இடுகைகள்

தாக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பூமி மீது மனிதர்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவு!

படம்
  பூமி மீது மனிதர்கள் ஏற்படுத்திய தாக்கம்! உலகம் தோன்றியது முதல் பல்வேறு சூழல் மாற்றங்களை எதிர்கொண்டு வந்திருக்கிறது. வளமான நிலம் வளமிழந்து பாலையாவதும், பாலையான மண் மெல்ல வளம் பெறுவதும் இயற்கையின் சுழற்சிதான். இப்படி மாறுவதில் மனிதர்களின் பங்களிப்பு என்ன என்பதை புவியியல் வல்லுநர்கள் கண்டறிய முயன்று  வருகின்றனர். இதற்கு ஆந்த்ரோபோசீன் (Anthropocene) என்று பெயர்.  நிலத்தில் மனிதர்கள் ஏற்படுத்திய தாக்கத்தை அளவிடுவதன் மூலம் வெப்பமயமாதல், மாசுபாடு, வேதிப்பொருட்களின் பாதிப்பு, அணு ஆற்றல் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களை அறியலாம்.  கடந்த 11,650 ஆண்டுகளாக பூமியில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு,  மனிதர்கள் காரணம் என புவியியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.  இதனை சில மானுடவியல் ஆய்வாளர்கள் மறுக்கிறார்கள். அணு ஆயுத வெடிப்பு,  நிலக்கரியை எரிப்பது, பிளாஸ்டிக் துகள்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்களின் தாக்கத்தை அளவிடுவதே சரி என்கிறார்கள். இவ்வகையில்  1950ஆம் ஆண்டிலிருந்து மனிதர்களின் தாக்கத்தை அளவிடலாம் என்கிறார்கள். வாதங்களை நிரூபிக்க, மனிதர்கள் தாக்கம் கொண்ட  இடங்களைக் கண்டுபிடிப்பது அவசியம். கடந்த 2021ஆ