இடுகைகள்

அமெரிக்கா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான செலவு

படம்
  காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான செலவு காலநிலை மாற்றம் என்பதைப் பொறுத்தவரை வளர்ந்த நாடுகள் ஒருவிதமாகவும், வளரும் நாடுகள் ஒருவிதமாகவும் நடந்துகொள்கின்றன. வளர்ந்த நாடுகள், காலநிலை மாற்ற விதிகளை பயன்படுத்தி வளரும் நாடுகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முயல்கின்றன. வளரும் நாடுகள், பணக்கார நாடுகளின் விதிகள் தங்களுக்கு பொருந்தாது. நாங்கள் இன்னும் பொருளாதார வளர்ச்சி பெறவில்லை என்று கூறி பசுமை விதிகளை அமல் செய்ய மறுக்கின்றன. எதிர்காலத்தில் காலநிலை மாற்றத்தை அமல்படுத்த குறிப்பிட்ட தொகையை வளர்ந்த நாடுகள் தர வேண்டியிருக்கும். இதற்கான அடித்தளத்தை காப்29, அசர்பைஜானில் நடக்கும் மாநாடு அமைக்கும் என நம்பலாம்.  துபாயில் கடந்த ஆண்டு நடைபெற்ற காலநிலை மாநாட்டில், 2030ஆம் ஆண்டிற்குள் தூய ஆற்றல் வளங்களை மூன்று மடங்கு வளர்ச்சி கொண்டதாக மாற்ற வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நடப்பு ஆண்டில், இலக்கு என்பது நாடுகள் அளிக்க வேண்டிய நிதியாக இருக்கும். இதை என்சிக்யூஜி என சுருக்கமாக குறிப்பிடுகிறார்கள். புதிய ஒருங்கிணைந்த கூட்டு இலக்கு என தமிழில் கூறலாம்.  2025ஆம் ஆண்டு தொடங்கி வளர்ந்த நாடுகள், வளரும்

கருப்பினத்தவருக்கான புரட்சிப்பாடலை பாடியவர் - ஆந்த்ரா டே

படம்
  ஆந்த்ரா டே  andra day சூப்பர் பௌல் போடியத்தில் கருப்பினத்தவரின் தேசியகீதத்தை பாடவேண்டும் என்பதுதான் டேவின் கனவு. ஏற்கெனவே பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் பாடி புகழும், பெயரும் பெற்றவர், எதற்கு சூப்பர் பௌல் போடியத்தை முக்கியமாக நினைக்கவேண்டும்? 2015ஆம் ஆண்டு, டே ரைஸ் அப் என்ற பாடலைப் பாடி உலக மக்களின் கவனத்தை ஈர்த்தார். அந்த பாடல், இப்போதும் கருப்பினத்தவரின் போராட்டங்களில் ஒலித்து வருகிறது. யுனைடெட் ஸ்டேட்ஸ் வெர்சஸ் பில்லி ஹாலிடே என்ற படத்தில் நடித்தார். அதை இயக்கியவர், லீ டேனியல்ஸ். அதில் சிறப்பாக நடித்ததற்காக ஆஸ்கர், கோல்டன் குளோப்பிற்கு பரிந்துரைக்கப்பட்டார். பாடல்களுக்கு கிராமி விருது பெற்றார். தி டெலிவரன்ஸ், எக்ஸிபிட்டிங் ஃபார்கிவ்னஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவை விரைவில் வெளிவரவிருக்கின்றன.  ரசிகர்கள் ரைஸ் அப் என்ற புரட்சி பாடலைப் போலவே அடுத்தடுத்த பாடல் இருக்கவேண்டுமென நினைக்கின்றனர். ஆனால் டே சற்று வேறுவிதமாக யோசிக்கிறார். அப்படி ரசிகர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்வது தேவையில்லாத அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. நான் எனது பாடலை சுதந்திரமாக இருக்கவிரும்புகிறேன் என்றார். பாடகர் ஹாலி

குழந்தை பத்திர முறையை உருவாக்கியவர்கள்!

