இடுகைகள்

பட்ஜெட் 2019 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பட்ஜெட் 2019 - ஏறுது விலை

படம்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் நாம் அறிய வேண்டியது என்ன? 2019 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். இம்முறை வசதி படைத்தவர்களுக்கான வரி அதிகரித்துள்ளது. அதனால் மாத சம்பளதார ர்களுக்கு என்ன பிரயோஜனம்? மனசளவில் ஒரு திருப்திதான். வேறொன்றுமில்லை. அரசின் வரிவிதிப்பால் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை அதிகரிக்க இருக்கிறது. நீங்கள் ஒரு பைக்கை வைத்திருந்து அதற்கு 5000 ரூபாய் செலவழித்தால், இனி கூடுதலாக ரூ.180 செலவழிக்க வேண்டியிருக்கும். இறக்குமதியான இத்தாலி டைல்ஸ்களால் வீட்டை அலங்கரிக்க ஆசையா? ஆசைக்கு வரி கிடையாது. ஆனால் டைல்ஸ் வாங்கினால் வரி உண்டு. சதுர அடிக்கு 2500 என்று முன்னர் விற்ற டைல்ஸ் இனி ரூ. 500 கூடுதலாக 3 ஆயிரம் ரூபாயாக விலை எகிறும். அவ்வளவேதான். இதன் பொருள் 400 சதுர அடியை மார்பிளால் அலங்கரிக்கு உங்களுக்கு 12 இலட்சம் தேவை. தங்கம் வாங்க நினைத்திருக்கிறீர்களா? தங்கம், வெள்ளி, பிளாட்டினம் என அனைத்து நகை வகைகளுக்கும் 2.5 சதவீத வரி விதிக்கப்பட்டிருக்கிறது. பத்து கிராம் ஸ்விஸ் தங்க நாணயம் வாங்க 36, 400 ரூபாய்