இடுகைகள்

சதுப்புநிலம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காக்கையைப் போன்ற பெரிய நீர்க்காகம்!

படம்
  நீர்ப்பறவைகள் பெரிய நீர்க்காகம் அறிவியல் பெயர்: பெரிய நீர்க்காகம் ( ) குடும்பம்: பாலக்ரோகோரசிடே (Phalacrocoracidae) வேறு பெயர்கள்: கருப்பு பறட்டை, கருப்பு நீர்க்காகம், பெரிய நீர்க்காகம் சிறப்பம்சம் காக்கையைப் போல இருந்தாலும் கழுத்தும் வாலும் அதனை விட நீளம். நீருக்கடியில் மூழ்கி மீன்களை பிடித்து உண்ணும். இறக்கைகளை மரக்கிளைகளில் விரித்து காய வைக்கும். வாத்தைப்போல கால்களில் சவ்வு உண்டு. ஆண் காகங்கள், பெண் காகங்களை விட அளவிலும் எடையிலும் பெரியது.  எங்கு பார்க்கலாம் ஆறு, குளம் , குட்டை, ஏரி, சதுப்புநிலம், கடற்புரங்களில் பார்க்கலாம்.  ஆயுள் 11 ஆண்டுகள் முட்டைகளின் எண்ணிக்கை  7 ஐயுசிஎன் பட்டியல் அச்சுறுத்தும் நிலையில் இல்லாதவை (LC) எழுப்பும் ஒலி கீக் (Kik)... குவாக்(Cuvak)... https://en.wikipedia.org/wiki/Great_cormorant https://www.iucnredlist.org/species/22696792/155523636 https://www.allaboutbirds.org/guide/Great_Cormorant/lifehistory பட்ம் - விக்கிப்பீடியா

அலையாத்திக் காடுகளில் உள்ள சிறப்புகள் என்னென்ன?

படம்
  அலையாற்றிக்காடுகளின் சிறப்பம்சங்கள்! அலையாற்றிக் காடுகளிலுள்ள மரங்கள் எப்போதும் பசுமையாக உள்ள இலையுதிரா காடுகள் வகையைச் சேர்ந்தவை. இதன் காரணமாக கார்பன் டையாக்சைட் வாயுவை உட்கிரகித்து, ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது. இம்மரங்கள் தம் வேர்கள் மற்றும் தண்டுகளிலுள்ள சிறிய சுவாசிப்பு துளைகள் மூலம் காற்றை உறிஞ்சுகின்றன. இத்துளைகளுக்கு லென்டிசெல்ஸ் (Lenticels) என்று பெயர்.  அலையாற்றிக் காடுகளிலுள்ள ரைசோபோராசீயே (Rhizophoraceae) இனத்தைச் சேர்ந்த தாவரங்களின் இனப்பெருக்க முறைக்கு தாயோட்டு விதை முளைத்தல் (Vivipary)என்று பெயர். விலங்கினங்களைப் போல, விதைகளைக் கன்று போல ஈன்று வளர்க்கின்றன. உலக வெப்பமயமாதலால் கடல்மட்டம் உயர்ந்து வருகிறது. இதன் விளைவாக, கடலோரப் பகுதிகள் நீரால் அரிக்கப்பட்டு வருகின்றன. அலையாற்றிக் காடுகள் உள்ள பகுதிகளில் இப்பாதிப்பு ஏற்படுவதில்லை. இவை, இயற்கை அரணாக நின்று தம் வேர்களை நிலத்தில் படர்த்தி நிலப்பரப்பைக் காக்கின்றன.  அலையாற்றிக் காடுகளில் கடல் மீன், இறால், சுறா ஆகியவை ஆண்டு முழுவதும் வலசை வருகின்றன. இவை முட்டையிட்டு குஞ்சு பொரித்த பிறகே மீண்டும் கடலுக்கு செல்லும். இதன் காரணமாக

சதுப்புநிலத்தைக் காக்கும் இந்திய அரசின் திட்டம்!

படம்
  சூழலைக் காக்கும் சதுப்புநில நண்பன்  திட்டம்! இந்தியா முழுவதும் உள்ள சதுப்பு நிலங்கள், சூழலின் பல்லுயிர்த்தன்மைக்கு உதவுகின்றன. இவற்றை பாதுகாப்பதும், ஆக்கிரமிப்பிலிருந்து தடுப்பதும் சவால் நிறைந்ததாக உள்ளது. இதற்கான தீர்வை வெட்லேண்ட் மித்ரா (Wetland Mitra) எனும் திட்டத்தை இந்திய அரசு உருவாக்கியுள்ளது.  தற்போது, சென்னையில் 'சதுப்புநில நண்பன்' என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதன்படி, சூழலியலில் ஆர்வம் உள்ளவர்கள், தன்னார்வலராக இதில் தங்களை இணைத்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட இடைவேளையில் ஏரி, சதுப்பு நிலங்களைக் கண்காணிக்க வேண்டும். இதுதான் அவர்களது பணி. இதன்மூலம் ஏரி, சதுப்புநிலங்களின் பாதுகாப்பு உறுதிப்படுகிறது. அங்கு வரும் பறவைகள், பட்டாம்பூச்சிகள் பற்றிய துல்லியமான தகவல்களும் சதுப்புநில ஆணையத்திற்கு கிடைத்துவிடுகிறது. இந்த ஆணையத்தின் தலைவராக மாவட்ட ஆட்சியர் உள்ளார். தேவையான அரசு அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கைகளை எடுக்க தன்னார்வலர்களின் தகவல்கள் உதவுகின்றன.  “தற்போது சென்னையில் 106 சதுப்பு நில நண்பர்கள் உள்ளனர். இவர்கள் மூலம் கிடைக்கும் தகவல்களைப் பெற்று சதுப்புநிலங்களைப் ப