இடுகைகள்

மாங்கா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பலரின் பிரச்னைகளை தீர்த்து வலிமையாக்கும் மர்ம புத்தக கடைக்காரர்!

படம்
 ஐயம் நாட் எ டிமான் காட் லேக்கி மாங்கா காமிக்ஸ் ஹரிமாங்கா இந்த கதையில், நாயகன் பூமியில் இருந்து மற்றொரு உலகிற்கு வந்தவன். அவனுக்கு ஆதரவாக இங்கி என்ற கருப்பு நிற சக்தி ஆதரவாக உள்ளது. ஆஸ் மார்க்கெட் என்ற நிறுவனம் நடத்தும் புத்தக கடையில் பொறுப்பாளராக இருக்கிறான். அவனைப் பொறுத்தவரையில் அக்கடையில் உள்ள புத்தகங்கள் அனைத்தும் சாதாரணமானவை. போட்டித்தேர்வு, இலக்கிய நூல்கள், கட்டுரைகள் என்றுதான் இருக்கின்றன. ஆனால், யாராவது பிரச்னை என்று வரும்போது அவர்களின் பிரச்னைகளுக்கு ஏற்றபடி நூல்களும் மாறுகின்றன. அதை, புத்தகடையில் உள்ள பொறுப்பாளரான நாயகன் அறிவதில்லை.  அவர் முதலில் அதை அறியாமல் இருப்பது சரி. ஆனால், கதை நெடுக அவர் எங்கேயும் தனது நூல்களை வாங்கிப்படித்தவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்கள் எப்படிப்பட்ட அதிகாரவெறி கொண்ட மக்கள் என உணருவதேயில்லை. அந்த இடத்தில்தான் கதை தொய்வடைகிறது. நாயகனைப் பொறுத்தவரை அவன் ஒரு சிறந்த விற்பனையாளன். அதேசமயம், அவன் நூல்களை விற்க செய்யும் முயற்சியாக, யாரேனும் மழைக்கு ஒதுங்கினால்கூட அவர்களுக்கு தலை துவட்ட துண்டு, தேநீரை வழங்குகிறான். அதுவும் கூட க்ரீன் டீ. முதல்முற...

இறக்கும் நிலையிலுள்ள இளவரசனை கொலை செய்ய முயலும் கூலிப்படையினர்!

படம்
    இல் மாஸ்டர் ஆப் பேக் கிளான் குன்மாங்கா.காம். பேக் என்ற இனக்குழுவில் பிறக்கும் மூத்த பிள்ளை, தற்காப்புக்கலை கற்றுக்கொள்ள முடியாத உடல்நலக்குறைபாடு ஏற்படுகிறது. பிறக்கும்போதே, ஆன்ம ஆற்றல் தடை என்பது உடலில் ஏற்பட்டுவிடுகிறது. இதனால், அவனுக்கு வரவேண்டிய குடும்ப தலைவர் பதவி தம்பிக்கு செல்கிறது. யிகாங், குடும்பத்தில் புறக்கணிக்கப்பட்டு சற்று தொலைவில் உள்ள வீட்டில் தங்க வைக்கப்படுகிறான். இழிவும் அவமானப்படுத்தல்களும் தினசரி நிகழ்ச்சியாகின்றன. இப்படியான சூழலில் அவனை படுகொலை செய்ய அன்னிய சக்திகள் முயல்கின்றன. அந்த முயற்சியில், அவன் அன்பு கொண்டிருந்த பணிப்பெண் சோ ஹ்வா இறந்துபோகிறாள். அது அவனது மனதை பாதிக்கிறது. நாயகன் யிகாங், தப்பி ஓடும்போது ஓரிடத்தில் நிலவறை போல ஓரிடம் உள்ளது. அங்கு உள்ள துருப்பிடித்த வாளை கையில் எடுக்கிறான். அதில் உள்ள ஆன்மா தூக்கம் கலைந்து எழுகிறது. அது வேறுயாருமல்ல. பேக் இனக்குழுவின் முன்னோடியான வாள்வீரர் ஒருவர்தான். அவரின் ஆன்மா, வாளோடு இணைக்கப்பட்டுள்ளது. அவர், நாயகன் யிகாங் உடலில் புகுந்து எதிரிகளை கொல்கிறார். இதனால், யிகாங் அவனது அப்பாவைப் பார்க்கும் வாய்ப்பு ...

