இடுகைகள்

ஶ்ரீஹரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மருத்துவ சோதனையால் நோயுற்ற கிராம மக்களைக் காப்பாற்ற கொலைத்தாண்டவமாடும் பொதுநல நேசன்!

படம்
                பத்ராத்ரி தெலுங்கு ஶ்ரீஹரி , கஜாலா பத்ராத்ரி என்ற கிராமத்தில் சட்டவிரோதமாக மருந்துகளை பார்மசூட்டிகல் நிறுவன அதிபர் பரிசோதிக்கிறார் . இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் , அவரது துறைசார்ந்த பிற அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள் . இதனால் அந்த கிராமத்தில் வாழும் பல நூறு மக்கள் வியாதி வந்து வாழும் பிணம் போல மாறுகிறார்கள் . இதை தடுக்க அந்த கிராமத்தில் உள்ள ரகுராம் என்பவர் முயல்கிறார் . அவரது தம்பியை மருத்துவம் படிக்க வைக்கிறார் . கிராமத்தினர் நோய்களிலிருந்து மீண்டனரா என்பதே கதை . தொடக்க காட்சியில் சிறைக்குள் சென்று குற்றவாளி ஒருவரை கழுத்தில் கத்தியால் குத்தி கொல்கிறார் ரகுராம் . அடுத்து , போலீசார் துரத்த அவர்களை பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்து பீதிக்குள்ளாக்கி தப்பித்து பத்ராத்ரி வருகிறார் . அங்குள்ள மக்களுக்கு தம்பி கொடுத்ததாக மாத்திரைகளை கொடுக்கிறார் . அவரது குடும்பத்தில் அம்மா , மாமா , அவரின் பெண் ஆகியோர் இருக்கிறார்கள் . மாமா பெண்ணை , மருத்துவரான பிறகு தம்பி திருமணம் செய்துகொள்வதுதான் ஏற்பாடு . அதைப்பற்றி பேசுகிறார்கள் . ஆனால் ரகுராம் சற்று மன