இடுகைகள்

நாயகர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பறவையால் அழகாகிறது வானம் மின்னூலின் தரவிறக்க முகவரி இதோ......

படம்
                          பறவையால் அழகாகிறது வானம் என்ற இந்த நூல் கொரோனா காலத்தில் தளர்வுறாது போராடிய சில மனிதர்களைப் பற்றி பேசுகிறது. சமூகத்திற்கு உழைக்கும் மனிதர்கள் எப்போதும்  ஆச்சரியகரமானவர்கள்தான். பிறருக்கான நலன் பாராட்டுவது என்பது தன்னைத்தானே தியாகம் செய்வதற்கு ஒப்பானது. அதில் பாராட்டுகள், அங்கீகாரத்தை விட விமர்சனங்களே அதிகம். அதையும் தாண்டி உயிரைக்கூட பணயம் வைத்து சுயலாபத்தை தள்ளி வைத்து போராடிய சில மனிதர்களைப்பற்றிய குறிப்புகளே இவை.    நூலின் தலைப்பு கொடுத்து உதவியவர் குங்குமத்தின் பொறுப்பாசிரியராக பணியாற்றி தற்போது புதிய பணியிடத்திற்கு சென்றுள்ள திரு. நா. கதிர்வேலன் அவர்கள். அவரின் எழுத்து இந்நூலை எழுதும்போது பெரும் உதவியாக இருந்து என்னை ஊக்குவித்தது.   இவற்றை நீங்கள் கீழ்க்கண்டட வலைத்தளத்தில் தரவிறக்கிக் கொள்ளலாம்.    பீடிஎப் கோப்பு https://www.mediafire.com/file/9gckwypc8sa2emj/corona_warrior.pdf/file  இபப் கோப்பு  https://www.mediafire.com/file/5ns19quf423rj9o/corona_warrior1.epub/file குறிப்பு  மேற்சொன்ன நூலை ஒருவர் தனது வலைத்தளத்தில் பதிப்பிப்பது அவரது சொந்த பொறுப்பு ஆகு

கொரோனாவை தீரத்துடன் எதிர்த்த வீரர்கள்!

படம்
          காவல்துறை உங்கள் நண்பன் ! நிஷா சாவன் காவல்துறை துணை ஆய்வாளர் மும்பை புனேவிலுள்ள கிராமத்தை சேர்ந்தவர் நிஷா சவான் . இவர் , வாசி எனுமிடத்தில் தங்கியிருந்து கேர்வாடி காவல்நிலையத்திற்கு வந்து துணை ஆய்வாளராக பணிசெய்துகொண்டிருந்தார் . ஒருநாள் கணவரால் வன்முறையாக தாக்கப்பட்ட பெண்ணின் புகாரைப் பதிவு செய்துகொண்டிருந்தார் . புகார் கொடுத்த பெண் மாஸ்க் அணியவில்லை . அதை அப்போது பெரிதாக நிஷா எடுத்துக்கொள்ளவில்லை . ஆனால் சில நாட்களில் புகார் கொடுத்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு என உறுதியானது . அடுத்தடுத்த நாட்களில் நிஷாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . ஆனால் இவற்றை தனது பெற்றோருக்கு அவர் கூறவில்லை . பதினெட்டு நாட்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு சென்று வந்திருக்கிறார் . நோயிலிருந்து குணமாகி வந்த நிஷா , காலை எட்டு மணி முதல் மறுநாள் அதிகாலை இரண்டு மணி வரை டூட்டி பார்த்துவிட்டு வீடு திரும்பியுள்ளார் . இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் புனேவிலிருந்து உத்தரப்பிரத்தேசம் , ராஜஸ்தானுக்கு ரயில் , பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர் . அதற்கு முன்னர் அவர்கள் பத்து பேர்களை குழுவாக ப

ஐரோப்பாவில் காமிக்ஸ் விழா! - களைகட்டும் காமிக்ஸ் புத்தக நிறுவனங்கள்!

படம்
தெற்கு ஐரோப்பாவில் காமிக்ஸ் திருவிழா தொடங்கியுள்ளது.அங்கு உள்ள இத்தாலி காமிக்ஸ் ஆலன் ஃபோர்டு, செர்பியாவிலுள்ள இதழ் ஸ்ட்ரிபோட்டேகா, யூகோஸ்லேவ் ஆஸ்ட்ரிக்ஸ் டிகன் ஆகிய பதிப்பகங்கள் காமிக்ஸ் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளன. ஆலன் ஃபோர்டு என்ற காமிக்ஸ் 1969ஆம் ஆண்டு உருவானது. இதனை எழுத்தாளர் லூசினோ சாச்சி உருவாக்கினர். இவரின் புனைபெயர் மேக்ஸ் பங்கர். இவரின் எழுத்துக்கு உயிர் கொடுத்தவர் ஓவியர் ராபர்ட் ரவியாலோ. இருவரின் பங்களிப்பில் காமிக்ஸ் இதழ் மே 2019 அன்று நூற்றாண்டு இதழை கொண்டு வந்துவிட்டது. ஆலன் ஃபோர்டு என்பது துப்பறியும் கதையாகும். இந்த வரிசையில் 27 வது கதையில்தான் ஆலனுக்கு சரியான வில்லனாக சூப்பர்யூக் என்ற கதாபாத்திரம் அறிமுகமானது. ராபின்ஹூட் பற்றி உங்களுக்குத் தெரியும். அவருக்கு எதிராக இந்த கதாபாத்திரம் இருக்கும். இந்த காமிக்ஸ்கள் பிரான்ஸ், டென்மார்க், பிரேசில் ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதியாகி விற்கப்பட்டன. உள்நாட்டிலும் சிறப்பான விற்பனையைக் கொண்டிருந்த காமிக்ஸ் இது. யூகோஸ்லேவியால் உள்ள ஜேஸ்னிக் என்ற நாளிதழில் வெளியாகி புகழ்பெற்றது. இந்த தொடரை நேனாட் பிரிக்சி என்ற ஆசிரியர் மொழ