இடுகைகள்

இடதுசாரி வீரர்கள்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போகேந்திர ஜா(1923-2009)

படம்
போகேந்திர ஜா (1923-2009) போகேந்திர ஜா மைதிலி பிராமண இனத்தில் பிறந்தவர். 1929-1933 பஞ்ச காலகட்டத்தில் வாழ்வாதாரமாக இருந்த நிலங்களை கந்துவட்டிக்காரர்களிடம் ஜாவின் பெற்றோர் இழந்தனர். கூலிவேலைக்கு செல்லும் வறுமை.  பீகாரிலுள்ள கிராமங்களை கவனிக்க வைத்ததும் கூட இதே சம்பவம்தான். தன் தந்தையிடமிருந்து இந்து வேத தத்துவங்களை கற்ற போகேந்திர ஜா, உண்மையான மதம் என்பது பொதுமக்களுக்கு நாம் செய்யும் சேவை என்ற தத்துவத்திற்கு வந்தார். குடும்ப வறுமையில் அக்காலகட்டத்தில் பள்ளிப்படிப்பை விட தேடிப்படித்த தொன்மை நூல்களும், சமூக சூழல்களும் ஜாவை சமூக கவனம் கொண்டவராக மாற்றியது. 1935 ஆம் ஆண்டு மதுபானி பகுதிக்கு காந்தி தீண்டாமை மற்றும் சட்டமறுப்பு இயக்க பிரசாரத்திற்கு வந்தார். கலியுக கொலைகாரர்களில் இருவர்,  பசுக்களை வைத்திருக்கும்  ஜின்னா, வேதங்களை பற்றியுள்ள காந்தி என சூர்யோதயா பத்திரிகையில் எழுதுமளவு பொதுவாழ்க்கையில் இடதுசாரி வேகம் கொண்டிருந்தார் ஜா. வெறும் எழுத்தோடு நின்றுவிடாமல் குடும்பமே எதிர்த்தாலும் சமபந்தி போஜனம் நடத்துவது என மாறியிருந்தவர் காந்தியின் ராம ராஜ்யன் என்பதை பொதுவுடைமை சமுதாயமெனவே

முதுபெரும் தலைவர் ஜோதிபாசு(1914-2010)

படம்
ஜோதி பாசு(1914-2010) மார்க்சிஸ்ட் கட்சியின் பெயர்சொல்லும் அதன் முகமாகவே திகழ்ந்த முதுபெரும் தலைவர். கொல்கத்தாவின் ஹாரிங்டன் சாலையில் நிஷிகாந்த பாசு, ஹேமலதா பாசு ஆகியோருக்கு மகனாக பிறந்தார். பெற்றோர் உறவுகளுடன் கூட்டுக்குடும்ப வாழ்க்கை.  1920-25 காலகட்டத்தில் லோரெட்டோ, புனித சேவியர் பள்ளிகளில் கல்வி கற்றார். பின்னர் பிரசிடென்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து பட்டம் பெற்றார். சட்டம் பயில 1935 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்றார் ஜோதி பாசு. அங்கு தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவரும் பொருளாதார வல்லுநருமான ஹெரால்ட் லஸ்கி என்பவரின் சொற்பொழிவுகளை கேட்டு இடதுபக்கம் சாய்ந்தார். 1936 - 1939 ஆம் ஆண்டு படிப்பை முடிக்கும் வரையில் பல்வேறு இடதுசாரி தலைவர்களின் சொற்பொழிவுகளை கேட்டு தன் அரசியல் அறிவை பெரிதும் வளர்த்துக்கொண்டார். ரஜனி பால்மா தத், நேரு, பென் பிராட்லி, ஹென்றி பொலிட், பூபேஷ் குப்தா, மோகன் குமாரமங்கலம், இந்தர்ஜித் குப்தா, நிகில் சக்ரவர்த்தி, பி.என். ஹக்ஸர், ஃபெரோஸ் காந்தி, வி.கே. கிருஷ்ண மேனன் உள்ளிட்ட ஆளுமைகளுடனும் ஜோதிபாசு நட்பு வளர்த்துகொண்டது இக்காலகட்டத்தில்தான்.  இங்

