இடுகைகள்

கணிதவியலாளர் ஜெஸ் போலந்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கணிதத்தில் சைகைமொழி!

படம்
கணிதத்தில் சைகை மொழி டாக்டர்  ஜெஸ் போலேண்ட் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கணிதவியலாளர், கணிதத்தை சைகை மொழி மூலமாக விளக்குகிறார். யூடியூப் வீடியோக்களின் வழியாக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இவர் உதவி வருகிறார். அவரிடம் செய்த நேர்காணலின் சுருக்கம் இது. நீங்கள் கணிதத்தின் முக்கியமான பதங்களை இணையத்தில் சைகைமொழி மூலம் விளக்க முயற்சித்துள்ளீர்கள். இதற்கான ஆர்வம் பிறந்தது எப்படி? நான் தற்போது மான்செஸ்டர் பல்கலையிலுள்ள அறிவியல் கழகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு பொருள் மற்றும் சாதனங்கள் துறை ஆசிரியராக உள்ளேன். நான் டெராஹெர்ட்ஸ் கதிர்வீச்சு குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறேன். ஒற்று மின்னணுப் பொருட்கள் (optoelectronic), செமி கண்டக்டர்  குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளேன். நான் செவித்திறன் குறைபாடு உடையவள். இதன் காரணமாக நான் பயன்படுத்தும் கருவியோடு பிறந்ததிலிருந்து போராடி வருகிறேன்.  திடீரென என் கேட்கும் திறன்கள் குறைய, நான் பிரிட்டிஷ் சைகைமொழியை கற்கத்தொடங்கினேன்.  அறிவியல் வார்த்தைகளுக்கான சைகைமொழி குறியீடுகளைக் கண்டுபிடித்து பயன்படுத்த தொடங்கினேன்.  ஸ்காட்டி