டெக் நிறுவனங்கள் அதீத பணபலத்தை வைத்து அரசை, ஒழுங்குமுறை அமைப்புகளை வளைத்து வருகின்றன!
amba kak ai researcher இந்தியாவில் இணைய சமத்துவம், அந்தரங்க பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் பணியாற்றியிருக்கிறீர்கள். இப்போது ஏஐ தொடர்பான கொள்கையில் சர்வதேச அளவில் செயல்பட்டு வருகிறீர்கள். டைம் இதழின் ஏஐ செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் இடம்பெற்றது ஆச்சரியமளிக்கிறதா? தொழில்நுட்ப கொள்கை தொடர்பாக பத்தாண்டுகளுக்கு மேலாக வேலை செய்து வருகிறேன். இப்போது என்னைப் பற்றி இதழ்களில் செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. பொதுமக்களின் நலன் கருதிய கொள்கையில் வேலை செய்கிறேன். ஏஐ நவ் இன்ஸ்டிடியூட், டெக் நிறுவன உரிமையாளர்களை நோக்கி கடுமையாக கேள்விகளை முன்வைத்துவருகிறது. பல்வேறு அரசுகளிடம் லாபி செய்து வருவதால், முறைப்படுத்தும் அமைப்புகள் டெக் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. டெக் உலகில் ஜனநாயகத்தன்மையை கொண்டு வர நினைக்கும் பலருடன் இணைந்து கொள்கைகளை வடிவமைக்க உழைத்து வருவதில் மகிழ்கிறேன். சாம் ஆல்ட்மனை, மேசியா என்று டெக் தளத்தில் புகழ்கிறார்களே? இங்கு நாம் ஓப்பன் ஏஐ பற்றி பேசவேண்டியதில்லை. மேசியா என ஒருவரை புகழ்வதெல்லாம் மார்க்கெட்டிங் உத்திகள்தான். டிரேட் கமிஷன்...