படம்
  டாரிக் ஹாமில்டன் - வில்லியம் டாரிட்டி darrick hamilton -william darity 2023ஆம் ஆண்டு, ஜூலையில் அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் நகரம், அங்கு பிறக்கும் புதிய குழந்தைகளுக்கு 3200 டாலர்களை வங்கிக்கணக்கில் செலுத்துவதாக கூறி, அதை நடைமுறைக்கு கொண்டு வந்தது. நாட்டிலேயே முதல்முறையாக நடைமுறைக்கு வந்த குழந்தை பத்திர முறை இதுவே. பதினெட்டு தொடங்கி முப்பது வயது வரையில் மேற்கண்ட தொகை பெருகி 24 ஆயிரம் டாலர்களாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. அதை வைத்து ஒருவர் தனது கல்லூரிக்கான செலவை சமாளிக்க முடியும். குழந்தை பத்திர திட்டத்தில் தற்போது, 15 ஆயிரம் குழந்தைகள் இணைக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தை டாரிக் ஹாமில்டன் உருவாக்கினார். அதை நண்பரான வில்லியம் டாரிட்டியிடம் கூறினார். இப்படித்தான் திட்டம் சட்டமாகி நடைமுறைக்கு வந்துள்ளது.  ஹாமில்டனுக்கு வயது 53. கருப்பினத்தவர்களின் பொருளாதார வளம் சார்ந்து ஆய்வுசெய்து வருகிறார். பொருளாதாரம், நகரக்கொள்கைகள் துறை சார்ந்த பேராசிரியராக வேலை செய்கிறார். 2022ஆம் ஆண்டு ஆய்வுப்படி, நடுத்தர வெள்ளை இன குடும்பத்தின் செல்வம், கருப்பினக் குடும்பத்தை விட ஆறு மடங்கு அதிகம். கலிபோர்னியா, வாஷ

கருப்பினத்தவருக்கு குடியிருக்க வீடுகளைப் பெற்றுத்தர உதவும் போராட்டக்காரர்!

படம்
  லிசா ரைஸ்  lisa rice வீடுகளை வாங்குவதில், வாடகைக்கு பிடிப்பதில் சாதி, மத, இன வெறி இயல்பாக வெளிப்பட்டுவருகிறது. இதற்கு மேற்குலக நாடுகளும் விதிவிலக்கு கிடையாது. இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு, சிறுபான்மையினருக்கு சாதி, மத இழிவு நடக்கிறது என்றால் வெளிநாடுகளில் கருப்பினத்தவருக்கு நடக்கிறது. ஒருவர் வீடு வாங்குவதில் வாடகைக்கு பிடிப்பதில் நிறவெறி சார்ந்த சிக்கல்கள் எழுந்தால் அந்த விவகாரங்களை லிசா ரைஸ் கையாண்டு தீர்வுகளை எட்ட முயல்கிறார்.  அமெரிக்காவில் சொந்த வீடு வைத்துள்ள வெள்ளையர்களின் எண்ணிக்கை அதிகம். வாடகைக்கு வீடு கொடுப்பது, வீடுகளை வாங்குவது ஆகியவற்றில் கருப்பினர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அறுபதுகளில் சிறுபான்மையினர் நிறம் சார்ந்த புறக்கணிப்பை அனுமதித்தனர் என்றால் இப்போது வீடு, நிதி வசதி சார்ந்து உருவாக்கப்பட்ட அமைப்புகளின் மூலம் அதே விஷயம் ஒழுங்குமுறையாக நிகழ்த்தப்படுகிறது. தேசிய வீட்டுவசதி கூட்டமைபு என்ற நிறுவனத்தின் அதிபர், இயக்குநராக உள்ள லிசா ரைஸ், இன்று பாகுபாடு என்பது தானியங்கி முறையி்ல மாறியுள்ளது. எனவே இதை எதிர்கொள்வது கடினம் என்றார். பாகுபாட்டிற்கு எதிராக தீண்டாமைச

கருப்பின பெண் தொழில்முனைவோருக்கு உதவும் முதலீட்டு நிறுவனம்!