முற்பிறப்பில் சகோதரனால் படுகொலையான தம்பி, தற்காப்புக்கலையால் வலிமை பெற்று வந்து பழிவாங்கும் கதை!

படம்
     ரெக்கார்ட்ஸ் ஆஃப் டீமன் பாத் ரிடர்ன் குன்மாங்கா.காம் 57 அத்தியாயங்கள் ---- இந்த மாங்கா காமிக்ஸ் கதையில், முழுக்க தீயசக்தி இனக்குழுவில் நடைபெறும் அதிகாரப்போட்டி, வாரிசு அரசியல், வஞ்சனை, துரோகம் ஆகியவற்றைப் பற்றி பேசுகிறார்கள். கதையின் தொடக்கத்தில் நூல்களை வாசித்துக்கொண்டிருக்கும் தீயசக்தி இனக்குழுவின் ஏழாவது இளவரசனுக்கு ஒருவர் விஷத்தைக் கொண்டு வந்து கொடுக்கிறார். அவர் அதைக் குடித்து தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்ற வற்புறுத்துகிறார் ஒரு படையணித் தலைவர். இளவரசன் தன்னை வற்புறுத்துபவனைக் கொன்றுவிட்டு, அவனது படையணிகளை வெறியோடு கொல்கிறார். திடீரென பின்புறமிருந்து ஒருவன் அவனைத் தாக்கிக் கொல்கிறான். கொல்பவன்தான், தீயசக்தி இனக்குழுவின் தலைவன். நாயகனின் ஆறாவது சகோதரன், மியோன் காக். நாயகன் இறக்கு்ம்போது, அதிகாரம் இல்லாமல் இருப்பதால்தான் இப்படி அநீதியாக நாம் கொல்லப்பட்டோம் என நினைத்துக்கொண்டே சாகிறான். அவன் உயிர்மெல்ல பத்தாண்டுகளுக்கு முன்னர் செல்கிறது. ஆம் மற்றொரு மறுபிறப்பு பழிவாங்கல் கதைதான். அரசகுலத்தில் வாரிசு அரசியல் போட்டிதான் கதை. இக்கதையில் நாயகன் இருப்பதிலேயே பலவீனமானவ...

மூன்றாவது பிறப்பில் எதிரிகளை நாயகன் எதிர்கொண்டு வெல்வானா?

படம்
  அகெய்ன்ஸ் காட்ஸ்  மாங்கா காமிக்ஸ்  மான்வா.காம்.  இதில் நாயகன் பலவீனமானவன். அவனுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. அந்த திருமணம் கூட ஒரு நன்றிக்கடனை கழிக்கவே செய்யப்படுகிறது. திருமணத்திற்கு மாப்பிள்ளை கழுதையில் உட்கார வைத்து அழைத்து வரப்படுகிறான். அவனது சொந்தக்காரர்கள் இப்படி அவமானப்படுத்துகிறார்கள். மாப்பிள்ளை பலவீனமான உதவாக்கரை என ஊருக்கே தெரிகிறது. அதாவது அவன் தற்காப்புக்கலை கற்க முடியாதபடி உடலில் பிரச்னை இருக்கிறது. மேலும் அவனது அண்ணணுக்கே, தம்பி கட்டிக்கொள்ளும் பெண் மீது பொறாமை உள்ளது. எனவே,  தம்பிக்கு விஷத்தை டானிக் என கொடுத்து குடிக்கச் செய்கிறான். அப்போது அவனது உடலில் வேறு ஆன்மா ஒன்று குடியேறுகிறது.  அந்த ஆன்மாவினுள்ளே பொக்கிஷமாக கருதப்படும் விஷம் உள்ளது. அந்த விஷம் டானிக்கிலுள்ள விஷத்தை முறிக்கிறது. புதிய உடலில் குடியேறிய ஆன்மாவுக்கு இது மூன்றாவது வாழ்க்கை. ஏற்கெனவே இரண்டு வாழ்க்கை வாழ்ந்து இரண்டிலும் தற்கொலை செய்துகொண்டு இறந்த வரலாறு கொண்டிருக்கிறது. இந்த பிறவியில் தன்னைச் சுற்றியுள்ளவர்களை கவனிக்கத் தொடங்குகிறது. இதில் ஆறுதல், அவனுக்கு அத்தை முறை வ...