சுந்தரய்யா(1913-1985)

படம்
சுந்தரய்யா(1913-1985) தெலுங்கானாவின் நெல்லூரில் வசதியான சம்சாரிக்கு மகனாக பிறந்த கம்யூனிசவாதி.  1930 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கத்தில் பங்கேற்று சிறைசென்ற சுந்தரய்யா, கிசான் சபாவில் என்.ஜி. ரங்காவுடன் இணைந்து செயல்பட்டு வந்தார். கம்யூனிச தத்துவத்தில் பின்னர் ஈர்க்கப்பட்டாலும் முதலில் தெலுங்கு இலக்கியத்தில் தீர்க்கமாக இணைந்திருந்தார். இலக்கியம், வரலாறு, பாடல் என அனைத்திலும் ஆர்வமாக ஈடுபட்ட ஆளுமை சுந்தரய்யா. "உங்கள் நாட்டை ஆக்கிரமிக்க வருவபவர்களை எதிர்த்து போரிட வேண்டும்" என்று கூறிய சுந்தரய்யா, வாமன அவதாரத்தின் மீது வசீகரிக்கப்பட்டார். அதுமட்டுமில்லாது ராமாயணம், மகாபாரதம் மீது பெரும் பித்து இவருக்கு இருந்தது. வரலாற்று வீரர்களான  ராணா பிரதாப், சிவாஜி, கிருஷ்ணதேவ ராயர், ராம்மோகன் ராய், விவேகானந்தர், சி.ஆர். தாஸ், காந்தி, ராம் தீர்த்தா, திலகர் என  அத்தனை பேரையும் தனக்கான முன்மாதிரி மனிதர்களான கருதினார். சைமன் கமிஷனை எதிர்த்து 1928 ஆம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார்.  கம்யூனிஸ்ட் அறிக்கை   1929 ஆம் ஆண்டு வெளியாக சோஷலிஸ்ட்டாக மாறினார். இவரை பெருமளவு ஏழை மக்கள் மீத

எஸ்.ஏ.டாங்கே

படம்
எஸ்.ஏ. டாங்கே (1899-1991) பால்யத்தில் சிவாஜி, திலகரின் மீது பெரும் மரியாதையும் பக்தியும் கொண்ட டாங்கே, தொழிற்சாலை  சங்கத்தின் மூலமாக குறிப்பிடத்தக்க கம்யூனிச தலைவராக உருவானவர். அகமதுநகரிலுள்ள இந்து குடும்பத்தின் வாரிசாக பிறந்த டாங்கே ஆங்கிலேயர்களை எதிர்த்து கைதாகி(1908-1910) சிறை சென்ற சாவர்கர் சகோதரர்களை தன் கண்ணால் பார்த்து உத்வேகம் கொண்டவர். சுவாமி ராம் தீர்த்தா, திலகர் ஆகியோரை பின்தொடர்ந்து கீதா ரகசியம் நூலை வாசித்தவர், முதலாளித்துவத்தை எதிர்க்கும் போராட்டத்திலும் ஆன்மிகத்தை கழற்றி எறியவில்லை. "ஆன்மிக தத்துவம் போராட்டத்திலும் எனக்குள் இருந்தது" என்று டாங்கே ஒருமுறை கூறியுள்ளார். கார்ல் மார்க்சின் கொள்கைகள் லாஜிக், கரெக்ட், பிராக்டிக்கல் என்பவர் இறுதியில் யாருக்கும் யாரும் நமக்கு எதையும் கற்றுத்தந்து விட முடியாது என்பதில் வந்து நின்றார். ஹரிநாராயன் ஆப்தே, ராம் கணேஷ் கட்கரி ஆகியோரின் மராத்தி நாவல்களை தீவிரமாக வாசித்த டாங்கே,  இந்தியாவைச் சேர்ந்த வி.ஜே. கரந்திகருக்கு அடுத்து பி.பி.ஷெல்லி கவிதைகளை வாசித்து மகிழ்ந்தார். 1920 ஆம் ஆண்டு ஹோம் ரூல் இயக்கத்தில் அன

