இடுகைகள்

ஆல்பெர்ட் பாண்டுரா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வன்முறையை ஒத்திகை செய்து பார்த்து பின்தொடரும் குழந்தைகள்!

படம்
  albert bandura குழந்தைகளின் வன்முறை பற்றி பார்த்தோம். வன்முறையை ஒருவர் செய்வதைப் பார்த்து நாம் கற்கிறோமா அல்லது பொழுதுபோக்காக பார்க்கும் திரைப்படங்கள், விளையாடும் விளையாட்டுகளில் இருந்து கற்கிறோமா என்ற விவாதம் எப்போதும் உள்ளது. ஆல்பெர்ட் பாண்டுரா, குழந்தைகளின் மனதில் வன்முறை எப்படி படிகிறது என்பதை அறிய பொம்மை சோதனை ஒன்றை நடத்தினார். 36 சிறுவர்கள், 36 சிறுமிகள் என கூட்டி வந்து அவர்களை மூன்று பிரிவாக பிரித்தார். இதில், ஒரு குழுவுக்கு பெரியவர்கள் பொம்மையை அடித்து உதைத்து திட்டுவது ஆகியவற்றை செய்வதைப் பார்க்க வைத்தனர். அடுத்து, இன்னொரு பிரிவினருக்கு பொம்மையை மென்மையாக கையாள்வதைக் காட்டினர். இதில் வயதில் மூத்தவர்கள் பொம்மைகளை திட்டி, அடித்து உதைத்து சேதப்படுத்துவதைப் பார்த்த குழந்தைகள் அதை அவர்களும் நினைவில் வைத்துக்கொண்டு திரும்ப செய்தனர்.  டிவி சேனல்கள், திரைப்படங்கள், கணினி விளையாட்டுகளில் முன் அறிவிப்போடு வன்முறையான அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. இவற்றை ஒருமுறை விளையாடுபவர்கள் அதிலுள்ள சுவாரசியத்திற்காக திரும்ப விளையாடுவார்கள். இப்படி வெற்றியடைந்த திரைப்படங்கள், விளையாட்டுகள், டிவி தொட

குழந்தைகளின் மனதில் வளரும் வன்முறை - ஏன் எப்படி எதற்கு?

படம்
  ஆல்பெர்ட் பண்டுரா ஆல்பெர்ட், குழந்தைகளின் மனதில், செயலில் வெளிப்படும் வன்முறையை ஆராய்ந்தார். அன்றைய காலத்தில் பலரும் இதைப்பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. பெரியவர்கள் செய்யும் செயல்களைப் பார்த்து அதைப்போலவே தாங்களும் செய்ய முயற்சி செய்கிறார்கள் என ஆல்பெர்ட் கூறினார். இந்தவகையில் அவர்களின் வன்முறை செயல்பாடுகள் போலச்செய்தல் என்ற முறையில் மனதில் பதிகிறது. அதை அவர்கள் நினைத்துப் பார்த்து வாய்ப்பு கிடைக்கும்போது அதை செயல்படுத்திப் பார்க்கிறார்கள். ஒரு மனிதனின் செயல்பாடு என்பது பிறரைப் பார்த்து மாதிரியாக கொண்டே உருவாகிறது என்றார்.  ஆல்பெர்ட்டின் காலத்தில் குழந்தைகள் பரிசு கொடுப்பது, தண்டனை அளிப்பது வழியாக பல்வேறு விஷயங்களைக் கற்கிறார்கள் என்று நம்பப்பட்டது. ஆல்பெர்ட் இதற்கு மாற்றாக, ஒருவரைப் பார்த்துத்தான் பிறர் குண இயல்புகளை பழக்க வழக்கங்களைக் கற்கிறார்கள். இதற்கு கவனம், ஒத்திகை பார்ப்பது, ஊக்கம், திரும்ப உருவாக்குவது ஆகிய அம்சங்கள் முக்கியம் என்று கூறினார். ஒரு செயலைப் பார்த்து அதை மனதிற்குள் ஓட்டிப்பார்க்கவேண்டும். பிறகு, ஊக்கம் கிடைக்கும்போது அதை திரும்ப செய்துபார்க்க முடியும்.  ஆல்பெர்ட்