இடுகைகள்

போலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

15 நொடி குரல் இருந்தால் போதும்- பேச்சு, பாட்டு எதையும் உருவாக்க முடியும்!

படம்
  ஏஐ மூலம் எந்த குரலிலும் எந்த மொழியிலும் பேசலாம்! ஓப்பன் ஏஐ நிறுவனம், அடுத்த சர்ச்சைக்குரிய தயாரிப்பை உருவாக்கியுள்ளது. இதன்படி, ஏதேனும் ஒருவரின் குரலைக் கொடுத்தால், அதை வைத்து தேசியகீதம் பாடச்சொன்னால் அல்லது குத்துப்பாட்டு பாடச்சொன்னால் கூட அதைச் செய்யமுடியும். மார்ச் 29 வெளியாகியுள்ள இந்த குரல் எஞ்சினில் ஒருவர் பதினைந்து நொடிக்கு குறையாத ஆடியோ கிளிப் ஒன்றை பதிவேற்றினால் போதும். அதை வைத்து, பல்வேறு மொழிகளில் அந்த குரலை பேச வைத்து பாடவைத்து மஜா செய்ய முடியும். தற்போதைக்கு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு குரல் எஞ்சின் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.  குழந்தைகளுக்கு குரல் வழியாக பாடங்களை எளிதாக நடத்தலாம். மாற்றுத்திறனாளிகளுக்கும் இது பிரயோஜனமாக இருக்கும். எழுத்து வழியாக ஒலி என்ற நோக்கத்தில் குரல் எஞ்சின் செயல்படுகிறது. மாணவர்களுக்கு பல்வேறு குரல் சாம்பிள்களை வைத்து குரல் பதிவுகளை உருவாக்கி பாடங்களை நடத்த முடியும். படிக்கத் தெரிந்தவர், தெரியாதவர் என அனைவருக்கும் பயன்படும்படியான படைப்பு இது. இதன் தயாரிப்பில் சாட்ஜிபிடி 4 பயன்பாடும் உள்ளது.        2022ஆம் ஆண்டு தொடங்கி, குரல் எஞ்சின் ஆராய்ச்சி

டீப்ஃபேக் வீடியோக்கள் ஏற்படுத்தும் பதற்றம்!

படம்
  சில மாதங்களுக்கு முன்னர் சினிமா நடிகையான ராஷ்மிகாவின் டீப்ஃபேக் வீடியோ ஒன்று வெளியானது. வீடியோ என்றதும் ரெட் ட்யூப், ஜாவ் குரு போல இருக்கும் என எதிர்பார்க்கவேண்டாம். கருப்பு நிற பனியன் அணிந்த பெண் லிஃப்டில் ஏறுகிறார். அவரின் மார்பகங்கள் வெளியே தெரியும்படியான உடை. அவர் வேறு யாருமல்ல ராஷ்மிகாதான். இந்த வீடியோ இணையத்தில் பரவியதும். அது தான் அல்ல என்று நடிகை சமூக வலைத்தளத்தில் தனது எதிர்ப்பை பதிவிட்டார்.  ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரின் புகைப்படத்தை பிறர் பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்த வேண்டுமெனில் அதற்கு அவர் குறிப்பிட்ட பணத்தைக்கூட கொடுக்க நேரிடலாம். இதெல்லாம் தொடர்புடைய நபர் சார்ந்த விஷயம். விவகாரம். இதில் பிறர் கருத்து கூற பெரிதாக ஏதுமில்லை. அனிமல் என்ற இந்தி திரைப்படம் வெளிவருவதற்கு முன்னர்தான் டீப்ஃபேக் வீடியோ வெளியானது. அந்த படத்தில் ராஷ்மிகா, வாங்கிய காசுக்கு ஏற்ப நாயகனுடன் தெறமை காட்டியிருந்தார். அதைப் பார்த்தவர்கள் டீப்ஃபேக் வீடியோவே பரவாயில்லை என கமெண்ட் அடித்தனர். ஒருவரின் புகைப்படம், வீடியோவைப் பயன்படுத்த அனுமதி பெறுவது அவசியம். காப்புரிமை போன்றே இதை அணுக வேண்டும்.  க

