இடுகைகள்

செம்மை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நூல்களைத் திருத்தி செம்மையாக்க ஆசிரியர் தேவையில்லை - எடிடிரிக்ஸ் ஏஐ போதும்!

படம்
          நூல்களை செம்மையாக்க எடிடிரிக்ஸ் ஏஐ போதும்! ஓராண்டு செயற்கை நுண்ணறிவு புரோகிராமுக்கு உழைத்து கடந்த மே மாதம் 2024 அன்று தனது கண்டுபிடிப்பை எழுத்தாளர், ஆசிரியர் மேரு கோகலே வெளியிட்டிருக்கிறார். இவர், பெங்குவின் புத்தக வெளியீட்டு நிறுவனத்தில் நூல்களை செம்மையாக்கம் செய்யும் பதிப்பக ஆசிரியராக பணிபுரிந்தவர். பத்திரிகையாளர்கள் எழுதும் கட்டுரைகள், நூல்கள் என அனைத்துமே நாளிதழ் அல்லது பதிப்பு நிறுவன ஆசிரியரால் பல்வேறு முறை திருத்தி எழுதப்பட்டு, அச்சிடப்பட்டு வெளியாகின்றன. இதில், திருத்தங்களை செய்யும் நூல் மேம்பட உழைக்கும் ஆசிரியர்கள் பெயர் பெரும்பாலும் வெளியிடப்படுவதில்லை. ஆங்கிலத்தில் ஆசிரியர்கள் பெயர்களை வெளியிடுகிறார்கள். தமிழில், அதுபோன்ற நடைமுறை குறைவு. உண்மையாக உழைக்கும் ஆசிரியர்களுக்கு ஊதியமும் சரிவர வழங்கமாட்டார்கள்.  எடிடிரிக்ஸ் என்ற ஏஐ மூலம் எழுத்தாளர் ஒருவர், நூல்களை எளிதாக திருத்தி, பிழைகளை நீக்கிக்கொள்ள முடியும். உலகம் முழுவதுமே தொண்ணூறு சதவீத எழுத்தாளர்களுக்கு, அவர்களின் நூல்களை செம்மைப்படுத்தி திருத்தி தரும் ஆசிரியர்கள் கிடைப்பதில்லை. அந்தக்கு...

கிரிஸ்பிஆர் முறையை வணிகப்படுத்த முடியும் - ஜெனிஃபர் டவுட்னா

படம்
  அமெரிக்காவைச் சேர்ந்த உயிரி வேதியியலாளர், ஜெனிஃபர் டவுட்னா. 2020ஆம் ஆண்டு மரபணு செம்மைப்படுத்தல் மேம்பாட்டிற்காக (Genome Editing) இம்மானுவேல் சார்பென்டியருடன்  சேர்ந்து நோபல் பரிசு பெற்றார்.    வால்ஸ்ட்ரீட்டைச் சேர்ந்த சிக்ஸ்த் ஸ்ட்ரீட் என்ற நிறுவனத்தில் அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள். இப்பணியை நீங்கள் ஏற்றது ஏன்? சிக்ஸ்த் ஸ்ட்ரீட் நிறுவனத்தில், சரியான குழுவை அடையாளம் கண்டிருக்கிறேன் என நினைக்கிறேன். இந்த நிறுவனத்தின் எந்திரக் கற்றல் நுட்பம் மூலம் கிரிஸ்பிஆர் தகவல்களை ஆராய முடியும். எந்திரக்கற்றலும், கிரிஸ்பிஆர் முறையும் ஒன்றாக சேரும்போது ஆற்றல் கொண்டதாக மாறும். இதன் மூலம் மரபணு நோய்களை அறிந்து சிகிச்சை செய்யலாம்.  பெண்களின் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு 2.3 சதவீத அளவுக்கு முதலீடு (Harvard Business Review)  கிடைப்பது பற்றி தங்களது கருத்து?  இந்த ஆய்வுத்தகவல் எனக்கு ஏமாற்றம் தந்தது. நான் ஆய்வுத்துறையில் பல்லாண்டு காலமாக  இருப்பதால் அதிர்ச்சி ஏற்படவில்லை.   கிரிஸ்பிஆர் முறையை வணிக ரீதியாக பயன்படுத்த முடியுமா? 10 ஆண்டுகளுக்க...

இடது

படம்
                        இடது சமூக அரசியல் பண்பாட்டு காலாண்டிதழ் ஆசிரியர் ஓடை.பொ.துரையரசன் மார்க்ஸ் புதிய உலகின் திறவுகோல் பேராசிரியர் ஹிரென் முகர்ஜி தமிழில் : நா. தர்மராஜன் உலகத்தில் கடைசி மனிதன் இருக்கின்றவரை, அவனுடலில் கடைசி மூச்சு இருக்கின்ற வரை அவர்களுடைய பெயர் நிலைத்திருக்கும் என்று சொல்லப்படுகிற தகுதியுடைய பெரியோர்கள் சிலரே. அந்த சிலரில் கார்ல் மார்க்ஸ் தலைசிறந்தவர். அவர் பிறந்தநாள் (1818 மே 5) உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. ‘’உலகத்தில் முதலாளிகளும் தொழிலாளிகளும் இருக்கின்றவரை நமக்கு முன்னாலிருக்கின்ற புத்தகத்தைப் போல தொழிலாளர்களுக்கு அதே அளவு முக்கியத்துவத்தைக் கொண்ட வேறு புத்தகம் இதுவரை வெளிவரவில்லை’’  வாழ்நாள் முழுவதும் மார்க்சினுடைய நண்பராக சகாவாக இருந்த ஏங்கெல்ஸ் ‘மூலதனத்தின்’ முதல் தொகுதியின்(1867) விமர்சனத்தை இப்படித்தொடங்கினார். இந்த வார்த்தைகள் முதன்முறையாக எழுதப்பட்டபோது எவ்வளவு உண்மையோ அதே அளவுக்கு இன்றும்கூட உண்மையாக இருக்கின்றன. ...