மாணவர்களை வலுவானவர்களாக மாற்ற முயலும் பலவீனமான தற்காப்புக்கலை ஆசிரியர்!

படம்
  வீக் டீச்சர்  மாங்கா காமிக்ஸ் நாம்கூங் இனக்குழுவில் ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இதில், கடைசியாக உள்ள பையன் பலவீனமாக இருக்கிறான். அதற்கு முக்கியமான காரணம், சிறுவயதில் அவனுக்கு மர்ம நபர் கொடுக்கும் விஷ மாத்திரை. அந்த மாத்திரை காரணமாக அவனது உடலில் விஷம் பரவி, அவனது ஆன்ம ஆற்றலை குன்ற வைக்கிறது. அவனை எல்லாருமே இழிவாக பேசுகிறார்கள். நாம்கூங் குடும்பத்தின் அவமானம் என பேசுகிறார்கள். யாருமே அவனுக்கு ஆதரவாக இருப்பதில்லை. அவனது அண்ணன்கள் கூட பாராமுகமாக இருக்கிறார்கள்.  முரிம் கூட்டமைப்பில் உள்ள ஒயிட் அகாடமியில் நாம்கூங் மே சேர அவனது அப்பா உத்தரவிடுகிறார். அவன் அங்கிருந்து மூன்று மாதங்களில் திரும்ப வீட்டுக்கு வரவேண்டும் என்பது அண்ணனின் உத்தரவு. அப்படி வரவில்லை என்றால் மூத்த அண்ணனே அங்கு வந்து கூட்டிச்கொண்டு வந்துவிடுவதாக கூறுகிறார். எனவே, வேகமாக வலிமையாக முயல்கிறான். அங்கு செல்பவனுக்கு பார்க்கவே பலவீனமாக உள்ள ஆசிரியர் பயிற்சி அளிக்கிறார். உண்மையில் அவர் டிமன் பிளவர் லீக் என்ற படுகொலை குழுவின் கேப்டன் கிவி என்று கூறுகிறார்கள். ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் காணப்படுவதில்லை. உண்மையில் அ...

வணிகம் மூலமே எதிரிகளை நசுக்கி அழிக்கும் வீரனின் ஏகபோக வணிக வாழ்க்கைக் கதை!

படம்
  ஆர்டினரி மேன் இமிக்கிரேட் டு முரிம் வேர்ல்ட் மாங்கா காமிக்ஸ்  ஜோ வீ, நவீன உலகில் வறுமையான சூழ்நிலையில் இருக்கிறான். அவன் கையில் பணமில்லை. உணவுகளை டெலிவரி செய்யும் வேலையை செய்தபடி படிக்கிறான். பொருளாதார பிரச்னைகளால் காதலும் கடந்துபோகிறது. அம்மாவையும் மருத்துவம் செய்து காப்பாற்ற முடியவில்லை. இந்த சூழ்நிலையி்ல் உணவு டெலிவரி செய்பவனை சொகுசு கார் ஒன்று மோதி சாய்க்கிறது. அப்போது கழுத்தில் உள்ள சிவப்பு முத்து டாலர் கீழே விழுகிறது. தனது ஒரே குடும்ப சொத்தான அதை கையில் தொடுகிறான். இறந்துபோகிறான். மறுபிறப்பு எடுக்கிறான்.  கொல்லர் குடும்பத்தில் பிறக்கிறான். ஒரு அண்ணன், தங்கை என இருவர் இருக்கிறார்கள். வட்டிக்கு கடன் வாங்கித்தான் உணவே சமைத்து சாப்பிடும் நிலை. இதை ஜோ தனது புத்திசாலித்தனத்தால் மாற்றுகிறான். ஒரு வணிகரிடம் வட்டிக்கு கடன் வாங்கி உழவுப்பொருட்களை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விற்கிறான். இதற்கான ஒப்பந்தம், சம்பளம் ஆகியவற்றை நவீன உலகில் வாழ்ந்த அனுபவம், செய்த வேலையிலிருந்து கிடைத்த அறிவு ஆகியவற்றைப் பயன்படுத்துகிறான். ஏறத்தாழ அனைத்தும் முதலாளித்துவ உத்திகள். ஆனால், அதை மு...

