இடுகைகள்

டெக்- பேனா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பேனாமூடியில் துளையிடப்படுவது ஏன்?

படம்
பேனாமூடியில் துளை ! ரினால்ட்ஸ் , ரோரிடோ , செல்லோ , லான்சர் என பால்பாய்ண்டுகள் இங்க் பேனாக்களை முந்தி மார்க்கெட்டை ஜெயித்துள்ளன . அதேசமயம் தீவிர சிந்தனையில் பேனா மூடியில் முறுக்கு பிழிவதை நாமே நிறுத்தாதபோது பள்ளி பொடிசுகள் எப்படி நிறுத்துவார்கள் ? திறந்த பால்பாய்ண்டை மூட மூடியை பக்கத்து சீட்டுக்காரரின் பாக்கெட்டில் தேடும் சிட்டிசன்களுக்கு எந்த பிரச்னையில்லை . ஆனால் பள்ளி மாணவர்கள் அதனை விளையாட்டாக விழுங்கிவிடுவது ஆபத்தாக மாறியது . கிரிஸ்டல் பென்ஸ் என்ற நிறுவனம் பேனா மூடியில் துளையிட்டு விதிகளை பின்பற்றிவருகிறது . ஏன் ? ISO 11540 விதிகள் இதனை பரிந்துரைப்பதால்தான் . 161 நாடுகளில் பேனா மூடிகளுக்கான துளை விதிகள் அமுலிலுள்ளன . அப்படியிருந்தும் இங்கிலாந்தில் பேனா மூடியை விழுங்கி சிறுவன் இறந்துபோனான் . பேனா மூடியை துளையிடுவதால் விழுங்கினாலும் ஒரு நிமிடத்திற்கு 8 லிட்டர் காற்றை சுவாசிக்கமுடியும் . அதற்குள் சிகிச்சையளித்து காப்பாற்றவும் வாய்ப்பிருக்கிறது அல்லவா ? அதற்காகத்தான் . 2012 ஆம் ஆண்டு 1280 சிறுவர்களிடம் செய்த ஆய்வில் 34 பேர் பேனா மூடிகளை தவறுதலாக வ