இடுகைகள்

சினிமா விமர்சனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெற்றோர் சொல்வதை பெண்கள் கேட்டு நடந்தாலே வாழ்க்கை நல்லாயிருக்கும்! -

படம்
  மீக்கு பாகர தெக்கிரவாகினி கதை, நடிப்பு – கிரண் அப்பாவரம் இசை மணி சர்மா காதல் திருமணம் செய்தால் குடும்ப உறவுகள் வருத்தப்படுவார்கள். எனவே வீட்டில் பார்த்து வைத்த திருமணம் செய்யுங்கள். சந்தோஷமாக இருக்கலாம் என கலாசார செய்தி சொல்லுகிறது படம். ஹைதராபாத்தில் டாக்சி டிரைவராக இருக்கிறார் நாயகன். அவர் காரில் குடிபோதையில் உள்ள பெண் வாடிக்கையாளர் ஏறுகிறார். அவரிடம் பேசி அவரது மனதில் உள்ள பிரச்னையைக் கேட்கிறார். அதில்தான் அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட காதலும் காதலன் ஏமாற்றிவிட்டு சென்றதும் தெரியவருகிறது. இதனால் அவள் காதலனுக்காக வீட்டைவிட்டு வந்து, நகரத்தில் வேலை செய்கிறாள். பெற்றோரிடம் செல்லவும் பயம். ஏனெனில் அவளின் கல்யாண முகூர்த்தம் போதுதான் காதலனோடு ஓடி வருகிறாள். இதனால் அவளது அப்பா மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். இன்னும் நிறைய சங்கடங்கள் ஏற்படுகின்றன. இதெல்லாம் கேட்கும் நாயகி, பிறகு டாக்சி டிரைவரிடம் அவனது காதல் கதையைக் கேட்கிறாள். அவனும் தான் வழக்குரைஞர் பெண்ணை சித்தப்பா உதவியுடன் காதலித்தது பற்றி சொல்லுகிறார். இருவரும் மெல்ல நட்பாகிறார்கள். அப்போது டாக்சி டிரைவர் அந

அம்மா விட்டுச்சென்ற தடயங்களை தேடி புறப்படும் மகளின் கதை! - எனோலா ஹோம்ஸ் 2020

படம்
        எனோலா ஹோம்ஸ் Screenplay by Jack Thorne Based on The Enola Holmes Mysteries: The Case of the Missing Marquess by Nancy Springer Directed by Harry Bradbeer   Music by Daniel Pemberton Cinematography Giles Nuttgens   எனோலா , ஷெர்லாக் ஹோம்ஸின் தங்கை . எனோலாவின் தாய் , அவரை பள்ளிக்கு அனுப்பாமலேயே அனைத்து பாடங்களையும் வீட்டிலேயே கற்பிக்கிறார் . இதனால் எனோலாவுக்கு சண்டைப்பயிற்சி , கணிதம் , அறிவியல் , வேதியியல் என அனைத்துமே அத்துபடியாகிறது . ஒருநாள் திடீரென காலையில் எனோலாவின் அம்மாவைக் காணவில்லை . அவரை எப்படி எனோலா கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதை . படம் முழுக்க எனோலா , தான் தாய் சொல்லித்தந்த விஷயங்கள் வழி எப்படி செயல்பட்டு தாயை தேடிப்போகிறார் . வாழ்க்கையில் முதல் காதலை எப்படி பெறுகிறார் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்கள் . எனோலாவின் கதையை அவரே கேமராவைப் பார்த்து அடிக்கடி சொல்லுவது படத்தின் புதுமைகளில் ஒன்று . ஷெர்லாக் ஹோம்சை பார்த்து பழகியவர்களுக்கு ஹென்றிக் கோவில் எப்படி செட் ஆவார் என்பது சந்தேகம்தான் . படம் அவரைப்பற்றியல்ல என்பதால் . அதைப்பற்றி நாம் கவலை

