அரசுக்கு ஆதரவான ஊக்கமருந்து செலுத்திக்கொண்டு மண்டியிட்ட இந்திய ஊடகங்கள்!
ஆட்சியாளர்கள் வீசும் எலும்புத்துண்டுக்கு மண்டியிட்ட ஊடகங்கள் இக்கட்டுரையின் தலைப்புக்கு இந்திய கேலிச்சித்திரக்கலைஞர் வரைந்த சித்திரம் ஒன்றுதான் காரணம். தொடக்க காலத்தில் இந்தியாவில் கேள்விகளை நேர்மையாக கேட்பதும், புலனாய்வு செய்திகளை வெளியிடுவதும் இயல்பாக நடந்து வந்தது. ஆனால், இப்போதோ ஊடகங்கள் முழுக்க அரசு என்ன சொல்கிறதோ அதை மட்டுமே செய்யும் கைப்பாவையாக, மடியில் அமர்ந்துகொள்ளும் நாய்க்குட்டிகள் போல மாறிவிட்டன. இந்தியாவில் ஒருகாலத்தில் பிரதமர் செய்த ஊழல்களை வெளிப்படையாக பத்திரிகைகளில் எழுதி, அதன் பொருட்டு ஆட்சி மாற்றம் நடந்ததெல்லாம் உண்டு. நடக்கவிருந்த தேர்தலின் முடிவு கூட மாறியது. இதையெல்லாம் அந்தக்காலம் என்று சொல்வதன் அர்த்தம், இன்று ஊடகங்களின் நிலை பரிதாபமாக மாறிவிட்டது. அதை யாரும் நம்புவதும் இல்லை. மரியாதையும்கூட முன்பைப்போல இல்லை. இன்று மதவாத பிரதமருக்கு நெருக்கமாக உள்ள வணிகர், அமெரிக்காவில் லஞ்சம் கொடுத்தார் என குற்றம் சாட்டப்படுகிறார். ஆனால், இந்திய ஊடகங்கள் அதைப்பற்றி எந்தவித செய்தியையும் வெளியிடவில்லை. அப்படியொரு அமைதி நிலவியது. இதையெல்லாம் கடந்த நாற்பது ஆண்டு...