இடுகைகள்

மார்க்கெட்டிற்கு புதுசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வீடியோ எடிட்டிங்கிற்கான லேப்டாப்கள்!

படம்
வீடியோ எடிட்டிங் என்பது இன்றைக்கு முக்கியமான இளைஞர்களின் வேலைவாய்ப்பு தகுதியாக பார்க்கப்படுகிறது. காரணம், அனைத்து விஷயங்களும் இன்று எழுத்துக்களை விட வீடியோ வடிவில் பகிரப்படுகிறது. எனவே அதற்கான விஷயங்களை உடனே நீங்கள் செய்வது அவசியம். இதற்காகவே உதவும் லேப்டாப் ஐட்டங்களை இங்கே பகிர்கிறோம். மேக் புக் புரோ  16 இன்ச் திரை கொண்ட லேப்டாப். விலை ஆப்பிள் வகைக்கு உண்டானபடி அதிகம்தான். அமேசானில் செக் செய்து விலையை சோதித்துக்கொள்ளுங்கள். மென்பொருட்கள், வன்பொருட்கள் அனைத்துமே மேக்கில் சூப்பராக இருக்கும் என்பதால் எந்த ஃபார்மேட் வீடியோவையும் நீங்கள் எடிட் செய்து அதகளப்படுத்தலாம். புதிய மேம்படுத்தப்பட்ட கீபோர்டு நன்றாக இருக்கிறது. ஹெச்பி என்வி  லேப்டாப்களில் ஆல்ரவுண்டர் இதுதான். விலைக்கு ஏத்த பணியாரம்தான் என்றாலும் ருசிக்கிறது. 4கே வீடியோ வசதி கிடையாது.முழு ஹெச்டி திரை வீடியோ வேலைக்கு அம்சமாக இருக்கிறது. எடை 1.3 கிலோதான். 4 ஜிகா ஹெர்ட்ஸ் ஐ 5 - ஐ 7 சிப்கள் 1080 வீடியோவை எடிட் செய்வதற்கு எந்த பிரச்னையும் சொல்லவில்லை. ஆனால் அதற்கு மிஞ்சிய தரத்திலான வீடியோக்களை எடிட் செய்யும்போது திணறுகிற

சிஇஎஸ் 2020 - கருவிகளில் என்ன புதுசு?

படம்
அமெரிக்காவில் சிஇஎஸ் விழாவில் ஏராளமான புதிய எலக்ட்ரிக் பொருட்கள் வெளியிடப்படும். அதில் சில அமேசிங்காக இருக்கும். சில ஐயையோ என்று சொல்ல வைக்கும். நமக்கு எதுவாக இருந்தாலும் அதில் புதுமையான கான்செப்ட் முக்கியம். அப்படி வியக்க வைத்த சில பொருட்கள் உங்களுக்காக.... காரில் கண் கூசாது ஜெர்மனி நிறுவனமான போச் நிறுவனத்தின் தயாரிப்பு. சாதாரணமாக சூரிய ஒளி கண்களில் ஏற்படுத்தும் கூச்சத்தைத் தவிர்க்க காரில் வசதிகள் உண்டு. அதனை டிஜிட்டலாக மாற்றியுள்ளனர். கண்கூசுவதைத் தடுக்கும் பொருள் இப்போது எல்சிடி திரையாக மாறியுள்ளது. இதில் உள்ள கேமரா சூரிய ஒளி நம் முகத்தில் படும் இடத்தை மட்டும் நிழலாக மாற்றி விபத்துகளிலிருந்து காக்கிறது. விழாவில் சோதித்தபோது கண்களில் நிழல் ஏற்பட சிறிது நேரம் தேவைப்பட்டது. செக்வே எஸ் பாட் பிக்சாரின் வால் இ படத்தில் காப்பியடித்து செய்தது போலவே இருக்கின்றன இந்த வாகனங்கள். எதிர்காலத்தில் விமானநிலையத்தில் உங்களை அழைத்துச்செல்லும் வண்டிகளாக இவை இருக்கலாம். பாட் செஃப் - சாம்சங் எதிர்காலம் தானியங்கி கருவிகள்தான் என சாம்சங் உறுதியாக உள்ளது. தற்போது தானியங்கி கருவி

கார்மின் ஸ்மார்ட்வாட்ச் - அசத்தும் அம்சங்கள்!

படம்
கார்மின் ஸ்மார்ட் வாட்சுகள்! கார்மின் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்சுகளில் ஃபெனிக்ஸ் சீரிஸ் புதியது. தற்போது அதில் ஃபெனிக்ஸ் 6 ரக வாட்சுகள் வெளியிடப்பட்டடுள்ளன. புதிய வாட்சில் என்ன இருக்கிறது?  சோலார் சக்திதான் புதியது. பேட்டரி மூன்று நாட்கள் தாங்கும் திறனோடு இருக்கிறது. இந்த வகையிலேயே பெரிய வாட்சுகள் இவை. ஜிபிஎஸ், ஸ்மார்ட்போன் நோட்டிஃபிகேஷன், உங்கள் தினசரி நடவடிக்கைகளை கண்காணிப்பது என அனைத்து வசதிகளும் இதில் உள்ளது. வேறு என்ன தேவை என்ன என இமெயில் அனுப்பினால் அதனையும் செய்து தருவார்கள். இந்த வகையில் அத்தனை வசதிகளையும் கொண்டு வந்து ஆச்சரியப்படுத்துகிறார்கள். நன்றி - நியூ அட்லஸ்