ஆணோ, பெண்ணோ காதலை ஒளித்து வைக்காதீர்கள்! - ஹோலி ஸ்லெப்ட் ஓவர் 2020

படம்
      Holly Slept Over ஹோலிஸ்லெட்ப் ஓவர் Director: Joshua Friedlander Writer(s): Joshua Friedlander   Music by Jason Nesmith Cinematography John W. Rutland     நோயல், ஆட்ரே என்ற இருவரும் தம்பதிகள். ஓராண்டாக முயன்றும் குழந்தை பெற முடியவில்லை. இதற்கு என்ன காரணம் என யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது அவர்களை சந்திக்க ஆட்ரேவின் தோழி ஹோலி வருகிறாள். அவளுக்கும் ஆட்ரேவுக்கும் கல்லூரி காலத்தில் நடந்த உறவு நோயலுக்கு தெரிய வர அவர் அதிர்ச்சியாகிறார். உண்மையில் இருவருக்குள்ளும் என்ன உறவு என்பதுதான் படத்தின் முக்கியமான மையக்கதை.  படம் எதையும் மறைமுகமாகவெல்லாம் சொல்லவில்லை. நேரடியாகவே காதல், காமம், குழந்தை பிறந்த பிறகு கணவனை காயவிடும் மனைவி என பல்வேறு விஷயங்களை பேசுகிறது. ஒருவகையில் காதல் கல்யாணத்திற்கு பிறகு என்னவாகிறது என பேசுகிற படமாகவும் இருக்கிறது.  நோயலின் நண்பர் பீட்டே, மனைவி பற்றி நோயலிடம் புலம்புகிறார். நோயல் வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் அவருக்கும் புதுபுது விதங்களில் உடலுறவை அனுபவிக்க நினைக்கிறார். ஆனால் இருவருக்குள்ளும் சந்தோஷம் காவிரி ஆறாக பெருகும்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை. என்

பல்வேறு மனிதர்களின் மனதிலுள்ள சாத்தான் வெளியே வந்தால்....? தி டெவில் ஆல் தி டைம்

படம்
                தி டெவில் ஆல் தி டைம்  Directed by Antonio Campos Screenplay by Antonio Campos Paulo Campos Based on The Devil All the Time by Donald Ray Pollock     Music by Danny Bensi Saunder Jurriaans Cinematography Lol Crawley இந்த படத்தை இறை நம்பிக்கை உள்ளவர்கள் பார்ப்பது அவர்களை கடுமையான கோபத்திற்கு உள்ளாக்கும். படம் முழுக்கவே உளவியல் சார்ந்த பிரச்னை உள்ள மனிதர்களை முன்னிலைப்படுத்தி கதை அமைக்கப்பட்டுள்ளது.  கதை நடைபெறும் இடம், அமெரிக்காவின் ஓஹியோ, மேற்கு வர்ஜீனியா. இந்த இரண்டு இடங்களுக்கும் கதாபாத்திரங்கள் மாறி மாறி சென்று தங்களுக்கான அனுபவங்களை பெறுகிறார்கள்.  இரண்டாம் உலகப்போர்வீரன், கணவன், மனைவி என இருவருமே சீரியல் கொலைகாரர்களாக இருப்பவர்கள், இளம்பெண்களை கடவுள் பெயர் சொல்லி செக்ஸ் வைத்துக்கொள்ளும் பாதிரியார், வெறிபிடித்த இறைப்பித்து பிடித்த பாதிரியார், அவரை அதற்காக காதலித்து மணக்கும் பெண் என இதில் வரும் பல்வேறு கதாபாத்திரங்கள் உளவியல் ரீதியாகவே பாதிக்கப்பட்ட நபர்கள்.  இரண்டாம் உலகப்போர் காலத்தில் நடைபெறும் கதை. இப்போரில் வில்லார்டு என்ற வீரன் பங்கேற்கிறான். அதில் ஜப்பானிய

கடற்கரையில் நடக்கும் போதைமருந்து வியாபாரத்தை முறியடிக்கும் லைஃப் கார்டு குழுவின் சாகசங்கள்! - பே வாட்ச்