படம்
  அரியன் சைமன் - அயானா பார்சன்ஸ் arian simone, ayana parsons கருப்பின பாகுபாடு என்பது மேற்குலக நாடுகளில் சாதாரண ஏற்கப்பட்டுவிட்ட ஒன்று. சமநீதி, ஒரே சட்டம் என்றாலும் மறைமுகமாக ஆப்பிரிக்க அமெரிக்கர்களை கீழே தள்ள நிறவெறியர்கள் முயன்று கொண்டு இருக்கிறார்கள். இதற்கு முக்கியக்காரணம், அவர்களிடம் தொழில்நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளன. அதற்கு நிதி முதலீட்டையும் பெருமளவு பெற்றுவிடுகிறார்கள். இவர்களோடு போராடி ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பேரளவுக்கு முதலீடு பெறமுடிவதில்லை.  ஆண்களே முக்கி முனகும்போது, கருப்பின பெண்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் செய்யும் தொழில்களுக்கு முதலீடு செய்யவே ஃபியர்லெஸ் ஃபண்ட் என்ற முதலீட்டு நிறுவனம் உருவானது. இதை 2018ஆம் ஆண்டு அரியன் சைமோன் தொடங்கினார். இவருடன் கூட்டாளியாக அயானா பார்சன்ஸ் இணைந்துள்ளனர். இவர்கள், மக்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்கள், தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு முதலீடுகளை வழங்குகிறார்கள்.  இதுவரை 44 நிறுவனங்களில் 27 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளனர். முதலீட்டுத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருவது, வெள்ளையர்கள்தான். பெண்கள் தொடங்கும் நிறுவனங்களுக்கான முத

கருப்பினத்தவர்களுக்கு மருத்துவம், வேலைவாய்ப்பு கிடைக்க உதவும் மனிதர்கள்!

படம்
  லியாண்ட்ரிஸ் லிபுர்ட் leandris liburd கருப்பினத்தவர்களுக்கு பாகுபாடு இல்லாமல் மருத்துவ வசதிகள் கிடைக்க சிடிசி அமைப்பில் ஹெல்த் ஈகுவிட்டி என்ற அமைப்பின் இயக்குநராக இருந்து செயல்பட்டு வருகிறார். ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக பணியில் நிறம், இனம் கடந்து அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியம் சார்ந்த புரிதலை ஏற்படுத்த முனைந்திருக்கிறார்.  ஆரோக்கியம் என்றவுடன் உணவுமுறை, உடற்பயிற்சியுடன் பலரும் நின்றுவிடுவார்கள், லியாண்ட்ரிஸ், ஒருவர் மருத்துவரைச் சென்று பார்க்க போக்குவரத்து வசதி இருக்கிறதா என்பது வரையில் கவனிக்கிறார். அரசின் சக துறைகள், மக்களின் இனக்குழு அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து பாகுபாடு இல்லாமல் மக்களுக்கு ஆரோக்கிய விழிப்புணர்வு செய்து வருகிறார். அலுவலக பணியில் உள்ளவருக்கு நோய் என்றால் கூட சம்பள வெட்டுடன் விடுமுறை கிடைக்கும். அதை லியாண்ட்ரிஸ் மாற்றி, சம்பளத்துடன் விடுப்பு என்பதை நடைமுறையாக்கியிருக்கிறார். நாம் நமக்குள் உள்ள வேறுபாடுகளை களைந்தால்தான் நோய்களை எளிதாக முன்னதாக கண்டறிந்து தடுக்கமுடியும் என்றார் லியாண்ட்ரிஸ்.  -அலைஸ் பார்க் டைம் வார இதழ்  இமானி எல்லிஸ்  imani ellis இமானி, கருப்பின,

2024 - உலக நாடுகளில் தேர்தல் - ஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் எது தொடரப்போகிறது?