துரோகம் செய்த இனக்குழு தலைவரை மறுபிறவி எடுத்து பழிவாங்க கிளம்பும் வீரனின் பயணம்!

படம்
  மூன் ஸ்வார்ட் எம்பரர் மாங்கா காமிக்ஸ் டிமோன் செக்டில் உள்ள ஆட்களுக்கு காசுக்கு அடிமையாக விற்கப்பட்ட வீரன், துரோகத்தால் வீழ்த்தப்பட்டு இறந்துபோகிறான். இறக்கும் கடைசி நேரத்தில் புத்த துறவி மூலம் மறுபிறவி வாய்ப்பு கிடைக்கிறது. அப்படி கிடைக்கும் வாய்ப்பை அவன் எப்படி பயன்படுத்தி டிமோன் செக்ட் இனக்குழு தலைவரை அழிக்கிறான் என்பதே கதை. இந்த கதை இன்னும் நிறைவடையவில்லை.  மறுபிறவியில் கூட டிமோன் செக்ட் ஆட்களிடம்தான் நாயகன் அடிமைச் சிறுவனாக இருக்கிறான். ஏற்கெனவே டிமோன் செக்ட் ஆட்கள், அடிமை சிறுவர்களை எப்படி சித்திரவதை செய்து பிறரை கொலை செய்ய பயிற்சி வழங்குவார்கள் என்பது தெரியும். எனவே, அவர்களை விஷம் வைத்து கொன்றுவிட்டு, சில பெண்களைக் காப்பாற்றி அவர்களின் மூலம் தங்குவதற்கான இனக்குழு  ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறான். இனக்குழுவில் நிர்வாகியின் உதவியாளராக பணிக்குச் சேர்கிறான். டிமோன் செக்டில் பயன்படுத்தும் கலைகளை நேரடியாக கற்பது சந்தேகத்தை ஏற்படுத்தும் என்பதால், அடிப்படையான ஆன்ம ஆற்றல் சக்தியை மட்டும் உருவாக்கிக்கொள்கிறான். அவனுக்கு மின்னல் சக்தியை அடிப்படையாக கொண்ட வூ ஜின் என்ற வீரர...

வாள் துறவியின் வாரிசாகும் புத்தகப்புழு!

படம்
  ஸ்வார்ட்ஸ்மேன் ஸ்காலர் மாங்கா காமிக்ஸ் நூலகமே கதி என கிடக்கும் கல்வியாளன், தற்காப்புகலை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு அதன் வழியாக வாள்வீச்சு பற்றிய அறிவைப் பெற்று சாதனை செய்யும் கதை. சிறப்பான கதை. அதை மெல்ல கூறியவிதமும் அருமை. நாயகன் பெயர் வூன். தலையில் தொப்பி ஒன்றை வைத்துக்கொண்டு வருகிறான். அவனைப் பார்க்கும் யாருக்குமே அப்பாவியான நூல்களை மட்டுமே படிக்கும் ஆள் என்ற எண்ணமே வரும். ஆனால், தற்காப்புக்கலை பற்றிய கேள்விகள் வந்தால், அதில் பதில்களைக் கூறுவதோடு வீரரின் தவறுகளைக் கூறி அதை செய்துகாட்டி திருத்தவும் செய்கிறான். அங்குதான் பலரும் ஆணவத்தை விட்டு அவனை மாஸ்டர் என பணிந்து போகிறார்கள். மரியாதை கொடுக்கத் தொடங்குகிறார்கள்.  வூனுக்கு நிலையான மாத சம்பளம் என்பதே லட்சியம். வேறு எதையும் அவன் பெரிதாக யோசிப்பதில்லை. குழந்தைபோலவே கள்ளமின்மையோடு இருக்கிறான். ஆனால், அவனைச் சுற்றி இருப்பவர்கள் அவனை பயன்படுத்திக்கொள்ள ஏராளமான திட்டங்களை தீட்டிக்கொண்டே இருக்கிறார்கள். சிலர் அவனை சீண்டும்போது அவன் கொடுக்கும் பதிலடி நினைத்துப் பார்க்க முடியாத வலியைத் தருகிறது. தற்காப்புக்கலை பற்றிய ஆராய்ச்சியில...

