இடுகைகள்

டி20 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலக கோப்பை போட்டியை வெல்வது மட்டுமே எனது கனவு! - மிதாலி ராஜ், கிரிக்கெட் வீரர்

படம்
  மிதாலி ராஜ்  மிதாலி ராஜ் கிரிக்கெட் வீரர் அண்மையில்தான் கேல் ரத்னா விருதை மிதாலி ராஜ் பெற்றார். இந்திய கிரிக்கெட் அணிக்காக இருபத்திரெண்டு ஆண்டுகள் விளையாடிய அர்ப்பணிப்பு உணர்வு மிக்கவர். அவரிடம் பேசினோம்.  இருபத்தி இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் விளையாடி வருகிறீர்கள். இப்படி ஊக்கமாக விளையாட என்ன காரணம்? இதற்கு ஒழுக்கமான விளையாட்டு பழக்கம்தான் காரணம். நான் வளர்ந்து வந்த இடத்தில் என் வாழ்க்கை குறிப்பிட்ட திட்டப்படி நடந்து வந்தது. இதனால்தான் என்னால் எளிதாக தோல்விகளிலிருந்து விடுபட்டு சவால்களை சந்திக்க முடிந்தது. நான் என்னை எப்போதும் பெட்டராக மாற்றிக்கொள்ள முயன்றுகொண்டே இருந்தேன். நான் எனது விளையாட்டை வேறு பரிணாமத்தில் மாற்ற நினைத்துக்கொண்டிருந்தேன்.  கேல்ரத்னா, ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக அதிக வெற்றி, பெண்கள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள், உங்களது சுயசரிதை படமாக்கப்படுவது என பல்வேறு விஷயங்கள் நிறைவேறி வருகிறது. இதில் நிறைவேறாமல் இருப்பது என ஏதேனும் இருக்கிறதா?  உலக கோப்பையை வெல்வது எனது லட்சியம். 2022ஆம் ஆண்டு இதற்கான வாய்ப்பு உள்ளது. இதுதான் கேக்கின் மீதுள்ள செர்ரி போன்ற பெருமை. நாங்கள் வெற்ற

டி20 அணியில் இடம்பெறாத சிறந்த வீரர்கள்!

படம்
  டிவென்டி 20  போட்டியில் விளையாடும் வீர ர்கள் பற்றி அறிந்திருப்பீர்கள்.  இதில் விளையாடுவார்கள் என சில வீர ர்களை எதிர்பார்த்திருப்போம். ஆனால் அவர்கள் விளையாடும் அணியில் இருக்கமாட்டார்கள். அவர்களில் சிலரைப் பார்ப்போம்.  ஷிகார் தவான் ஐபிஎல் சீசனை மிகவும் மெல்லத் தொடங்கிய வீர ர் தவான்.  இந்த சீசனில் 587 ரன்களை எடுத்திருக்கிறார். இவரளவு பிறரை ஒப்பிட முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் இவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. ரோகித் சர்மா, கே.எல். ராகுல், இஷான் கிஷான் ஆகியோர் முதல், இரண்டு, மூன்றாவது இடத்தில் களமிறங்கவிருக்கிறார்கள்.  தமிம் இக்பால் 2016ஆம் ஆண்டு நான்கு ஆட்டங்களில் 295 ரன்களை விளாசியவர் இக்பால். ஆடும் அணியில் வீர ர்கள் நிறைந்துவிட்டதால் இவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. விளையாட்டு நேரம் இவருக்கு சரிவர கிடைக்காத காரணத்தால், அணியில் வெளியே வைக்கப்பட்டு இருக்கிறார்.  ஃபேப் டு பிளெசிஸ் சென்னை நான்காவது முறையாக ஐபிஎல் பட்டம் வெல்ல பிளெசிஸ் முக்கியமான காரணம். டெஸ்ட் போட்டியில், இரண்டாவதாக அதிக ரன்களை எடுத்தவர் இவர். ஆனாலும் கூட ட்வென்டி 20 போட்டியில் இவரைத் தேர்ந்தெடுக்கவில்லை