படம்
 தேர்தலுக்குப் பிறகு மாறிப்போகும் உலகம் 2024ஆம் ஆண்டில் உலகமெங்கும் நிறைய நாடுகளில் தேர்தல் நடைபெறப்போகிறது. தேர்தல் மூலம்தான் பல நாடுகளில் ஜனநாயக செயல்பாடுகள் தொடருமா, அல்லது நின்றுபோகுமா என்று தெரிய வரும். சர்வாதிகாரத்தை தேர்தல் எப்படி தீர்மானிக்கும் என்பது சரியான கேள்வி. தேர்தல் என்பதைக் குறைந்தபட்ச கண்துடைப்பாகவேனும் நடத்தி முடிக்கவேண்டிய நெருக்கடி நிறைய நாடுகளுக்கு உள்ளது. இன்று நாடுகள் அனைத்தும் அரசியல், பொருளாதாரம், சமூகம் என பல்வேறு வகையில் ஒன்றோடொன்று இணைந்துள்ளது. தனியாக தற்சார்பாக இயங்குவது கடினம். அதேசமயம், கொள்கை, செயல்பாடு ரீதியாக யாரையும் நேரடியாக பகைத்துக்கொள்ளவும் முடியாது.  ஆனந்தவிகடன், பொதுநலன் கருதி என போலியாக விளம்பரம் வெளியிட்டு தேர்தலில் மக்களை வாக்களிக்க தூண்டுவதை அனைவரும் கண்டிருக்கலாம். இதெல்லாம் மக்களின் மனதில் போலியான நம்பிக்கையை விதைக்கும் செயல்பாடு. அனைத்து நிறுவனங்களுக்கும் குறிப்பிட்ட கருத்தியல் செயல்பாடுகள் உண்டு. வலதுசாரி தாராளவாத, சர்வாதிகார அதிகார சக்திகள் எழுச்சிபெறும்போது, அதுவரையிலான ஜனநாயக அமைப்புகள் மெல்ல நம்பிக்கையிழக்கத் தொடங்குகின்றன. ஜெர்மனி

எனது இளமைக் காலத்தில் பெண் இயக்குநர்கள் மிக குறைவு! - ஜோடி ஃபாஸ்டர், திரைப்பட நடிகை

படம்
 ஜோடி ஃபாஸ்டர் திரைப்பட நடிகை சைலன்ஸ் ஆஃப் தி லேம்ஸ் படத்தில் கிளாரைஸ் ஸ்டார்லிங் பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தீர்கள். ஒருவகையில் எதிர்காலத்திற்கான பெண் டிடெக்டிவ் பாத்திர வடிவமைப்பிற்கு கூட அது உதவும் என்று கூறலாம். பாப் கலாசாரத்தில் அந்த பாத்திரம் எப்படி வளர்ச்சி பெற்றுள்ளதாக கருதுகிறீர்கள்? நான் அப்போது சிறப்பான ஒன்றைச் செய்ததாகவெல்லாம் நினைக்கவில்லை. நாயகனின் பயணத்தை அப்படியே செய்தேன். அந்த பாத்திரம் அப்போது ஆண்களுக்கானதாகவே இருந்தது. சைலன்ஸ் ஆஃப் தி லேம்ஸ் படம், ஆண்களுக்கான பாத்திரத்தை பெண்ணுக்கானதாக பாதை மாற்றியது. கடந்த முப்பது ஆண்டுகளாக பல்வேறு வேறுபட்ட குரல்களை நாம் கேட்டு வருகிறோம். பெண் நாயகிகள், எதிர்மறை நாயகர்கள் என்பது சற்று சிக்கலானது. குழப்பம் நிறைந்ததும் கூட. ட்ரூ டிடெக்டிவ் நைட் கன்ட்ரி படப்பிடிப்பு ஐஸ்லாந்தில் நடைபெற்றது. தீவிரமான பருவநிலை கொண்ட இடத்தில் நடந்த படப்பிடிப்பு எப்படியான அனுபவமாக இருந்தது? அதுபோன்ற இடத்தில் நடக்கும் படப்பிடிப்பு, உங்களுக்குள் உயிர் பிழைக்கும் வேட்கையைத் தூண்டக்கூடியது. ஒரே நேரத்தில் இதுப்பற்றிய பாராட்டும், வாழ்வதற்கான அவமானமும் மனதி

கிழக்கத்திய ஞானத்தை உளவியலுக்கு கொண்டு சென்று ஆராய்ந்த உளவியலாளர் ஜோன் கபாட்ஸின்!

