இடுகைகள்

தினமலர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உறவின் நோக்கமே சுயநலம்தானா? - கடிதங்கள்

படம்
              கடிதங்கள் 3.1.2021 அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக உள்ளீர்களா ? சொந்த ஊருக்கு சென்றதில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என நினைக்கிறேன் . சென்னையில் இருக்கும் இந்த நேரத்தில் உங்களை நான் சந்திக்க முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது . கல்வி வேலை வழிகாட்டியில் வேலை செய்த வெங்கடசாமியுடன் இப்போது பேசுவது இல்லை . தேவையைப் பொறுத்தே உறவுகள் என்பதை அவர் தீவிரமாக நம்புகிறார் . எனக்கு அதில் உடன்பாடு இல்லை என்பதால் விலகிவிட்டேன் . அது உண்மையாக இருக்குமோ என்னமோ , எனக்கு ஏற்றுக்கொள்ள கடினமாக உள்ளது . 2021 ஆம் ஆண்டில் இழப்புடன்தான் சம்பளக்கணக்கு தொடங்கியுள்ளது . பொதுமுடக்க காலம் என்பதால் இரண்டாயிரம் ரூபாயை வெட்டிவிட்டார்கள் . மீதியுள்ள பணத்தில்தான் ஊருக்கு பணம் அனுப்புவது , வாடகை , சாப்பாடு ஆகியவற்றை சமாளிக்க வேண்டும் . நீங்கள் வேலை செய்யும் பத்திரிகை நிறுவனத்தில் இப்போது பிடிக்கும் பிடிமானங்களைத் திருப்பித் தர வாய்ப்புள்ளது . ஆனால் எங்களுக்கு அப்படியான நிலைமை இருக்குமா என்று தெரியவில்லை . எங்கள் தலைவர் எங்களுக்கான பரிந்து பேசுவார் என

தண்ணீர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கலாம்?

படம்
  தண்ணீர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கலாம்? சென்னைக்கு நீர் வழங்கும் பல்வேறு ஏரிகள் மழை பொய்த்துப் போனதால் வறண்டுபோய்விட்டன. மக்கள் அரசு வழங்கும் குடிநீருக்காக குடங்களுடன் காத்திருக்கின்றனர். இந்தச்சூழலை எப்படி சமாளிக்கலாம் என கணினியும் கீபோர்டுமாக யோசித்தோம்.  1.வாசல் தெளிக்க பக்கெட் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கவேண்டும. அதற்கு பதில் சுப நிகழ்வுகளில் இளம்பெண்கள் பன்னீர் தெளிக்கிறார்களே அதே பாட்டிலைப் பயன்படுத்தலாம்.  2.ஹோட்டல்களில் சாப்பிடச்செல்லும்போதே, சாப்பாட்டை நெஞ்சுவரை சாப்பிடுங்கள். மீதி மூக்கு வரை உள்ள இடத்திற்கு நீரை தம் பிடித்து குடியுங்கள். சவாலில் ஜெயித்தால் கேன் வாட்டர் காசு மிச்சம்.  3.அகன்ற வாய் கொண்ட தண்ணீர் பாட்டில்களில் குடித்தால்தானே நீர் அதிகம் செலவாகும்? வீட்டுக்கு வரும் விருந்தினருக்குக் கூட பக்கத்து பிளே ஸ்கூல் பாப்பாவிடம் அபேஸ் செய்த ஸ்ட்ரா போட்ட பாட்டில், ஃபீடிங் பாட்டிலில்  நீர் நிரப்பி கொடுத்து வரவேற்கலாம்.   4.தண்ணீர்க்குடம் வரிசையில் நின்று நீர்பிடித்து வருவது ஒலிம்பிக் பதக்கம் வெல்வதை விட கஷ்டம். எனவே, அதிக ஏசி மாட்டியுள்ள வீடுகளை குறிவைத்து செல்லுங்கள்.

செய்தி ஜாம்!

படம்
செய்தி ஜாம்! ஆஹா! ராணுவப்பள்ளி சாதனை! ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்தும் பள்ளி தேர்ச்சியில் சாதனை செய்துள்ளது. அண்மையில் வெளியான 10ஆம் வகுப்பு தேர்வில், இப்பள்ளி மாணவர்கள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். ராணுவம், அங்கு 43 பள்ளிகளை நடத்திவருகிறது. அசத்தல்! குப்பை லட்சியம் நேபாள அரசு, ராணுவப் படைகளின் உதவியுடன் எவரெஸ்ட் சிகரத்தைத் தூய்மைப்படுத்தத் தொடங்கியுள்ளது. ஏப்ரல் 14 தொடங்கிய இப்பணியில் 5 ஆயிரம் கி.கி. கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. 45 நாட்களில் 10 ஆயிரம் கி.கி கழிவுகளை அகற்றுவதே இத்திட்ட நோக்கம். எச்சரிக்கை! பெங்குவின்கள் இனப்பெருக்கத்திற்கு இடமின்றி அழிந்து வருவது, பிரிட்டிஷ் அன்டார்டிக் ஆய்வு (BAS) மூலம் தெரியவந்துள்ளது. 2016 ஆம் ஆண்டு வெப்பமயத்தால், வெடல் கடல் பகுதியருகே உள்ள ஹாலே பே காலனி எனும் பெங்குவின்களின் வாழிடம் சிதைந்தது. இதில் 10 ஆயிரம் பெங்குவின்கள் இறந்தன. அச்சச்சோ... பரவும் அம்மை! இந்த ஆண்டின் இருமாதங்களில் 42 ஐரோப்பிய நாடுகளில் 34 ஆயிரத்து 300 பேர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அல்பேனியா, ரோமானியா, உக்ரைன் ஆகிய நாடுகளில் இந்நோ