12.மோசடி நிரந்தரம், முறைகேடு ஒரு சந்தர்ப்பம் - மோசடி மன்னன் அதானி

படம்
  ஆதி குழுமம், அதானி குழுமத்திற்கு நிலக்கரியை விநியோகம் செய்யும் நிறுவனமாகும். நீண்டகாலமாக அதானி குழுமத்தின் வாடிக்கையாளராக உள்ளது. ஆதி குழுமத்தின் முதலீட்டாளர் பெயர், உட்கர்ஷ் ஷா. இவர், கௌதம் அதானியின் முப்பதாண்டு கால நண்பர் என எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை கட்டுரை தகவல் கூறுகிறது. 2020ஆம் ஆண்டு கணக்குப்படி, ஆதி குழுமத்தின் வருவாய், 9 மில்லியன் டாலர்களாகும். மொத்த லாபம் 97 ஆயிரம் டாலர்கள் என்ற தகவல், நிதி தொடர்பான ஆவணங்களிலிருந்து தெரிய வருகிறது. அதானி குழுமத்தில் உள்ள நான்கு நிறுவனங்கள், ஆதி குழுமத்திற்கு 87.4 மில்லியன் டாலர்களை கடனாக வழங்கியுள்ளது. ஆனால் இதுபற்றி விசாரித்ததில் பணம் கடன் கொடுக்கப்பட்டதற்கான எந்த ஆவணங்களும் இல்லை. இத்தனைக்கும் கடன் கொடுத்த பல நிறுவனங்கள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டவை. ஆதி குழுமத்தின் வருமானம், லாபம் அடிப்படையில் அந்த நிறுவனம், பிற நிறுவனத்திடமிருந்து கடனைப் பெற்றதே தவறான நடவடிக்கை. பொருளாதார ஆலோசகர் எவரும் கடன் வாங்கும் யோசனையை ஏற்கவே மாட்டார்கள்.   ஆதி குழுமம், வாங்கிய கடனைக் கட்ட900 ஆண்டுகள் தேவைப்படுகிறது. அப்படி கடினமாக உழைத்தாலும் கூட அச

10.வணிகமே செய்யாமல் பெரும்தொகையைக் கடன் கொடுக்க முடியும் - மோசடி மன்னன் அதானி

படம்
  சிங்கப்பூரில் வினோத் அதானிக்கு சொந்தமான நிதி நிறுவனம் உள்ளது. 2013-2015 காலகட்டங்களில், இந்த நிறுவனம் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு அதிக லாபம் காட்டும் விதமாக பயன்படுத்தப்பட்டது.   2013-2015ஆம் ஆண்டு கார்மிசல் அண்ட் போர்ட் சிங்கப்பூர் ஹோல்டிங்க்ஸ் லிட். நிறுவனத்தை வினோத் அதானி நிர்வாகம் செய்து வந்தார். (ப.2) இந்த நிறுவனத்தில் இருந்து மூன்றுநிதி   பரிவர்த்தனைகள் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மொத்த வருமானம் அதிகரித்தது. சொத்துகளுக்கு ஏற்படும் சேதம் அடிப்படையில் பெரிய நிறுவனம் என்ற அங்கீகாரத்தை இழக்கும் நிலையை அதானி குழுமம் நிதி பரிவர்த்தனை மூலம்தான் சமாளித்தது. ஆஸ்திரேலியாவில் உள்ள சுரங்கம், ரயில்வே, துறைமுகம் ஆகிய நிறுவனங்களுக்கு நிதி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டன. ஆனால் இந்த நிதி பரிவர்த்தனை அதானி என்டர்பிரைசஸ் நிறுவனங்களின் ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. ஹிண்டன்பர்க் அமைப்பு செய்த ஆய்வில் நிதி பரிவர்த்தனைகளைச் செய்த நிறுவனம் சிங்கப்பூரைச் சேர்

திருடவே முடியாத டிசைன் இது!