படம்
  இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகள் கிழகத்திய ஆன்மிக கருத்துகளை, பாடல்களை இலக்கியங்களை நாடத் தொடங்கின. இந்த வகையில் பௌத்த மதத்தின் தியானம், உடற்பயிற்சிகளை வெளிநாட்டினர் ஆராயத் தொடங்கினர். அப்போது பெரிதாக அதன் ஆய்வுப்பூர்வ நிரூபணத்தை கூற முடியவில்லை. ஆனால் பின்னாளில் அதன் பலன்களை அடையாளம் கண்டு கொண்டனர்.  அமெரிக்க உயிரியலாளர், உளவியலாளரான ஜோன் கபாட்ஸின் என்பவர், மைண்ட்ஃபுல்னஸ் என்ற மன அழுத்தம் குறைக்கும் முறையை உருவாக்கினார். இதில் தியானம் முக்கியமான பங்கு வகித்தது.  ஒருவர் கூறும் கருத்துகளை, செய்யும் செயல்களை முன்முடிவுகள் இன்றி அதை ஏற்பது, அந்த செயல்பாடுகளில் இருந்து தன்னை பிரித்து வைத்து இயங்குவது, மையமாக இன்றி தனித்த இருப்பது ஆகியவற்றை ஜோன் இதில் முக்கியமாக கருதினார். அதாவது, உடல் அப்படியே நிலையாக இருக்க மனம் என்ன சிந்திக்கிறது என்பதை கவனமாக பார்க்குமாறு சூழலை உருவாக்கினார். இந்த முறையில் சிந்தனைகளை எந்த கட்டுப்பாடும் செய்யாமல் அப்படியே உருவாக விடுவது, அதைப்பற்றிய எந்த முடிவும் கூறக்கூடாது.  நான் தோற்றுப்போனவன், வாழ்க்கை எனக்கு இல்லை என எந்த முடிவுக்கும் வராமல் நிகழும

ஜனநாயகம் என்பது நாட்டிற்கு நாடு மாறுபடக்கூடியது - வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா

படம்
  ஜனநாயக வழியில் என்னை தூக்கி எறிய முடியாது - ஷேக் ஹசீனா என்னை அழிக்கவேண்டுமென்றால் கொல்லவேண்டும். மக்களுக்காக உயிர் துறக்கவும் தயார் என்று  கூறி தனது வழியில் நாட்டை ஆட்சிநடத்திக் கொண்டு செல்கிறார் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா. 170 மில்லியன் மக்கள் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதியாக, நாட்டின் பிரதமராக எழுபத்து நான்கு வயதிலும் உறுதியாக நிற்கிறார்.  மத்திய கிழக்கு நாடுகளை விட அதிக முஸ்லீம்கள் வாழும் நாடு. அரசியலமைப்பு நாட்டை மதச்சார்பற்ற நாடு என்று கூறுகிறது. ஆனால் ராணுவ ஆட்சி காலம், நாட்டை இஸ்லாமிய அடிப்படைவாத இருட்டுக்குள் கூட்டிச்சென்றது. இதெல்லாம் கடந்து 2009ஆம் ஆண்டு தொடங்கி நீண்டகாலமாக அங்கு ஆட்சி செய்வது ஹசீனாதான். எனது பெரும் பலமே மக்கள்தான். என்னுடன் மக்கள் நிற்பார்கள் என்று நம்புகிறேன் என கூறுபவர், இந்திய பிரதமர் இந்திராகாந்தி, இங்கிலாந்து பிரதமர் மார்க்கரேட் தாட்சர் ஆகியோர் செய்த தேர்தல் சாதனைகளை கடந்து நிற்கிறார்.  வங்கதேசத்தில் புகழ்பெற்ற வலிமை பெற்ற இரு கட்சிகள் உண்டு. ஒன்று, ஹசீனாவின் ஆவாமி கட்சி, அடுத்து வங்கதேச தேசியவாத கட்சி. அண்மையில் தேசியவாத கட்சி, வங்கதேசத்தில் பிரதமரு

பால்புதுமையினரான மார்ஷா கொல்லப்பட்டதற்கு காரணம் என்ன?

