இடுகைகள்

யுபிஐ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் திட்டங்கள், அதன் பயன்கள்!

படம்
  மத்திய அரசு டிஜிட்டல் முறையில் பல்வேறு திட்டங்களை உருவாக்கி அதன் வழியாக செயல்படத்தொடங்கியிருக்கிறது. அரசு சேவைகள் பலவும் இன்று இணையம் வழியாக கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன. அவை தொடர்பான புள்ளிவிவர டேட்டா ஒன்றைப் பார்ப்போம்.  மொத்தமுள்ள 130 கோடி மக்களில் ஆதார் கார்டு பெற்ற மக்களின் எண்ணிக்கை  123 கோடி இணையம் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை  56 கோடி  ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை  44.6 கோடி  புதிய தொழில்நுட்ப திறன்களைப் பெற்றுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை  2,80,000 2021ஆம் ஆண்டு பல்வேறு டிஜிட்டல் சேவைகளை வழங்கிய வகையில் கிடைத்த வருமானம் 5 மடங்கு அதிகம். வளர்ச்சி வேகம் 28-30 சதவீதம்.  இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் ஐ.டி, பிபிஓ பகுதி ஊழியர்களின் பங்கு 8 சதவீதம் 2019 - 2021 ஆம் ஆண்டு டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ள அளவு 37 சதவீதம் தற்போதைய நிதித்துறை மதிப்பு 31 பில்லியன். 2025ஆம் ஆண்டு நிதித்துறை வளரும் என மதிப்பிடப்பட்டுள்ள அளவு 150 பில்லியன். அடுத்த ஆண்டு உயரவிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள மதிப்பு 138 பில்லியன்.  யுபிஐ வசதியை அறிமுக்ப்படுத்தியு

யுபிஐ ஏற்படுத்தும் அதிவேக பிரிவினை! - சாதகங்களும் பாதகங்களும்

படம்
  யுபிஐ ஏற்படுத்தும் பிரிவினை! உங்கள் போன்தான் இனி வாலட்டாக இருக்கப் போகிறது என பில்கேட்ஸ் 1996ஆம் ஆண்டு சொன்னார். அப்போது அவர் அப்படி சொன்னது பலருக்கும் புரியாமல் இருந்தாலும் இப்போது நாம் அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. இன்று போன்பே, பேடிஎம், வங்கி ஆப்களில் வாலட்டில் பணம் வைத்து இணையத்தில் பொருட்களை வாங்கும் நிலைக்கு முன்னேறியிருக்கிறோம்.  பூம்பூம் மாட்டிற்கான தொகையை கூட யுபிஐயில் கொடுக்கலாம் என்றளவுக்கு நிலை மாறியதை, சிலர் பெருமையாக பேசுகிறார்கள். இடதுசாரிகள் பிச்சை எடுப்பதை நேரடியாக எடுத்தால் என்ன டிஜிட்டலாக எடுத்தால் என்ன என்று விமர்சிக்கிறார்கள். முதலில் சொன்னதை விட இரண்டாவது கேள்வியில் சற்று பொருள் உள்ளது.  யுபிஐ பிற வசதிகளை விட வேகமாக பணக்கார ர்கள் ஏழைகள் ஆகியோருக்கு இடையில் பாகுபாட்டை ஏற்படுத்தியுள்ளது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், செக்கை ஒருவர் வங்கிக்கு சென்று மாற்றுவது கடினமானது. வரிசையில் நிற்கவேண்டும். டோக்கன் போடுவது இதில் முக்கியமான அம்சம். இப்படி மாறும் பணம் சரியாக கணக்கில் வந்து விழ பதினைந்து நாட்கள் தேவை. இதில் வங்கி விடுமுறைகள் வந்தால் என்ன செய்வது? பொறு

உலகை மாற்றும் 2020 தொழில்நுட்பங்கள் இவைதான்!

படம்
pixabay உலகம் நொடிக்கு நொடி மாறி வருகிறது. தலைமுறையாக செய்து வந்த தொழில்கள் இன்று இழுத்து மூடப்படுகின்றன. பெரும்பாலான தொழில்கள் இணையம் சார்ந்து இயங்கத் தொடங்கியிருக்கின்றன. பல்வேறு தொழிற்கூடங்களில் ஆட்டோமேஷன் நுட்பம் இயக்கப்படத் தொடங்கிவிட்டார்கள். செயற்கை நுண்ணறிவும் வேகம் கொள்ளத் தொடங்கி உள்ளது., இதனால் வேலை இழப்பு அபாயமும் ஏற்படத் தொடங்கியுள்ளது. புத்தாண்டில் என்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம். மிக்ஸ்டு ரியாலிட்டி பிளேடு ரன்னர் படத்தில் ஏஜண்ட் கே, தன் செயற்கை நுண்ணறிவுத்தோழன் ஜோய் உடன் பேசுவது போல காட்சி அமைத்திருப்பார்கள். நிஜமும் அதுதான். தற்போது டிவிகளில் கால்பந்து, கிரிக்கெட் போன்றவற்றை பாப்கார்ன் கொரித்தபடி பார்க்கிறோம். அடுத்த வரவிருக்கும் ஆண்டுகளில், விஆர் ஹெட்செட்டில் அதே விளையாட்டை நாமும் விளையாடியபடி இருப்போம். சூழல் அந்தளவு நெருங்கிவிட்டது. மும்பையைச் சேர்ந்த டெசராக்ட் என்ற மிக்ஸ்டு ரியாலிட்டு தொழில்நுட்ப கம்பெனியை ஜியோ நிறுவனம் வாங்கியுள்ளது இதையே காட்டுகிறது. இத்துறையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த இமேஜினேட் என்ற நிறுவனமும் சிறப்பான செயல்பாடுகளைக் கொண்டுள்ளத