படம்
    பே வாட்ச்  Screenplay by Damian Shannon Mark Swift Story by Jay Scherick David Ronn Thomas Lennon Robert Ben Garant Based on Baywatch by Michael Berk Douglas Schwartz Gregory J. Bonann Directed by Seth Gordon    அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள எமரால்டு பே ஏரியாவில் கதை நடக்கிறது. அங்குள்ள பே வாட்ச் எனும் ஏரியா, வசதியான ஆட்கள் வந்து இளைப்பாறும் இடம். அங்கு கடலுக்குள் சென்று சிக்குபவர்களை காப்பாற்ற அரசு லைப் கார்டுகளை பணிக்கிறது. அக்குழு தலைவர் மிட்ச் - டிவைன் ஜாக்சன், அவருடன் கிளுகிளு உடையில் இரண்டு பெண்கள் வேலை பார்க்கிறார்கள். அனைவரது வேலையும் ஒன்றுதான். யாராவது கடல் நீரில் மூழ்கினால் அவர்களை அதிலிருந்து மீட்டு கரை சேர்த்து மருத்துவ உதவியை நாடுவது.  அங்குள்ள ஹன்லி கிளப் நிறுவனத்தின் உரிமையாளரான விக்டோரியா லீட்ஸ் என்ற பெண்மணி, இந்த மொத்த கடற்கரையையும் தனது சொத்தாக்க முயல்கிறார். இதற்காக அங்குள்ளவர்களை அடித்து மிரட்டி நிறுவனங்களை கையகப்படுத்துகிறார். அதேநேரம் அங்கு போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனை மிட்ச் கண்டுபிடித்து  எப்படி தடுக்கிறார் என்பதை அதிக கவர்ச்சி, குற

காதலைச் சேர்த்து வைக்கும் பறவை! - லவ்பேர்ட்ஸ் 2011

படம்
      லவ் பேர்ட்ஸ் 2011       லவ் பேர்ட்ஸ் 2011 படம் நியூசிலாந்தில் தயாரான படம்.  Directed by Paul Murphy Produced by Alan Harris Matthew Metcalfe Written by Nick Ward Starring Rhys Darby Sally Hawkins Bryan Brown Music by Tim Prebble Cinematography Alun Bollinger   லவ் பேர்ட்ஸ் 2011 அரசின் ப்ளூகாலர் வேலை ஒன்றில் இருக்கிறார் நாயகன். அவருடைய காதலி அவரை சுத்த வேஸ்ட் என்று சொல்லிவிட்டு அடுத்த ஆளைத் தேடி போய்விடுகிறாள். இவர் அந்த வருதத்தில் இருக்கிறார். அப்போது அவருடைய வீட்டுக்கூரை மீது நீர்ப்பறவை ஒன்று அடிபட்டு வீழ்கிறது. அதனை எப்படி வளர்ப்பது என்று நாயகனுக்கு புரியவில்லை. அதற்காக அருகிலுள்ள வனவிலங்கு காட்சியகத்திற்கு சென்று வருகிறார். அங்கு வேலை செய்யும் பெண்ணுடன் பழக்கம் ஏற்படுகிறது முதலில் பிடிகொடுத்து பேசாத அம்மணி மெல்ல மனம் திறக்கிறார். அவருக்கு மணமாகி இரு பிள்ளைகள் உள்ளனர். ஒருவருக்கொருவர் மனசுக்குள் காதல் இருந்தாலும் சொல்ல தயங்குகின்றனர். இந்த நேரத்தில் நீர்ப்பறவையும் மெல்ல உடல் தேறுகிறது. இவர்களும் காதல் பறவை ஆனார்களா இல்லையா என்பதுதான் கதை. எல்லோரும் செல்லப்பிராணி ஒன்றை வளர்த்த ந