படம்
        cc          திருடவே முடியாத டிசைன் இது ! உலகளவில் பென்சில் , பிஸ்கெட் டிசைன் , பைக் , கார் என பல்வேறு பொருட்களின் டிசைன்களை எளிதாக பலரும் திருடிவிடுவது எப்போதும் பிரச்னையாகவே இருக்கிறது . இதனால் பன்னாட்டு நிறுவனங்களின் தங்களின் நிறுவனப் பொருட்களைப் போல யாராவது டிசைன் செய்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பொருட்களின் மீதே அச்சிட்டிருப்பார்கள் . போலியான பொருட்கள் அந்தளவு வேகமாக சந்தையில் பரவி வருகின்றன . இதனால்தான் தற்போது யாரும் திருடவே முடியாத காப்பி செய்ய முடியாத வடிவமைப்பை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர் . ஜப்பானைச் சேர்ந்த ட்ஸூபா பல்கலைக்கழகத்தைச் சேர்நத ஆராய்ச்சியாளர்கள் இந்த புதுமையான பேட்டர்னை உருவாக்கியுள்ளனர் . ஓவியங்களில் மிக நுட்பமான முறையில் பதிக்கப்படும் மைக்ரோபேட்டர்ன்களைக் கண்டுபிடிபபது கடினம் . இதன்மூலம் அசல் , நகல் எதுவென எளிதாக கண்டுபிடித்துவிட முடியும் . மிக சிக்கலான நிறங்களைக் கொண்டுள்ள பேடடர்ன் என்பதால் இதனை எளிதில் யாரும் கண்டுபிடிக்க முடியாது என்று உறுதியாக பேசுகிறார் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் யோஹெய் யமமோட்டோ .

சாக்கடை நாற்றம் அடிக்கும் சமூகநீதி சந்நிதானங்கள்! - அன்புள்ள அப்பாவுக்கு...

படம்
chambre237.com 5 அன்புள்ள அப்பாவுக்கு, நலமாக இருக்கிறீர்களா? ராமகிருஷ்ண மட மருத்துவமனையில் சில சோதனைகளை செய்ய வேண்டியுள்ளது. மஞ்சள் காமாலைக்கான சிறப்பு சிகிச்சை தேவையா இல்லையா என்பதை முடிவு செய்ய இந்த சோதனைகள் தேவை என்று சொல்கிறார்கள். முத்தாரம் வார இதழ் இனி நம் வீட்டிற்கு வரும். அதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறேன். உங்கள் பெயரிலேயே இதழ் வரும். சம்பளம் 4ஆம் தேதி கிடைத்தது. உள்ளாடைகள், பழங்கள் வாங்கினேன். அறைக்கும், அலுவலகத்திற்குமான தொலைவு வருந்தும்படியான பிரச்னையாகவே இருக்கிறது. மயிலாப்பூரில் அறை கிடைக்குமா என்று பார்க்கவேண்டும். குங்குமத்தில் நான் ஏதும் எழுதவில்லை. அப்படி எழுதினால் அந்த இதழை நான் உங்களுக்கு அனுப்பி வைப்பேன். தலித் முரசு இதழில் மீதிப்பணம் வாங்குவதற்கு பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. தலித்துகளே கூட குறிப்பிட்ட நிலைக்கு வந்ததும்,   அடுத்தவர்களை சுரண்டி பிராமணர்களைப் போலவே மாறிவிடுகிறார்கள். பேசுவது சமூகநீதி என்றாலும் அவர்களின் சிந்தனைகள், பேச்சு எல்லாவற்றிலும் சாக்கடை நாற்றம் அடிக்கிறது. ச.அன்பரசு 6.3.16