இடதுசாரி வீரர்கள் 2- கங்காதர் அதிகாரி

படம்
கங்காதர் அதிகாரி(1898-1981) பீப்பிள்ஸ் வார், பீப்பிள்ஸ் ஏஜ் உள்ளிட்ட பத்திரிகைகளின் ஆசிரியர், டாகுமெண்ட்ஸ் ஆஃப் தி ஹிஸ்டரி ஆஃப் தி சிபிஐ(நான்கு தொகுதி) நூல்களை எழுதிய மகத்தான ஆளுமைக்கு இடதுசாரி தலைவர்களின் வரிசையில் இடமேயில்லை. பாம்பேயில் கணக்கர்களின் குடும்பத்தில் பிறந்தவர், தொடக்க கல்வி கற்றதும் அங்கேயேதான். பின்னர் கல்விக்காக பெங்களூர், ஜெர்மனி சென்றார். அரசியலுக்கு வரும் காலத்தில் இவருக்கு இன்ஸ்பிரேஷன் சுதந்திரப்போராட்ட வீரர் குதிராம் போஸ், சிவாஜி, திலகர் ஆகியோர். பள்ளியில் அறிவியல் பாடத்தில் ஆர்வம் காட்டியவர், அதற்கிணையாக பிரார்த்தனா சமாஜின் ஆர்.ஜி. பண்டார்கர் ஆகியோரின் சிந்தனைகளை பின்தொடர்ந்தார். இதில் முக்கியமான பங்கு தியான் பிரகாஷ் பத்திரிகைக்கு உண்டு. எர்னஸ்ட் ஹெகலின் கொள்கைகளோடு போராடிய கங்காதர் அதிகாரி, சமூக மாற்றம், ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் என இரண்டு கருத்துகளுக்குமிடையே அல்லாட தொடங்கி 1928 ஆம் ஆண்டு சுதந்திரம்தான் முதலில் என முடிவெடுத்தார். டாங்கே பாம்பேயில் நடத்திய பைபிளுக்கு எதிரான இயக்கத்தினால் பெரிதும் ஈர்க்கப்பட்டார் கங்காதர் அதிகாரி. அச்சமயத்தில்

இந்திய இடதுசாரிகள்- கடே முதல் நம்பூதிரிபாடு வரை -1

படம்
இடதுசாரி தலைவர்கள் - சிறிய அறிமுகம்! 2004 ஆம் ஆண்டிலிருந்தே இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் வீழ்ச்சியை சந்திக்க தொடங்கிவிட்டது. பாஜக காலத்தில் கம்யூனிசத்தை அழிக்க பல்வேற தடைகள், கைதுகள் தொடங்கிவிட்டன. சுதந்திர காலத்திலிருந்தே இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மரம் போல இல்லையென்றாலும் செடியாகவேனும் தழைத்து வளர்ந்த கம்யூனிசம் இன்று மக்களவையிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டது. தேசியவாதம், ஜாதி, வன்முறை என கரைபுரண்டு ஓடும் இந்தியாவில் கம்யூனிஸடுகளுக்கான தேவை குறைந்துவிட்டதா என்பதை காலமே முடிவு செய்யட்டும்.  உள்கட்சி முரண்கள், தலைமையின் தோல்விகள், ஜாதி, பிரிவினைகளை புரிந்துகொள்வதில் தடுமாற்றம் ஆகியவை கட்சியின் செல்வாக்கு குறைந்துபோக காரணம் என மெய்ன்ஸ்ட்ரீம், தி இந்து ஆகியவை எழுதியுள்ளன. இடதுசாரி வரலாறு என்பது கடே, டாங்கே, சுந்தரய்யா, நம்பூதிரிபாடு, ஜோதிபாசு ஆகியோர்களை உள்ளடக்கியது. 1920 ஆம் ஆண்டு தொழிற்சங்கத்தில் மத்தியதர செயல்பாட்டாளர்கள், 1930 ஆம் ஆண்டு  மேல்தட்டு சோஷியலிஸ்டுகள், 1940-50 களில் அரசியல்வாதிகள் என உள்ளே நுழைந்து கம்யூனிஸ்ட் கட்சிகளை நடத்தி சென்