இடுகைகள்

பாலின பாகுபாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தொல் வரலாற்றுப் பெண்களின் பங்களிப்பை, மேற்குலகின் ஆய்வாளர்கள் ஏற்க மறுக்கிறார்கள்! - எழுத்தாளர் ஏஞ்சலான சைனி

படம்
  எழுத்தாளர் ஏஞ்சலா சைனி ஆண்களின் மேலாதிக்கம் எப்போது தொடங்கியிருக்கும்?   விவசாயம் செய்யத் தொடங்கியபோதா அல்லது தனிச்சொத்துடைமை உருவானபோதா, புதிய மாகாணங்கள் உருவானபோதா, அடிமை முறை தொடங்கியபோதா இப்படி நிறைய கேள்விகளை மானுடவியலாளர்கள் தங்களுக்குள் கேட்டுக்கொண்டு அதற்கான பதில்களை தேடுகிறார்கள். தேடலை விளக்கி ஏராளமான நூல்களையும் எழுதியிருக்கிறார்கள். அந்த வகையில் ஆய்வாளர் ஏஞ்சலா சைனி, 'தி பேட்ரியாச் – ஹவ் மேன் கேன் டூ ரூல்' என்ற நூலை எழுதியிருக்கிறார். பாலின பாகுபாடு, ஆண் மேலாதிக்கம் ஆகியவற்றைப் பற்றிய கருத்துகளை முன்வைத்திருக்கிறார். மேலும், மரபணு, தொல்பொருளாய்வு ஆகியவை தொடர்பாக எழுந்த யூகங்களுக்கும் பதில் கூறியுள்ளார். மேலாதிக்கம் பற்றி ஆராய்ச்சி செய்யத் தூண்டிய காரணங்கள் என்ன? கடந்த நாற்பது ஆண்டுகளாக மேலாதிக்கம் கொண்ட சமூகம் பற்றி மிக குறைவாகவே எழுதியிருக்கிறார்கள். இது எனக்குஆச்சரியமான தகவலாக இருந்தது. பெண்ணிய இலக்கியங்களில், தொடர்ந்து ஆண் மேலாதிக்கம் பற்றிய அழுத்தங்களை பதிவுசெய்திருந்தனர். இதைப் பற்றிய வேறுபாடுகளை யோசித்தேன்.    எனவே, நான் மேலாதிக்கம் பற்றிய முழுமையான

கல்வி உங்களுக்கு நிறைய வாய்ப்புகளை வழங்கும் - பூமி பட்னேகர்

படம்
நேர்காணல் பூமி பட்னேகர், சினிமா நடிகை வணிகம்சார்ந்த படங்களிலும் கலை சார்ந்த படங்களிலும் சிறப்பாக நடித்துவருபவர் இவர். படத்தின் உண்மைத் தன்மைக்கு சிறப்பாக மெனக்கெடும் அரிய நடிகை. நடிகையாகவேண்டும் என்று தோன்றியது எப்போது? நடிப்பதிலும், அழகான ஆடைகளை அணிவதிலும் சிறிய வயதிலிருந்து எனக்கு ஆர்வம் இருந்தது. என் அம்மா இதற்காகவே என்னை வைத்து நிறைய புகைப்படங்களை எடுக்கச் செய்தார். என் தந்தைக்கு நான் வெளியுறவுத்துறை சார்ந்த பதவியில் இருக்கவேண்டும் என்று ஆசை. உங்களுக்கு ஆண் நடிகர்களுக்கு தரப்படும் சம்பளத்தில் 5 சதவீதம்தான் தரப்படுவதாக கூறினீர்கள்? ஆம் அது உண்மைதான். அப்படித்தான் நான் படங்களில் நடித்து வருகிறேன். நீங்கள் தற்போது நடித்த கார்த்திக் ஆர்யன் கூட உங்களின் அளவே திரையுலக அனுபவம் கொண்டவர். நீங்கள் அவரைவிட குறைவாக சம்பளம் பெறுவது உங்களுக்கு கோபம் தரவில்லையா? கார்த்திக் ஆர்யன், ஏழு ஆண்டுகளாக இங்கு உழைத்து இந்த இடத்தை அடைந்துள்ளார். ரசிகர்களை சம்பாதித்துள்ளார். அவருக்கான ஊதியத்தை அவர் கேட்டு பெறுகிறார். இதில் நான் பேசுவதற்கு என்ன இருக்கிறது.? மேலும் இது பணம் போட்டு

பாலின பாகுபாடற்ற பள்ளி சாத்தியமா?