உலக அனுபவத்திற்காக பேய்கிராமத்தை விட்டு வெளியேறும் வைத்திய வீரன்!

படம்
  மில்லினியம் அல்செமிஸ்ட் மாங்கா காமிக்ஸ் 100-- பேய்க்கிராமம் எனும் இடம் சபிக்கப்பட்ட இடம். அங்கு செல்பவர்கள், திரும்ப உலக வாழ்க்கைக்கு வரவே முடியாது. இங்கு, திருடர்கள், கொள்ளைக்காரர்கள், துரோகத்தால் வீழ்த்தப்பட்ட வாள் வீரர்கள் என பலரும் வந்து வாழ்கிறார்கள். இங்கு வீரர் ஒருவர் தனது முதலாளி குழந்தையை மரத்தில் கொண்டு வந்து விடுகிறார். அழும் குழந்தையின் வாயில் துணியை திணித்துவிட்டு  செல்கிறார். அது யார் வீட்டு குழந்தை, ஏன் அதை அழாமல் வாயில் துணி வைத்து பாதுகாக்கிறார்கள் என்பது கதையில் பின்னாடி வரும் என நம்பலாம்.  அந்த குழந்தைதான் நாயகன். அவன், குழந்தையாக இருக்கும்போது பேய் கிராமத்தில் வாழும் நான்கு முதியவர்கள் எடுத்து வளர்ப்பு தந்தைகள் போல கவனித்து வளர்க்கிறார்கள். அவர்கள் அனைவருமே சில ஆண்டுகள் மட்டுமே ஆயுள் கொண்டவர்கள். குழந்தைக்கு தங்களது இனக்குழுவின் பல்வேறு தற்காப்புக்கலையைக் கற்றுக்கொடுக்கிறார்கள். மருத்துவம், திருட்டு, வாள்வீச்சுக்கலை, பொறிகளை அமைப்பது, ஆயுதங்களை உருவாக்கும் கலை என அனைத்தையும் பல்லாண்டுகள் கற்கிறான். கதையில் நம்மை ஆச்சரியப்படுத்துவது, நாயகன் தனக்கென சா...

பெற்றோரால் அடித்து துன்புறுத்தப்படும் சிறுவன், தற்காப்புக்கலை கற்று கொள்ளைக்காரனாக மாறும் கதை!

படம்
  நைன் ஹெவன்ஸ் ஸ்வார்ட் மாஸ்டர்  மாங்கா காமிக்ஸ் 70-- ரீட்மாங்காபேட்.காம் சிறந்த வாள் வீரனின் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவன் இயோன் ஜூக்கா. அம்மா பிரசவத்தின்போது இறந்துவிடுகிறார். முதல்மனைவியை விட இரண்டாவது மனைவி மீது காதல் கொண்ட அப்பா, மனைவி இறப்புக்கு காரணம் மகன்தான் என அவனை வெறுத்து ஒதுக்குகிறார். வெறுப்பும் விரக்தியும் அவரை நோயுறச்செய்கிறது. இதனால் இயோன், அவரது முதல் மனைவியான சித்தியிடம் சிக்கி வன்கொடுமைகளை அனுபவிக்கிறார். அடித்து உதைக்கப்படுகிறார். கழித்து கட்டப்பட்ட உணவை சாப்பிட்டு உயிர் வாழ்கிறார். இந்த சூழ்நிலையில் குடும்பத்தின் பாரம்பரிய கலைகளை அவர் அடைத்து வைக்கப்பட்ட அழுக்கு அறையில் கற்கிறார். மொத்தம் பத்து ஆண்டுகள் இப்படி பயிற்சியில் போகிறது. இறுதியாக கலைகளைக் கற்றுக்கொடுத்த கண்ணாடி, தேர்ச்சி பெற்றவுடன் அவனை வெளியே வழியனுப்பி வைக்கிறது. இதுபற்றி அவனது சித்தி அறிவதில்லை. குடும்ப கலையைக் கற்க தனது மூத்த மகனை, கணவரின் தம்பி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறாள்.  இயோன் உயிர்தப்பி ஓடி காட்டுக்குள் மயங்கி விழுகிறான். அங்கு அவனை கொள்ளையர்கள் குழு கண்டெடுத்து தங்களோடு வேலை செய...

