இடுகைகள்

நாற்காலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மார்க்கெட்டைப் புரிந்துகொண்டு வளர வேண்டும்! - ஐஸ்வர்யா ரெட்டி, கென்சு

படம்
  ஐஸ்வர்யா ரெட்டி, கென்சு ஐஸ்வர்யா ரெட்டி நிறுவனர், கென்சு ஐஸ்வர்யா, இந்திய வடிவமைப்பில் சற்று நவீனத்துவத்தை குழைத்து பல்வேறு நாற்காலிகள் மற்றும் உள் அலங்காரங்களை செய்து வருகிறார். இவரது வடிவமைப்பு மூலம் தொன்மையான இந்திய வடிவமைப்பில் அமைந்த பொருட்கள் நவீனத்துவ அழகுடன் மிளிர்கின்றன. 2019ஆம் ஆண்டில்தான் கென்சு என்ற சொகுசு பொருட்களுக்கான நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார்.  உங்கள் தொழிலில் முக்கியமான ஊக்கம் என்ன? எனது தந்தை நாகராஜ் ரெட்டி, எனக்கு பெரும் ஊக்கம் தருகிறார். குறிப்பிட்ட காலத்தில் வணிகம் செய்யும் நாகராஜ் பல்வேறு சவால்களை சந்தித்து தொழிலை செய்தவற்கான ஊக்கத்தை எனக்கு கொடுத்திருக்கிறார்.  நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன? மார்க்கெட்டை புரிந்துகொண்டு காலத்திற்கேற்ப மாறி வளர்ச்சி பெறவேண்டும் என்பதைத்தான் கற்ற பாடம் என்பேன்.  தொழில்முனைவோராக நீங்கள் கூற நினைக்கும் அறிவுரை என்ன? பொறுமை விடாமுயற்சி தொழிலுக்கு முக்கியம். எதுவுமே இல்லாமல் அடிப்படையின்றி முன்னேறி வளர்வது எளிதல்ல. நமக்கான நெட்வொர்க்கை நாம் உருவாக்கிவிட்டால் தொழிலை எளிதாக  செய்ய முடியும். வாடிக்கையாளர் கொடுக்கும் கருத்துகளை திற

நம் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் பழக்கங்கள் என்னென்ன?

படம்
              சிறிய பழக்கம் பெரிய மாற்றங்கள் தாகசாந்தி செய்யுங்கள் ! அலுவலகங்களில் வேலை செய்யும்போது ஏசி ஓடிக்கொண்டே இருப்பதால் பெரும்பாலானோர்க்கு நீர் தேவை இருக்கிறதா இல்லையா என்றே தெரியாது . தண்ணீரை அதிகம் குடிக்காவிட்டால் உடலில் இயக்கம் குளறுபடியாகிவிடும் . எலும்புகளின் இணைப்பிற்கு உயவு எண்ணெய் போல நீர் பயன்படுகிறது . உடலின் வெப்பநிலையை கட்டுப்பாடு செய்வதற்கும் , செரிமானத்திற்கு்ம் உதவுகிறது . அடிக்கடி கடி நீர் குடிப்பதை மறந்தால் உடல் , மனம் என இணைத்தும் ஒத்திசைவாக இயங்காது . நீண்டகால நோக்கிலும் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் . இனிமேல் அலுவலகத்தில் பரபரப்பாக இயங்கினால் கூட அதற்கேற்ப போனில் அலாரம் வைத்துக்கூட நீரை நேரத்திற்கு குடிக்கலாம் . இதில் ஒன்றும் வெட்கப்படவேண்டியதில்லை . நீரை அதிகமாக குடிக்கமுடியவில்லை என்றால் பழரசம் அல்லது மூலிகை தேநீர் போன்றவற்றை அருந்தலாம் . நேரமே எழுங்கள் இது கடைபிடிப்பதற்கு கடினமான பழக்கம் . இரவில் தாமதமாக படுப்பவர்கள் எப்படி சூரிய உதயம் பார்க்கமுடியும் ? தினசரி நடவடிக்கைகளை சரியானபடி அமைத்துக்கொண்டவர்களுக்கு பெரிய பிரச்னை

பெற்றோரை மீட்டு கொண்டு வர மந்திர நாற்காலியுடன் போராடும் சிறுவர்கள்! - தி மேஜிக் ட்ரீ 2009

படம்
      மேஜிக் ட்ரீ மந்திரசக்தி கொண்ட மரத்தை வெட்டி பல்வேறு பொருட்களை செய்கிறார்கள். அவற்றில் ஒரு துளி சக்தி மிஞ்சுகிறது. இதனால் சில பொருட்கள் தன்னிச்சையாக இயங்குகின்றன. ஆனால் அது எதனால என்று தெரியாமல் மனிதர்கள் அதனை வீடியோக்களாக எடுத்து பகிர்கிறார்கள். அப்போது முழு மந்திரசக்தியும் ஒரு நாற்காலிக்கு கிடைக்கிறது. அந்த நாற்காலி மூன்று சிறுவர்களைக்கொண்டு குடும்பத்திற்கு எதேச்சையாக கிடைக்கிறது. அவர்களுக்கு பெரிய பேராசை ஏதும் கிடையாது. பெற்றோர் தம்மிடம் பாசமாக இருக்கவேண்டும். அதற்கு அவர்களுக்கு நிலையான வருமானம் கிடைக்கவேண்டும். அவ்வளவுதான். இதனை தான் அவர்கள் வேண்டுகோளாக முன்வைக்கிறார்கள். இந்த விஷயம் நிறைவேறும்போது ஏற்படும் பாதிப்புகள், பக்க விளைவுகள்தான் படம். குழந்தைகள் படம் என்பதால், அவர்களின் மனதில் உள்ள விஷயங்களை மீறிப்போகாமல் படம் எடுப்பது கடினம். இந்த படம் அந்தவகையில் குழந்தைகளின் மனதிற்கு நெருக்கமாக எடுக்கப்பட்டுள்ளது. கொடுமைக்கார அத்தையை திட்டும்போது கூட அவள் சின்ன பெண்ணாக மாறிவிடவேண்டும் என்றுதான் வேண்டுகிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்களின் அத்தையும் கூட அப்படியே இருப்பது நல்லது என நின