இடுகைகள்

30ஆவது நினைவுதினம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சத்யஜித்ரே - மறக்கமுடியாத சினிமாக்கலைஞன்

படம்
  சத்யஜித்ரேவுக்கு நிறைய அடைமொழிகள் உண்டு. சினிமா இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், எழுத்தாளர், பாடலாசிரியர், இதழ் ஆசிரியர், ஓவியர், சித்திர எழுத்துக்கலைஞர், இசை அமைப்பாளர் என பல்வேறு விஷயங்களில் ஆர்வம் கொண்டவர்.  1921ஆம் ஆண்டு மே 2 அன்று பிறந்தவர், சத்யஜித்ரே. வங்காளத்தின் கொல்கத்தா நகரில் பிறந்தார். இவரது குடும்பமே அன்று வங்காளத்தில் புகழ்பெற்றதுதான். பத்து தலைமுறையாக புகழ்பெற்ற மனிதர்கள் அந்த குடும்பத்தில் இருந்து வந்தனர். சத்யஜித்ரேவின் தாத்தா, உபேந்திர கிஷோர் ரே எழுத்தாளராக இருந்தார். கூடுதலாக, அன்றைய பிரம்ம சமாஜத்தின் தலைவராகவும் இருந்தார். சத்யஜித்ரேவின் தந்தை ஓவியராக இருந்தார். இவர் குழந்தைகளின் புத்தகங்களுக்கு நூல்களுக்கு படம் வரைந்துகொண்டிருந்தார்.  ரே, பாலிகுங்கே அரசுப்பள்ளி மேல்நிலைப்பள்ளியில் படித்தார். கொல்கத்தாவில் இருந்த பிரசிடென்சி கல்லூரியில் பொருளாதாரப் பாடத்தில் பட்டம் பெற்றார்.  ரேவுக்கு கலைகளின் மீது பெரும் ஆர்வம் இருந்தது. தொடக்கத்தில் இருந்தே வரைவதில் ஆர்வம் கொண்டிருந்தார். இதன் காரணமாக, விளம்பர ஏஜென்சி ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார்.  இதன் மூலமாக வங்காள மொழி நூல்கள