படம்
  மார்ஷா பி ஜான்சன் கொல்லப்பட்டது ஏன்? 1992ஆம் ஆண்டு, ஜூலை ஆறாம்தேதி நாற்பத்து ஆறு வயதான மார்ஷா ஹட்சன் ஆற்றில் பிணமாக மிதந்தார். அப்போதுதான் பால்புதுமையினருக்கான நகர பேரணி நியூயார்க்கில் நடைபெற்று முடிந்திருந்தது. பால்புதுமையினரன மார்ஷாவின் இறப்பை காவல்துறை தற்கொலையாகவே கையாண்டது. ஒரு கும்பல், மார்ஷாவை அடிக்க துரத்திச் செல்வதை மக்கள் பார்த்து சாட்சி சொன்னபிறகே அவரின் தலையின் பின்புறம் அடிபட்டிருந்ததை போலீசார் கவனித்தனர். பிறகுதான் தற்கொலைக்கோண விசாரணை மாறி, கொலை என்ற ரீதியில் விசாரிக்கத் தொடங்கினர். ஆப்பிரிக்க அமெரிக்க பெண்மணியான மார்ஷா, பால்புதுமையினரின் உரிமைக்காக போராடியவர். ஸ்டோன்வால் கலவரத்தில் பாதிக்கப்பட்ட தோழி சில்வியா ரிவேராவுக்கு உதவியவர். சில்வியா 2002ஆம் ஆண்டு காலமானார். இவருடன் சேர்ந்து மார்ஷா ஸ்ட்ரீட் டிரான்ஸ்வெஸ்டைட் ரிவெல்யூஷனரிஸ்   - ஸ்டார் என்ற அமைப்பை   தொடங்கினார். இந்த அமைப்பு நியூயார்க் நகரில் வீடற்று தெருவில் திரியும் இளைஞர்களை ஒருங்கிணைப்பதற்கானது. 2021ஆம் ஆண்டு மார்ஷாவின் நேர்காணல் பே இட்   நோ மைண்ட் என்ற ஆவணப்படத்தில் இணைக்கப்பட்டு வெளியானது. அதில், நீங்

அமெரிக்கர்களின் தூக்கத்தைக் கெடுத்து பீதிக்குள்ளாக்கிய ஸோடியாக் கொலைகாரன்!

படம்
  ஸோடியாக் கில்லர் இந்த பெயரை ஊடகங்களும், காவல்துறையினரும் மறக்கவே முடியாது. அந்தளவு அத்தனை பேரையும் பீதிக்குள்ளாக்கிய சீரியல் கொலைகாரர். அமெரிக்காவில் வடக்கு கலிஃபோர்னியாவில் 60, 70 களில் ஏராளமான கொலைகளை செய்தார். பெரும்பாலும் ஜோடிகளாக உள்ளவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு செல்வது ஸோடியாக் கொலைகாரரின் பாணி. பிறகு தனது கொலை பற்றி குறியீடாக கடிதம் எழுதி நகரின் முக்கிய பத்திரிகைகளுக்கு, காவல்நிலையத்திற்கு அனுப்பி வைப்பார். கணினியில் என்கிரிப்ஷன் டீகிரிப்ஷன் என்று கூறுவார்கள். குறியீடுகளை என்ன தகவல் என்று அறிந்துகொள்ள ஒருவர் அதை டீகிரிப்ஷன் செய்யவேண்டும். அதன்படி ஸோடியாக் கொலைகாரரின் செய்திகளை காவல்துறையினர், மக்களில் சில தன்னார்வலர்கள் டீ கிரிப்ஷன் செய்து குற்றங்களை புரிந்துகொள்ள முயன்றனர். 37 கொலைகளை செய்தாலும் 5 கொலைகளை மட்டுமே அவர் செய்தார் என காவல்துறையால் நிரூபிக்க முடிந்தது. ஸோடியாக் கொலைகாரரைப் பற்றி ஏராளமான திரைப்படங்கள், நூல்கள் வெளியாகியுள்ளன.’’ எனது இறப்பிற்கு பிறகு அடிமையாக இருக்க மனிதர்கள் தேவை, சிறுமிகளை கொல்வது எளிதானது, மக்களைக் கொல்வது பிடித்திருக்கிறது. அ

25 ஆண்டுகளாக மறக்கமுடியாத இனவெறி கொலை - கல்லறையை சேதப்படுத்தி வரும் வெள்ளையின இனவெறியர்கள்