உலகை காக்க சூப்பர்ஹீரோக்கள் எடுக்கும் அதிர்ச்சி தரும் முடிவு! - வாட்ச்மேன் 2009

படம்
            வாட்ச்மேன் Directed by Zack Snyder Written by David Hayter Alex Tse Based on Watchmen by Dave Gibbons Alan Moore Music by Tyler Bates Cinematography Larry Fong     டிசி காமிக்ஸின் அடர்த்தியான அரசியல் பேசும் படம். மார்வெல் ஃபேன்டசியான உலகை உருவாக்கி ஏராளமான சூப்பர் நேச்சுரல் திறன் கொண்ட ஆட்கள் அதில் உள்ளே இருப்பதாக காட்டுவார்கள். டிசி முழுக்க சாதாரண மனிதர்களை வைத்தே உலக அரசியலைப் பேச வைத்திருக்கிறார்கள். படம் 3 மணிநேரம் 35 நிமிடம் ஓடுகிறது என்பதால் பொறுமையாக பார்க்க முடிபவர்கள்தான் பார்க்கவேண்டும். அதிரடியான திருப்பம் வேண்டும் என்பவர்கள் வேறு படத்தைத்தான் பார்க்கவேண்டும். முதல், இரண்டாம் உலகப்போர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த சூப்பர் ஹீரோக்கள் பங்கேற்கிறார்கள். அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் பனிப்போர் நிகழும் காலகட்டம். அப்போது சூப்பர் ஹீரோக்களை யாரும் தேடவில்லை. அவர்களை மக்களும் எதிர்க்கிறார்கள்.  பின்னாளில் அவர்களுக்கு வயதாகிறது. மெல்ல சூழலைப் புரிந்துகொண்டு அனைவரும் ஒதுங்குகிறார்கள். இரவு ஆந்தை,  ஓஸ்மாண்டிஸ் , ரோச்சார்க் என மூவர் மட்டுமே இக்காகட்டத்திலும் நாயகர்களாக வலம்

அணுஆயுதப் போட்டியில் வல்லரசு நாடுகள் ஆடும் சடுகுடு ஆட்டம் ! தி மேன் ப்ரம் அங்கிள்

படம்
          தி மேன் ஃப்ரம் அங்கிள் இயக்கம், கய் ரிட்சி  இசை, டேனியல் மெம்பர்டன் ஒளிப்பதிவு ஜான் மதிசன் நாஜி ஆட்கள் அணு ஆயுத ஏவுகணையை ஏவி தாக்குதல் நடத்த ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பதை உலக நாடுகள் அறிகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இதனை தடுப்பதற்காக தனித்தனியாக ஏஜெண்டுகளை நியமிக்கின்றன. இவர்கள் அனைவரும் அங்கிள் என்ற அமைப்பு மூலம் ஒன்றாக இணைந்து செயல்படு்வதுதான் கதை. இதில் பரஸ்பரம் சந்தேகம் கொண்ட நாடுகளின் உளவாளிகள் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.  வேறுபாடுகளை கைவிட்டு எப்படி ஒன்றாக சேர்ந்து எதிரிகளை வீழ்த்துகிறார்கள் என பொறுமையாக சொன்னால் அதுதான் தி மேன் பிரம் அங்கிள். அமெரிக்க ஏஜெண்டாக ஹென்றி கெவில், அர்மி ஹாமர், விகாந்தர் என அனைவருமே பிரமாதமாக நடித்திருக்கிறார்கள். படம் 007 போல வேகமாக இருக்காது. நிதானமாக பேசியபடியே பல்வேறு காட்சிகள் நகர்கின்றன. இதில் வேகம் கொண்ட காட்சி, திரில்லான காட்சி என்று எதையும் சொல்ல முடியவில்லை. ரஷ்ய ஏஜெண்டிடம் ஹென்றி கெவில் விகாந்தருடன் தப்பி காரில் செல்லும் காட்சி நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலகட்டம் சார்ந்த படம் என்ப

அமெரிக்க அதிபரை மத அடிப்படைவாத தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றும் மெய்காவலன்! - லண்டன் ஹேஸ் ஃபாலன்

