த பிராண்ட், பல்வேறு உள்நாட்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்களோடு போட்டிபோட்டு விளம்பரம் செய்து வருகிறது. குறிப்பாக, மாமாஎர்த். யுனலீவரின் முதலீட்டாளர் ஒருவர், நிறுவனத்திடம் மாமாஎர்த்தோடு போட்டியிட்டு வெல்ல திட்டங்கள் இருக்கிறதா என வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார். இத்தனைக்கும் மாமாஎர்த் நிறுவனம் தொடங்கி ஏழு ஆண்டுகள்தான் ஆகிறது. 2016ஆம் ஆண்டு ஆறு பொருட்களை விற்றது. இந்த நிறுவனத்தின் பொருட்கள், நாடெங்கும் 50 ஆயிரம் கடைகளில் விற்கப்பட்டு வருகிறது. மொத்த நிறுவன வருவாயில் 35 சதவீதம், மேற்சொன்ன கடைகளிலிருந்து கிடைக்கிறது. ‘’நாங்கள் போட்டியாளர்களைப் பா

ஆயுர்வேதத்தை நவீன வடிவில் பயன்படுத்துவதுதான் என்னுடைய ஐடியா - மீரா குல்கர்னி , ஃபாரஸ்ட் எச்ன்ஷியல்ஸ்

படம்
  மீரா குல்கர்னி ஃபாரஸ்ட் எசன்ஷியல்ஸ் மீராவின் நிறுவனமான ஃபாரஸ்ட் எசன்ஸியல்ஸ் 2 லட்ச ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது. இன்று இந்த பிராண்டின் பொருட்கள் இந்தியா முழுக்க 80 கடைகளில் கிடைக்கிறது. 190 ஹோட்டல்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. 120 நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.  ஆர்வம் பிறந்தது எப்படி ? நான் சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் கலைப்படிப்பு படித்தவள். எங்கள் பூர்விகம் உத்தரகாண்ட்டின் டெரி கார்வாய் நகரம். எனக்கு தொடக்கத்தில் இருந்தே அங்கு பிரபலமாக இருந்த ஆயுர்வேத மருத்துவத்தில் ஆர்வம் இருந்தது. எனவே, அதை பயன்படுத்தி சோப்புகள் தயாரிக்க நினைத்தேன்.  எப்படி சாதித்தீர்கள்? எங்கள் பூர்விக ஊரில் இருந்த வைத்தியர்கள், நவீன உயிரி வேதியியலாளர்கள் என பலரையும் ஆலோசனை சொல்லக் கேட்டு த்தான் சோப்புகளை தயாரிக்க தொடங்கினேன். இதில் பயன்படுத்தும் எண்ணெய்கள் அனைத்துமே குளிர்வான முறையில் ஆட்டி எடுத்தவை. இதனால் ஆயுர்வேத தன்மை நாங்கள் செய்யும் பொருட்களில் இருக்கும். அவை மாறாது.  தொழிலாக மாறிய மனதிற்கு பிடித்த விஷயம் என்று கூறலாமா? உண்மைதான். நீங்கள் கூறியபடியே வைத்துக்கொள்ளலாம். நாங்கள் முதலில் ப

உலகை மாற்றிய மனிதர்களின் முக்கியமான கண்டுபிடிப்புகள்! - கண்ணாடி, பசை, மேப், சோப், சக்கரம்

படம்
        pixabay             சிறந்த கண்டுபிடிப்புகள் அடிப்படைக் கருவிகள் 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு… ஆதிகாலத்தில் மனிதர்கள் கற்களை கூர்மையாக்கி கருவிகளாக பயன்படுத்தினர். இந்த கண்டுபிடிப்பு வேட்டையாடுதல், விலங்குகளை தோல்களை உரிப்பது ஆகிய வேலைகளை எளிமையாக்கின. கற்கருவிகளை கூர்மையாக்குவதற்கான முறைகளையும் மனிதர்கள் மெல்ல கண்டுபிடித்தது மனிதர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய புரட்சி என்றே கூறவேண்டும்.   வரைபடங்கள் 6500 கி.பி இன்று சாப்பிடசெல்ல, மளிகைக்கடையில் பொருட்கள் வாங்க, பார்மசியைத் தேட என  அனைத்துக்கும் கூகுள் மேப் ஆப் உள்ளது. ஆனால் அன்று வரைபடங்களே கிடையாது. அந்த நிலையை யோசித்து பாருங்கள் எப்படி இருக்கும் என்று. கி.பி 6500 ஆண்டுகளாக மனிதர்கள் வரைபடங்களே இல்லாமல்தான் வாழ்ந்து வந்தார்கள். தொன்மையான பாபிலோனியாவில்தான் வரைபடங்கள் முதன்முதலில் உருவாயின. இதற்கு உதாரணமாக துருக்கியில் தற்போது அறியப்பட்டுள்ள கடல்ஹோயுக் எனும் சுவர் வரைபடங்களை சான்றாக பார்க்கலாம். இப்படம் நகரம் அதைச்சுற்றியுள்ள பகுதிகளை சிறப்பாக காட்சிபடுத்தியிருந்தது. பசை கி.பி 4000 இன்று பெவிஸ்டிக், க்ளூஸ்டிக், உள்ளூர் டிய