படம்
  ஜேம்ஸ் பைர்ட் ஜேம்ஸ் பைர்டின் கல்லறை டெக்ஸாஸில் பெருகும் இனவெறி- மறக்க முடியாத இனவெறி கொலை 1998ஆம் ஆண்டு. ஜேம்ஸ் பைர்ட் என்பவர் தனது நண்பரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்று விட்டு ஜாஸ்பர் கவுன்டிக்கு செல்லும் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மூன்று வெள்ளையினத்தவர்கள் அவருக்கு லிஃப்ட் கொடுப்பதாக கூறினார்கள். அதை நம்பி ஏறியவரை அடித்து உதைத்து இரும்புச்சங்கிலியில் கைகளைக் கட்டி, பிக் அப் டிரக்கோடு பிணைத்து சாலையில் இழுத்து சென்றனர். மூன்று கி..மீ. தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட ஜேம்ஸ் பைர்டின் எலும்புகளை அடுத்தநாள் காவல்துறை வந்து பொறுக்க வேண்டியிருந்தது. உயிர் போனதோடு, அவமானகரமான இறப்பு. அவரை அடித்துக்கொன்ற வெள்ளையர்கள் வெள்ளை இனவெறி அமைப்பைச் சேர்ந்தவர்கள். விவகாரம் தேசிய அளவில் பேசப்பட வேறுவழி இல்லாமல் ஜேம்ஸ் பைர்ட்டைக் கொன்ற குற்றவாளிகளில் இருவருக்கு மரணதண்டனை, ஒருவருக்கு ஆயுள் சிறை கிடைத்தது. அவரது பெயரில் இனவெறுப்பு சட்டங்கள் கூட உருவாக்கப்பட்டன. ஆனாலும் கூட ஜேம்ஸ் பைர்ட் இன்று வரையில் நிம்மதியாக இல்லை. அவரது கல்லறை இருமுறை வெள்ளை இனவெறியர்களால்

அமெரிக்கா கைவிட விரும்பாத போர்விமானம் எஃப் 35!

படம்
  உலக நாடுகள் வாங்க விரும்பும் போர் விமானம்-எஃப் 35   அமெரிக்க அரசு, 1.7 ட்ரில்லியன் டாலர்களை ஒதுக்கி எஃப் 35 போர்விமானத்தை தயாரிக்க லோக்கீது மார்ட்டின் நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது. அப்படியென்ன சிறப்பு அம்சம் இந்த விமானத்தில் உள்ளது? சிரியாவுக்கு ரஷ்ய ரேடார்கள் கண்டுபிடிக்காமல் சென்று வரமுடியும். பசிஃபிக் கடலுக்கு சீனாவின் அச்சுறுத்தலின்றி சென்று இறங்கலாம். விமானம், இலக்கு, ஆயுதங்கள் பற்றிய விவரங்கள், நிலைய கட்டுப்பாடு இதெல்லாம் விமானி அணிந்துள்ள ஹெல்மெட்   கண்ணாடி வழியாக பார்க்கலாம். தனியாக கீழே குனிந்து மீட்டர்களை ரேடாரை பார்க்க வேண்டுமென்பதில்லை. போர் பற்றிய தகவல்களை விமானத்தில் இருந்தே அமெரிக்க ராணுவத்திற்கும் அதன் நேசப்படைகளுக்கும் எளிதாக பகிர முடியும். மணிக்கு 1,200 கி.மீ வேகத்தில் பறக்க முடியும். விமானி, காக்பிட்டில் உள்ள கருவிகளை, எந்திரங்களை பேச்சு மூலமே இயக்கலாம். இதில், 20 ஆயிரம் பவுண்டு எடையுள்ள ஆயுதங்களைக் கொண்டு செல்லலாம். சைபர் தாக்குதல்களுக்கு மசியாது. ரஷ்யாவின் ரேடாரில் விமானம் தெரியாது. அடுத்த போர் என உலக நாடுகளுக்கு இடையில் நடந்தால்   அதில் எஃப் 35 இருக்

