இடுகைகள்

கிருஷ்ண வம்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முஸ்லீம்களின் தேசப்பற்றை நிரூபிக்க கட்டாயப்படுத்தும் படம்- கட்கம் - கிருஷ்ணவம்சி

படம்
  கட்கம் தெலுங்கு இயக்குநர் – கிருஷ்ண வம்சி இசை ராக்ஸ்டார் டிஎஸ்பி ஒளிப்பதிவு எஸ்கேஏ பூபதி எடிட்டிங் - ஶ்ரீகர் பிரசாத் ரவிதேஜா, ஶ்ரீகாந்த் மேகா, பிரகாஷ்ராஜ், தேஜ். சங்கீதா, சோனாலி பிந்த்ரே முஸ்லீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் கிடையாது. அப்படி தீவிரவாதிகளாக இருந்தால் அவர்களை ஜெய் பஜ்ரங்பலி என்று சொல்லி துப்பாக்கியால் சுட்டுக்கொன்றால் தீவிரவாதத்தை அழித்தே விடலாம் என்று சொல்லியிருக்கிற படம். படத்தில் தொடக்க காட்சியே தீவிரவாதிகளை அறிமுகப்படுத்தி விடுகிறார்கள். இதனால் படம் எந்த கோணத்தில் போகப்போகிறது என புரிந்துகொண்டுவிடலாம். தீவிரவாதி மசூத், அவரை விடுவிக்க தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகளை திட்டமிடுகிறார்கள். இதை தலைமை தாங்கி நடத்துபவர் அசார். அசார் யார் என்பது படத்தில் முக்கியமான திருப்புமுனை காட்சி. கோட்டி, சினிமா நாயகனாக முயல்பவர். அவரின் தொடக்க காட்சிகள் பல்வேறு சினிமா ஸ்டூடியோக்களிலிருந்து செக்யூரிட்டிகளால் வெளியே தள்ளப்படுவதிலிருந்து தொடங்குகிறது. கோட்டி நடிகர் என்றால் அவரது நண்பர் இயக்குநராக முயல்கிறார். இருவரும் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். வாடகை கூட கொடுக்க முடியா