இடுகைகள்

மன உளைச்சல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாஸ்வேர்டால் பணயக் கைதியாகும் வாழ்க்கை

படம்
  பாஸ்வேர்ட்டால் வதைக்கப்படும் வாழ்க்கை  ஒவ்வொருமுறை விண்டோஸ் ஓஎஸ்ஸை எஸ் ஆர் எலக்ட்ரிகலுக்கு எடுத்துச்செல்லும்போதும் நான் மறந்துவிடும் விஷயம் ஒன்றுண்டு. அதுதான் பாஸ்வேர்ட். விண்டோஸ் கணினியில் இணையத்தில் இணைத்தால் மைக்ரோசாஃப்ட் அக்கவுண்டிற்கென தனி பாஸ்வேர்ட் உண்டு. பிறகு, கணினிக்கென தனி பாஸ்வேர்ட் உண்டு. இதை பதிவு செய்து மொபைலில் வரும் ரகசிய குறியீட்டு எண்ணை பதிந்து கணினியை இயக்குவதற்குள் வாயில் நுரைதள்ளிவிடும். அந்த நேர பதட்டத்தில் பாஸ்வேர்டுகள் நினைவுக்கு வந்து தொலைவதில்லை என்பதுதான் தனித்துயராக மாறுகிறது. கணினி பழுதுபார்க்கும் அண்ணனோ, பாஸ்வேர்டை இந்த முறையும் மறந்துவிட்டாய்தானே என கிண்டலாக பார்ப்பது மாறவே இல்லை. இதன் பிரச்னைகளைப் பார்ப்போம்.  லினக்ஸ் ஓஎஸ்ஸைப் பொறுத்தவரையில் அவர்கள் இயங்குவதே பாஸ்வேர்டில்தான். அதை வைத்துத்தான் டெர்மினலை இயக்க முடியும். மென்பொருட்களை இன்ஸ்டால் செய்யமுடியும். ஜினோமில் உங்கள் கணக்கு தொடங்க, கூகுள் கணக்கை இணைத்தால் போதுமானது. அப்போதுதான் இதற்கு தனியாக பாஸ்வேர்ட் கேட்கவில்லையே என மனம் நிம்மதி அடைந்தது. இது கொஞ்சம் ஆறுதலான ஓஎஸ்.  இணையத்தில் இயங்க கூகுள் மெய

தேசதுரோக சட்டம் நீக்கப்பட வேண்டுமா, மாற்றப்பட வேண்டுமா? 124 A IPC

படம்
  ஆங்கிலேயர் காலத்தில் அவர்களின் ஆட்சிக்கு எதிராக பேசுபவர்களை ஒடுக்குவதற்காக தேச துரோக சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் நாடு முழுக்க ஆங்கிலேயருக்கு எதிராக பேசிய, செயல்பட்ட, கலை வடிவங்களை உருவாக்கியவர்கள் சிறையில் பாரபட்சமின்றி அடைக்கப்பட்டனர். சித்திரவதை செய்யப்பட்டனர்.  124ஏ ஐபிசி என்ற சட்டம்தான் இன்று இந்தியாவில் அதிகமாக விவாதிக்கப்படும் சட்டம். இந்தியா, பாக். கிரிக்கெட் போட்டி, கார்ட்டூன், சமூக வலைத்தள பதிவுகள், அனுமன் ஜெயந்திக்கான கூச்சல்கள் என எவற்றையும் தேச துரோக சட்டம் விட்டுவைக்கவில்லை. அதைப்பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.  தேசதுரோகம் என்றால் என்ன? அரசுக்கு எதிரான பேச்சு, செயல்பாடு மற்றும் மக்களை அரசுக்கு எதிராக கிளர்ச்சிக்கு தூண்டுதல் என்பதை தேசதுரோகம் என ஆக்ஸ்ஃபோர்டு அகராதி கூறுகிறது.  வெறுப்பு, கண்டனம், விருப்பமின்மை ஆகியவற்றை வார்த்தை, செயல்பாடு மற்றும வேறெந்த வடிவத்தில் வெளிப்படுத்தினாலும் அது தேச துரோகம் என இந்திய சட்டம் 124 ஏ கூறுகிறது.  வன்முறை, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது தேச துரோகத்தில் உள்ளடங்கியது. அரசை விமர்சிப்பது இதில் சேராது என 1962ஆம் ஆண்டு ஐ

குடிமக்களின் அவசியமான உரிமைகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் பறிக்க நினைக்கிறது மத்திய அரசு! - கபில் சிபல்