சுற்றுலா போன இடத்தில் காணாமல் போன குழந்தை

படம்
  அமெரிக்காவில் இடா மாகாணத்தில் நடைபெற்ற குற்றச்சம்பவம். 2015ஆம் ஆண்டு ஜூலை பத்தாம் தேதி டியோர் கன்ஸ் என்ற இரண்டு வயது குழந்தை காணாமல் போகிறது. என்னவானது என்பதை இன்றுவரைக்கும் க்ளூ ஏதாவது கிடைக்குமா என காவல்துறை தேடி வருகிறது. ஆனால் எதிர்பார்த்த எந்த தடயங்களும் கிடைக்கவில்லை என்பதே யதார்த்தம். சால்மன் சாலிஸ் தேசிய வனப்பகுதிக்கு அருகில் ஜெசிகா மிட்செல் அவரது கணவர் டியோர் கன்ஸ் சீனியர் ஆகியோர் சுற்றுலாவுக்காக வந்திருந்தனர். டியோர் கன்ஸ் சீனியரின் தாத்தாவும் அவரது நண்பருடன் அங்கே இருந்தார். அவரிடம்தான் குழந்தை டியோர் ஒப்படைக்கப்பட்டிருந்தார். அவர் தனது நண்பருடன் சேர்ந்து மீன் பிடிப்பதில் தீவிரமாக இருக்கும்போது, லிட்டில் மேன் எனும் குழந்தை டியோர் காணாமல் போயிருந்தது. குழந்தையின் பெற்றோர் அருகில் இருந்த பாருக்கு மதுபானம் அருந்த சென்றிருந்தனர். குழந்தையை தாத்தாவிடம் ஒப்படைத்துவிட்டு சென்றனர். வந்து பார்த்தால் ஒருவருக்கொருவர் நீ பார்த்தாயா என கைகாட்டிக்கொண்டு இந்திய கிரிக்கெட் அணி போல நின்றார்களே ஒழிய பதில் கிடைக்கவில்லை. இருநூறுக்கும் மேலான காவல்துறையினர், தன்னார்வலர்கள் இரண்டு கி.மீ. தொ

ஆசிரியர் வேலையா, வேண்டவே வேண்டாம் என பதறும் அமெரிக்க மாணவர்கள்!

படம்
  அமெரிக்காவில் ஆசிரியர் வேலையை கைவிடும் தலைமுறையினர்! அமெரிக்காவில் ஆசிரியர் தொழிலை கையில் எடுத்து பணியாற்றும் ஆட்கள் படிப்படியாக குறைந்து வருகிறார்கள். இதற்கு முக்கியமான காரணங்கள் என பள்ளியில் நடைபெறும் துப்பாக்கிச்சூடு, குறைந்த சம்பளம், அதிகவேலை ஆகியவற்றைக் காரணமாக கூறலாம். நமது ஊரின் டெலிகிராம், டெய்லிபுஷ்பம் ஆகிய நாளிதழ்களில் வரும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உழைப்பு கதையெல்லாம் அமெரிக்காவில் கூட நடந்து வந்தவைதான். ஆனால், இப்போது அதுபோல எந்த மாணவரும் பேட்டி கொடுப்பாரா என தெரியவில்லை. ஒரு ஆசிரியரே பல்வேறு பாடங்களை எடுக்க வேண்டியதிருக்கிறது. இன்னொரு ஆசிரியரின் மாணவர்களையும் சேர்த்து பார்க்கவேண்டியதிருக்கிறது என பிரச்னைகள் நீள்கின்றன.   ஆசிரியர் வேலைக்கு குறைந்தபட்ச சம்பளம் என்பது மாகாணங்களைப் பொறுத்து மாறுபடுகிறது.அது இயல்பான ஒன்றுதான். ஆனால், மாறும் சம்பளம் விலைவாசிக்கு ஏற்றபடி இருக்கிறதா என்றால் இல்லை. ஆண்டுக்கு 48 ஆயிரம் டாலர்கள் என்பது மிக குறைவான சம்பளம். இதை வைத்து ஆசிரியர், அவரது மனைவி, குழந்தை என மூன்று பேர் கொண்ட குடும்பத்தை பசி, பட்டினியின்றி ஓட்டுவதே மிக கடினம்.சில ம