இடுகைகள்

விநோதரசமஞ்சரி பிட்ஸ்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வீக் எண்ட் பிட்ஸ்: கிரகாம்பெல் உச்சரித்த முதல் வார்த்தை

படம்
பிட்ஸ் ! சிலந்தி தன் வலையை தானே விழுங்கி பின்னர் வலையை ரீசைக்கிள் செய்து கட்டுகிறது . முதல் உலகப்போரில் (1914-18) ராணுவ வீரர்களுக்கு டூநட் வழங்கிய தன்னார்வலர்களை நினைவுகூறும்பொருட்டு தேசிய டூநட் தினம் கொண்டாடப்படுகிறது . 1878 ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் தொலைபேசி சேவையைத் தொடங்கியபோது சொன்ன  முதல் வார்த்தை Ahoy. அமெரிக்காவின் பெயர் காரணத்திற்கு ஆதாரமாக கூறப்படும் Amerigo Vespucci என்பவர் , இத்தாலியைச் சேர்ந்த வியாபாரி . ஐம்பது வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி நூலை எழுத டாக்டர் சியூசிடம் எடிட்டர் பென்னட் செர்ஃப் சவால் விட , டாக்டர் சியூஸ் அதனை ஏற்று எழுதிய நூலின் பெயர் Green Eggs and Ham. 

வீக் எண்ட் பிட்ஸ்! சிங்கராஜா வித் சங்கிலி

படம்
பிட்ஸ் ! நோயாளியின் நண்பன் ! உத்தர்காண்ட்டைச் சேர்ந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் லோகேந்திர பகுகுணா , போக்குவரத்து பணியில் இருந்தார் . அப்போது அவ்வழியே வந்த  ராஞ்சி ரஜக்குக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட , அவரை  தோளில் சுமந்து யமுனோட்ரியிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் . தோராயமாக 2 கி . மீ தோளில் ராஞ்சியை சுமந்து சென்று அவரின் உயிரைக் காப்பாற்றிய போலீஸ்காரர் பகுகுணாவின் மனிதநேயம் மக்களை நெகிழ வைத்துள்ளது . சிங்கராஜா வித் சங்கிலி ! விலங்குகளை காப்பாற்றவேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி சொன்ன ட்விட்டர் மெசேஜ் , அவரின் ஆளுமைக்கே  ஆப்பு ஆகிவிட்டது . மானுக்கு பால் கொடுத்தும் , சிங்கத்தை கட்டிப்போட்டு அதன்முன்பு அப்ரிடியின் செல்லமகள் எடுத்தபோட்டோ இணையத்தில் கடும் விமர்சனத்திற்குள்ளானது . " காட்டிலுள்ள சிங்கத்தை சங்கிலியில் கட்டிப்போட்டு விலங்கு பாச மெசேஜ் தேவையா ?" அப்ரிடியை தாளித்துவருகிறது இணைய உலகம் . டான்சுக்கு அப்பா துணை ! பெர்முடாவின் சிட்டிஹாலில் பள்ளிச்சிறுமிகளின் பாலே டான்ஸ் அமர்க்களமாக நடைபெற்றது . அதில் ஆச்சரியம் , டான

ஜாலி பிட்ஸ்!

படம்
ஜாலி பிட்ஸ்! காதல் மேப் ! அமெரிக்காவின் மின்னசோட்டாவில் பைலட் கெவின் பெக்கர் , காதலி ஒலிவியாவிடம் காதலைச் சொல்ல இயக்குநர் ஷங்கராக மாறி யோசித்தார் .  கல்யாணம் பண்ணிக்கோ என விமானம் மூலம் பனியில் எழுதி ஹார்ட் படம் போட்டு காதலியிடம் க்ரீன் சிக்னல் வாங்கி அசத்தியிருக்கிறார் . பென்சில் இசை ! அமெரிக்காவின் அரிஸோனாவைச் சேர்ந்த ஸ்டார் வார்ஸ் திரைப்பட ரசிகை டேனி ஊச்சா ,  படத்தின் பாடல் இசையை பென்சிலில் உருவாக்கி வைரலாகியுள்ளார் . பென்சில் இசையை சுயமாக தானே கற்ற இவர் யூட்யூப் வீடியோவின் வழி பிறருக்கும் பாடம் எடுக்கிறார் . டாங்கரில் ஷாப்பிங் ! ரஷ்யர் ஒருவரை போலீஸ் எமர்ஜென்சி வேகத்தில் கைது செய்தனர் . எதற்காக ? ஷாப்பிங் செய்ததற்காகத்தான் . யெஸ் . சூப்பர் மார்க்கெட்டில் ஒயின் வாங்க அவர் வந்தது , ராணுவ டேங்கரில் .  சும்மா விடுவார்களா ? இதே மனிதர் சில மாதங்களுக்கு முன்பு ட்ரக் ஒன்றை திருடி கைதானார் என்ற செய்தி போலீசுக்கு ஃபைலை புரட்டியபோதுதான் நினைவுக்கு வந்ததாம் . ரிவர்ஸ் மாரத்தான் ! கலிஃபோர்னியாவைச் சேர்ந்த தடகள வீரர் லாரென் ஸிடோமெர்ஸ்கி , போஸ்டன் மாரத்தா

விநோதம் புதிது!

படம்
விநோதரச மஞ்சரி பிட்ஸ் ! வினோத பனிச்சறுக்கு ! அமெரிக்காவின் சவுத் கரோலினாவைச் சேர்ந்த அன்னா ஷீலெய் என்ற லேடி , யாரும் செய்யாத பார்திபத்தனத்தை செய்து இணையத்தில் தன் வீடியோவை ஹைப்பர் ஹிட்டாக்கியுள்ளார் .  ஸ்கேட்டிங் போர்டை காலில் மாட்டி , கயிறால் செல்ல நாய் கோடக்கை பிடித்துக்கொண்டு , பனியில் சறுக்கி ஜர்னி செய்து இன்டர்நேஷனல்  உலகையே ஆச்சரியப்பட வைத்துள்ளார் . பனிஷ்மெண்ட் பந்தயம் ! அமெரிக்காவின் வடக்கு கரோலினாவைச் சேர்ந்த ஜஸ்டின் போலியாசிக் , இரவு ஏழு மணிக்கு வேஃபில் ஹவுஸ் ஹோட்டலின் சேரில் அமர்ந்தவர் , 24 மணிநேரத்துக்கு எழவேயில்லை . ஏன் ? ஃபுட்பால் மேட்சில் பந்தயம் கட்டி தோற்றுப்போனதற்கான பனிஷ்மென்ட்டாம் . தன் சேரின் கீழேயே போர்டு வைத்து அமர்ந்திருந்த போலியாசிக் இந்தவார இணைய வைரல் மனிதர் . பேன்ட் இன்றி பயணம் ! நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டிற்கான பேன்ட் இன்றி ட்ரெய்ன்களில் பயணிக்கும் விழா தொடங்கியுள்ளது . 2002 ஆம் ஆண்டு இதனை தொடங்கிய Improv Everywhere குழுவினரால் , இந்த வினோத வழக்கம் இன்று 60 சிட்டிகளில் கொண்டாடப்படுகிறது . தற்போது நியூயார்