படம்
                        தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் தேசிய பாதுகாப்பு சட்டம் 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு நடைமுறைப்படுத்திய தேசியபாதுகாப்பு சட்டம் , தீவிரவாத த்தி்கு எதிரானது என்று கூறப்பட்டது . ஆனால் இந்த சட்டம் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்று முதலிலேயே அஞ்சப்பட்டது . அதற்கு ஏற்ப பத்திரிகையாளர்கள் , மாணவர்கள் , கல்வியாளர்கள் என பலரின் மீதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது . இவர்கள் மீது தேச விரோதி என குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டு உரிமைகளுக்கு ஆதரவாக போராடுபவர்களை அமைதியாக்கி வருகிறார்கள் . மக்களவையில் உள்துறை அமைச்சர் ஆகஸ்ட் 2 ஆம் தேதி பேசும்போது , இந்த சட்டத்தில் தீவிரவாத த்திற்கு ஆதரவானர்களும் ., அவர்களுக்கு உதவி செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் . பிறருக்கு இதில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்பட்டது . மனித உரிமைகள் இந்த சட்டத்தின்படி பாதிக்கப்படாது என்று அமைச்சர் கூறினார் . ஆனால் சட்டம் நடைமுறையில் வேறுமாதிரி செய்லப்ட்டது . குற்றவாளிகள் என சந்தேகம் வந்தால் கூட ஒருவரை சிறையில் அடைத்துவிட்டு பிறகு ஆற அமர்ந்து ஆதாரங்களை சேகரித

ஸ்பேம் கால் அழைப்பில் இந்தியாவிற்கு 5 வது இடம்! - இப்பிரச்னையை எப்படி தடுப்பது?

படம்
        ஸ்பேம் கால்ஸ் அண்மையில் ட்ரூகாலர் ஆப், 2019ஆம் ஆண்டிற்கான ஸ்பேம் அழைப்புகளுக்காக தகவல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் இந்தியர்கள் 30 பில்லியன் அளவுக்கு ஸ்பேம் அழைப்புகளை சந்தித்து உள்ளனர். ட்ரூகாலர் ஆப், 29.7 பில்லியன் அழைப்புகளை கண்டுபிடித்து தடை செய்துள்ளது. இதில் 8.5 பில்லியன் குறுஞ்செய்திகளும் அடக்கம். ட்ரூகாலர் ஆப்பை தற்போது வரை 85 பில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஸ்பேம் அழைப்பு தொல்லைகளில் இந்தியா ஐந்தாவது இடம் வகிக்கிறது. இந்தியாவுக்கு முந்தைய இடங்களில் பிரேசில், பெரு, இந்தோனேஷியா, மெக்சிகோ ஆகிய நாடுகள் உள்ளன. பெருந்தொற்று காலங்களில் குறைந்திருந்த ஸ்பேம் அழைப்புகள் மீண்டும் பேக் டூ பார்மாக களை கட்டத் தொடங்கியுள்ளன. இவற்றைச் சமாளிக்க புதிய வழிகளும் உருவாகியுள்ளன. அவற்றுள் கூகுளின் வெரிஃபைடு கால்ஸ் வசதியும் ஒன்று. பொதுவாக இன்று சூப்பர் மார்க்கெட் முதல் ஹைப்பர் மார்க்கெட் வரை எங்கு சென்றாலும் மொபைல் நம்பரை பில் போடும்போது கேட்பார்கள். அங்கு இரண்டு ஆப்சன்கள் மட்டுமே நமக்கு உண்டு. ஒன்று எண்ணைக் கொடுப்பது, அல்லது எண்ணைக் கொடுக்க மறுப்பது. எண்ணைக் கொ

நேர்த்தி எனும் தொற்றுநோய் - அனைத்திலும் ஒழுங்கு எதிர்பார்க்கிறீர்களா? ஆபத்து!

படம்
எனக்கு டிசிப்ளின்தான் முக்கியம், எனக்கு திருப்தியாகலப்பா, இது பெஸ்ட் கிடையாது, நல்லா வொர்க்அவுட் பண்ணுங்க என்ற வார்த்தைகளை நாம் மேலதிகாரிகளிடம் அல்லது ஆசிரியர்களிடம் கேட்டிருப்போம். நாமே அந்த இடத்திற்கு உயரும்போது, நமக்கு கீழிருப்பவர்களிடம் இதே வார்த்தைகளை கூறிக்கூட இருக்கலாம். இதற்கு என்ன பொருள்? நேர்த்தி. இதை சிலர் நேரடியாக சொல்லுவார்கள். நிறையப்பேர் எனக்கு இப்படி இருக்கணும் என்பதைத்தாண்டி பேசமாட்டார்கள். இதனை அவர்கள் தங்களுடைய ஸ்டைலாக நினைத்துக்கொண்டிருப்பார்கள்.  நான் வேலைசெய்த முன்னாள் பத்திரிகை ஆசிரியர் சிறந்த ஆசிரியர். ஆனால், பர்ஃபெக்ஷன் பார்ப்பவர்தான். மாதந்தோறும் வரும் பத்திரிகையை, தனது நேர்த்தியாக செய்யணும் என்ற குணத்தாலேயே  ஆறுமாத பத்திரிகையாக மாற்றினார். காரணம், காத்திரமாக உருவாக்கணும் என்று பதில் சொன்னார்.  டிசைன் செய்யும் முன்பே இருமுறை திருத்தி எழுத திருத்தங்களை இன்டிசைனில் போட்டு கொடுப்பேன். பின் டிசைன் செய்தபின் நான்குமுறை திருத்தங்கள் செய்வார். எப்போது பார்த்தாலும் நான்கு ஏ4 காகிதங்கள் டேபிளில் கிடக்கும். எது எப்போது போட்டது என தேதி எழுதி வைத்து பாத