படம்
The Educator பாலின பாகுபாடற்ற சூழல் சாத்தியமா?  பாலின பாகுபாடற்ற குழந்தைகளுக்கான பள்ளிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கான பொம்மைகள், உடைகள் உலகெங்கும் விற்பனையாகத் தொடங்கியுள்ளன. ஆண்களுக்கு ப்ளூ கலர், பெண்களுக்கு பிங்க் கலர் என பிரிக்கும் பாகுபாடு கூட இனி இருக்காது. ஆண் குழந்தைகளுக்கு கார், ரயில் பொம்மைகளும் பெண் குழந்தைகளுக்கு கரடி, பார்பி பொம்மைகளும் வாங்குவது கூட தற்போது குறைந்து வருகிறது. என்ன காரணம்? பாலின பாகுபாடு குறித்து உணர்வு பெற்றோர்களுக்கும் ஏற்பட்டதுதான். பாலின பேதமற்ற உடைகள் பாலின பாகுபாடற்ற கலாசாரத்தில் ஆண், பெண் குழந்தைகளுக்கான பொம்மை, உடை என்பது தனித்தனியான தேர்வாக இருக்காது. பெண்குழந்தைகள் கிச்சன் செட் வைத்து விளையாடுவதும் கூட அவர்களின் தேர்வாகவே இருக்கும். மேற்குலகில் தொடங்கிய இந்த கலாசாரம், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவிலும் வளர்ச்சி கண்டு வருகிறது. இதற்கு சிறந்த உதாரணம், ஃபிளிப்கார்ட், தன்னுடைய வலைத்தளத்தில் பாலின பாகுபாடற்ற பொம்மைகளுக்கான ஃபில்டர் ஒன்றை உருவாக்கியுள்ளதுதான்.  இதனால் என்ன லாபம்? குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் உலக

பாலினப் பாகுபாடு நம் மனதில் உள்ளது

படம்
Daily Star பாலினப் பாகுபாடு என்பது மனநோய்! பாலின பாகுபாடற்ற பள்ளிகள் என்ற கட்டுரையை அண்மையில் எழுதினேன். அதைப் பாராட்டிய நண்பர் எனக்கு அதிலுள்ள உடை கான்செஃப்ட் புரியவில்லை. என்ன சொல்லவருகிறாய்? ஆண் குழந்தைகளுக்கு கவுன் வாங்கித் தருவாயா? என்றார். உண்மைதான்.அதிலுள்ள உண்மை எனக்கு புரிந்தது. ஆனால் அவர் புரிந்துகொள்ளாத சமாச்சாரம், ஆண் பெண் என்ற உடைக்கான கோடுகள், எல்லைகள் மங்கி வருவது மட்டுமே நான் கூறவந்தது. இதுதொடர்பாக குங்குமத்திலும் நான் முன்னமே கட்டுரைகளை எழுதியுள்ளேன். ரன்வீர்சிங் பேஷன் ஷோவில் ஜென்டர் நியூட்ரல் உடைகளை அணிந்துவந்து அவரது காதலிக்கே ஷாக் கொடுத்தார். பாஜிராவ் மஸ்தானி விழாவில் அவர் அணிந்த பேன்ட் கூட அந்த ரகம்தான். எனது உறவினர் வீடுகளில் பெண்ணுக்கு டீ மட்டும், ஆணுக்கு ஹார்லிக்ஸ் தரப்படும் வித்தியாசத்தை கண்ணாரப் பார்த்துள்ளேன். பெண்கள் எங்களது ஊரில் பாரமாக பார்ப்பதும், அவர்களுக்கு செய்யும் சிறிய உடைகள் அல்லது கல்விச்செலவும் கூட அரசுக்கு வரி கட்டுவது போலவே நினைக்கிறார்கள். இவையும் பாலினப் பாகுபாடு குறித்த கவனத்தை ஏற்படுத்தும் கட்டுரை எழுதக்காரணம். குழந்தைகள்