இடுகைகள்

சான்யா மல்கோத்ரா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறந்த திரைக்கலைஞர்கள் -நடிகை சான்யா மல்கோத்ரா, திரைக்கதை எழுத்தாளர் ஷியாம், இயக்குநர் கார்த்திக் நரேன்

படம்
  நடிகை சான்யா மல்கோத்ரா ஷியாம் புஷ்கரன் எழுத்தாளர், திரைக்கதை வல்லுநர் எழுத்தாளர் ஷியாம் புஷ்கரன் மலையாள படங்களில் இன்று சிறப்பாக திரைக்கதை அமைத்து தரும் எழுத்தாளர்களில் ஒருவராக ஷியாம் புஷ்கரன் இருக்கிறார். இவரது பங்களிப்பில் மகேஷிண்ட பிரதிகாரம், தொண்டுமுத்தலும் டிரிக்சாக்சியும், மாயநதி, கும்பளாங்கி நைட்ஸ், ராணி பத்மினி, ஜோஜி ஆகிய படங்கள் சிறப்பான வெற்றி பெற்றதோடு இவரது பெயரையும் உலகம் முழுக்க சொல்லிச்சென்றன. பகத்பாசில் இன்று முக்கியமான நடிகராக இருக்க அவரது நடிப்புத்திறன் காரணம். அதை யாருமே மறுக்க முடியாது. அதேசமயம் அவரது படத்தின் கதைகளை எழுதும் ஷியாம் புஷ்கரனின் எழுத்தாற்றலே அந்த கலைஞனை மேலும் பிரகாசிக்க செய்கிறது. மலையாள உலகை தாண்டி பகத்தை பிறரும் கவனிக்கிறார்கள் என்றால் ஷியாமின் பங்களிப்பு முக்கியமானது. திலீஸ் போத்தன், ஆசிக் அபு, மது ஸ்ரீ நாராயணன் ஆகிய இயக்குநர்களோடு இணைந்து பணிபுரிந்திருக்கிறார்.  ஷியாமின் கதை, திரைக்கதைகளை அவரது ரசிகர்கள் ஆழமாக ஆராய்ந்து பல்வேறு நுணுக்கங்களை திரைப்பட இயக்குநர்களுக்கு கூறி வருகிறார்கள். மகேஷிண்ட பிரதிகாரம் படத்திற்கு தேசிய விருது பெற்றவர் ஷியாம் எ