படம்
        முழுக்க சண்டைதான். குடும்ப சென்டிமெண்ட் பெரிதாக ஒட்டவில்லை.     லண்டன் ஹேஸ் ஃபாலன் இயக்கம் பாபக் நஜாஃபி   இசை , டிரேவர் மோரிஸ்   ஒளிப்பதிவு எட் வைல்டு இங்கிலாந்திற்கு இறுதிச்சடங்கு ஒன்றிற்காக உலகத் தலைவர்கள் வருகிறார்கள் அவர்களை அடிப்படைவாத தீவிரவாதிகள் போட்டுத்தள்ளுகிறார்கள் . அவர்களின் முக்கியமான குறி , அமெரிக்க அதிபர்தான் . அவர் அவரின் மெய்காவலர் எப்படி ஒற்றைக்கையால் காப்பாற்றி அமெரிக்க கௌரவதை தலையில் முண்டாசாக கட்டி வெல்லுகிறார் என்பதுதான் படம் . பக்கா நமது ஊரில் காப்பான் படம் போல , இந்த படம் அமெரிக்க காப்பான் . ஜெரார்டு பட்லர் படத்தின் தயாரிப்பாளர் - நடிகர் கூட . எனவே படத்தின் பணமும் , பலமுமாக இவரே இருக்கிறார் . நாடு முழுவதும் முடங்கிவிட அரசு அமைப்புகளின் உதவியின்றி தனது நாட்டு அதிபரை காப்பாற்றுகிறார் . எப்படி என்பதுதான் கதை . உள்நாட்டு துரோகிகளால் அழியும் இங்கிலாந்தின் கதை டொக்கு இங்கிலாந்தில் பிற நாட்டு தலைவர்களை தீர்த்துக்கட்டுபவருக்கும் , அமெரிக்காவுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை . இரண்டுபேரும் ஆயுதங்களை விற்பவர்கள் என்பதுதான்

கொள்ளையடித்த பணத்தை ஏமாற்றும் நண்பர்களை களையெடுக்கும் கொஞ்சம் நல்லவன்! - பார்க்கர்

படம்
        பழிக்குப்பழி வாங்கும் நல்ல கொள்கைகள் கொண்ட கொள்ளையன்         பார்க்கர் இயக்கம் டெய்லர் ஹாக்போர்டு மூலக்கதை ஃபிளாஷ்பயர் - டொனால்ட் வெஸ்ட்லா     இசை , டேவிட் பக்லி   ஒளிப்பதிவு மைக்கேல் முரோ அம்யூஸ்மெண்ட் பார்க் லாபத்தில் கொழிக்கிறது . அதில் கிடைக்கும் வருமானத்தை கொள்ளையிட கொள்ளையர்கள் திட்டமிடுகிறார்கள் . திட்டத்தை செயல்படுத்த பார்க்கர் உதவுகிறான் . பார்க்கரின் மாமனார்தான் தனக்கு பதில் பார்க்கரை திட்டத்தில் ஈடுபடுத்துகிறார் . அவரது நண்பர்கள்தன் கொள்ளையர்கள் டீம் . அதில் இணைகிறான் பார்க்கர் . வெற்றிகரமாக அம்யூஸ்மெண்ட் பார்க்கை கொள்ளையடித்து விடுகிறார்கள் . ஆனால் பணத்தை திருடிவிட்டு வரும்போது , மீண்டும் ஒரு கொள்ளை என மாமனாரின் ந ண்பர்கள் பார்க்கரை வற்புறுத்துகின்றனர் . அதற்கு பார்க்கர் , நம் டீல் முடிந்தது . எனக்கு அடுத்த திருட்டு செய்ய இப்போது விருப்பமில்லை என்று சொல்ல நண்பர்களுக்குள் மோதல் வர , பார்க்கர் சுட்டு வீழ்த்தப்படுகிறான் . அவன் ஏரி ஒன்றில் தூக்கி வீசப்படுகிறான் . அவனை வயதான தம்பதியினர் காப்பாற்றுகின்றனர் . மருத்துவமனையிலிருந்து தப்பும் பார்க்