முற்பிறப்பில் சிறந்த வாள் வீச்சு வீரன்; மறுபிறவியில் வாள்வீச்சில் தடுமாறுகிற பலவீனமான இளைஞன்!

படம்
  சாவோட்டிக் ஸ்வார்ட் காட் மாங்கா காமிக்ஸ்  ரீட்மாங்காபேட்.காம் 150--- முந்தைய பிறப்பில் வாழ்ந்த சிறந்த வாள் வீரன், ஒரு போரில் எதிரியைக் கொன்றுவிட்டு படுகாயமுற்று இறந்துபோகிறார். அவர் இறக்கும்போதுதான், சோல் ஸ்வார்ட் எனும் புதிய சக்தியைப் பெறுகிறார். அதை முதல்முறையாக பயன்படுத்தி எதிரியை வீழ்த்துகிறார். அவரது ஆன்மா மறுபிறப்பெடுக்கிறது. சாங்கியாங் எனும் அதிக வலிமை இல்லாத குலத்திற்கு செல்கிறது. அங்குதான் வாள் வீரர் குழந்தையாக பிறக்கிறார். பிறந்து சில ஆண்டுகளிலேயே நூல்களை வாசிப்பது. நடப்பது என அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார். சிறுவயதில் தீவிரமாக ஆன்ம ஆற்றல் பயிற்சியில் ஈடுபட்டதால், உடலில் வாள் வீச்சுக்கு தேவையான ஆற்றல் குறைந்துபோகிறது. இந்த நிலையில் அவரை வாள் வீச்சுக்கான செயின்ட் ஃபோர்ஸ் இருக்கிறதா என சோதிக்கிறார்கள். அந்த தேர்வில் சாங் தோல்வியடைகிறான். எனவே, அவனை சுற்றத்தார், ஊர், வீட்டிலுள்ள வேலைக்காரர்கள் கூட கேலி செய்கிறார்கள். ஆனால் சில ஆண்டுகளிலேயே சாங் செய்த பல்வேறு பயிற்சிகள் அவனை வலிமை கொண்டவனாக மாற்றுகின்றன. ஒரு மரக்கிளை ஒன்றை ஒடித்து வாள் போல பாவித்து அவனது சகோதரனை தாக...

வெறுப்பும் கொலைவெறியும் மனதில் ஊற உருவாகிறான் ஊனக்கால் கொலைகாரன்!

படம்
  ஃபிஸ்ட் டிமோன் ஆஃப் மவுண்ட்குவா  மாங்கா காமிக்ஸ்  ரீட்மாங்காபேட்.காம். மனம் நிறைய வலியும் வேதனையும் மட்டுமே நிறைந்த நாயகனின் கதை.  கொள்ளையர்கள் ஒரு ஊரை வந்து தாக்குகிறார்கள். கொள்ளையடிக்கிறார்கள். அங்குள்ள ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மாவைக் கொல்கிறார்கள். மகனையும் அடித்து உதைத்து குற்றுயிராக்கிவிட்டு அவன் தங்கையைக் கடத்திச்செல்கிறார்கள். அந்த சிறுவனை மவுன்ட் குவாவைச் சேர்ந்த கல்வியாளர் ஹியூன் சோ காப்பாற்றி எடுத்து வளர்க்கிறார். கொள்ளையர்களின் தாக்குதல் காரணமாக அவனுக்கு இடதுகால் ஊனமாக மாறுகிறது. இடதுகால் தொய்ய, வலது காலால் அடியெடுத்து வைத்து நகர்வதுதான் அவனது பாணி. அவனுக்கு சியோயங் என பெயர் வைக்கிறார்.  தற்காப்புக்கலைக்கு கால்கள் முக்கியம். அதுவே பழுதானதால், ஹியூன் சோவின் மாணவனாக இருந்தாலும் நொண்டி, அவமானச்சின்னம், நாய் என மவுன்ட் குவா இனக்குழுவில் அனைவருமே அவனை கேலி செய்கிறார்கள். உனக்கெல்லாம் தற்காப்புக்கலை எதற்கு என இழிவுபடுத்துகிறார்கள். ஆனால், சியோயங்கிற்கு ஒரு கிராமத்தை, அதிலும் தன் குடும்பத்தை அழித்த கொள்ளைக்காரர்களை யாரும் தண்டிக்கவில்லை என்ற ஆத்திரம், ...