இடுகைகள்

அரிய ரத்தம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரிதினும் அரிய ரத்தம்! - எப்பிரிவு தெரியுமா?

படம்
அரிதினும் அரிய ரத்த வகைகள்! ரத்த வகைகளை பொதுவாக நீங்களே அறிவீர்கள். ஏ, பி, ஓ, ஏ பாசிட்டிவ், பி பாசிட்டிவ்,  நெகட்டிவ் என குறிப்பிடுவார்கள். இதனைக் கூற இதிலுள்ள ஆன்டிஜென் விஷயங்கள்தான் காரணம். ரத்த செல்களின் மேல் கோட்டிங்காக இருப்பதுதான் ஆன்டிஜென்கள். இதில் ஏ,பி முதன்மையானவை. இதில் ரீசஸ் டி எனும் ஆன்டிஜென் அதிகம், குறைவு என்பது மட்டுமே கணக்கில் கொண்டு ரத்த வகை பிரிக்கிறார்கள். உலகளவில் 35 ரத்த குரூப்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் இத்தனை வகை இருந்தால், அதனைச் சொன்னால் நோயாளிக்கு கூடுதலாக காய்ச்சல் இரண்டு டிகிரி எகிற வாய்ப்பிருக்கிறது. எனவே சுருக்கமாக அ,ஆ போல ஏ,பி,ஓ என்று குறிப்பிடுகின்றனர். நூற்றுக்கணக்கான ஆன்டிஜென்கள் நம் ரத்தத்தில் உண்டு. அதில் நாம் 35 வகைகளை மட்டுமே ரத்தப்பிரிவாக வரிசைப்படுத்தியுள்ளோம். உங்களது ரத்தப்பிரிவிலுள்ள ஆன்டிஜென், உலகிலுள்ள 99 சதவீத மனிதர்களிடையே இல்லாமல் இருந்தால் நீங்கள்தான் அடுத்த ஸ்பைடர்மேன். ஆம். அரிதினும் அரியவர். ரீனல்(Rhnull ) எனும் ரத்தப்பிரிவு உலகிலேயே அரிதானது. காரணம் இந்த ரத்தப்பிரிவுக்கு ரத்தம் அளிக்க உலகிலேயே ஒன்பது பேர்தான் தயாரா