இடுகைகள்

குற்றவாளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாக்கி தப்பிக்கும் சமூக மனநிலை - மெல்வின் லெர்னர்

படம்
  மனிதர்கள் தங்களுடைய பாதுகாப்பை அதிகம் விரும்புபவர்கள். அவர்களுடைய சொகுசு குறையாமல் இருக்கவேண்டுமென நினைப்பவர்கள். இதன் எதிரொலியாக, அவர்கள் எதை நம்புகிறார்கள். எதை மறுக்கிறார்கள் என்று பார்த்தாலே விஷயம் புரிந்துவிடும். ஒருவருக்கு தனது வாழ்க்கை மீது கட்டுப்பாடு இருந்தாலே, மனதில் நிம்மதியை உணர்வார். கெட்டவர்களுக்குச் செய்த தவறான செயல்களின் அடிப்படையில், தண்டனை கிடைக்கும். நல்லவர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும் என பலரும் நம்புகிறார்கள். இப்படி நடக்கிறதோ இல்லையோ நம்புவதன் மூலம் தன்னைச் சுற்றி நடைபெறும் செயல்பாடுகளின் மேல் கட்டுப்பாடு உள்ளதாக ஒருவர் நம்புகிறார்.  இதை 'ஜஸ்ட் வேர்ல்ட்' எனும் கருத்தாக உளவியலாளர் மெல்வின் லெர்னர் வரையறுக்கிறார். மக்கள், தங்கள் வாழ்க்கையை கட்டுப்பாட்டுடன் வாழ்வதாக நினைத்து, மக்களுக்கு அவர்களின் தகுதியைப் பொறுத்தே அனைத்தும் கிடைக்கும் எனும் இடத்திற்கு வந்து சேர்கிறார்கள். மெல்வின், மக்கள் இப்படி தவறான நம்பிக்கையை உறுதியாக நம்புவதால், உண்மையான தகவல்களை புறக்கணிக்கிறார்கள் என்று கூறினார். ஒருவர் தனது சுயநலனுக்காக உண்மையை புறக்கணிப்பது என்று கூறலாம்.  ஒருவர

பொய் சொல்லி இளம்பெண்ணின் வீட்டுக்குள் நுழையும் பொறியாளன், எதிரியை அன்பால் வெல்லும் கதை! - பர்சனல் டேஸ்ட் 2010

படம்
        பர்சனல் டேஸ்ட்  கொரிய தொடர் தொடரை இலவசமாக யூட்யூபில் பார்க்கலாம்.  எழுத்து  கிம் ஹி ஜூ இயக்கம் சன் ஹியூங் சுக், நோ ஜாங் சான்  கொரிய சூப்பர் ஸ்டார் லீ மின் ஹோ நடித்திருக்கிறார். தொடரில் முக்கியமான கதை,  லின் ஹோவின் எம் கட்டுமான நிறுவனத்திற்கும், மிராயே நிறுவனத்திற்கும் நடக்கும் தொழில்போட்டிதான் . லீ மின்ஹோவின் தந்தை மிராயேவில் வேலை செய்தாலும் கூட அவருக்கு அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் தங்கியிருந்த வீடு கூட துரோகம் செய்த நண்பரால் கைப்பற்றப்படுகிறது. அப்படி துரோகம் செய்தவர்தான் மிராயே கட்டுமான உரிமையாளர். அவரை பழிவாங்கவேண்டும் என துடிப்பாக இயங்கும் லின் ஹோவுக்கு சரியான வாய்ப்பாக டேம் ஆர்ட் கேலரி திட்டம் வருகிறது. அதில்  போட்டியிடுகிறார்.  அந்த நிறுவனத்தினர் சாஞ்ஜோ எனும் கட்டுமான அமைப்பின் படி கட்ட வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள் என்ற ரகசிய செய்தி லின் ஹோவிற்கு கிடைக்கிறது. அந்த அமைப்பைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் பேராசிரியர் பார்க் என்ற கட்டுமானக் கலைஞரின் வீட்டுக்கு சென்று ப்ளூபிரிண்டுகளை பார்க்க வேண்டும். ஆனால் அவர் இங்கிலாந்தில் இருக்கிறார். கொரியாவில் அவரது

சிசிடிவி மூலம் குற்றவாளிகளை ஸ்மார்ட்டாக பிடிக்கும் காவல்துறை! எப்படி குற்றவாளிகளைப் பிடிக்கிறார்கள்?

படம்
        சிசிடிவி கேமரா மூலம் திருடர்களை பிடிக்க முடியுமா? சென்னை பெருநகரத்தில் காவல்துறையினர் 2.9 லட்சம் சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளனர். இதில் 1.5 லட்சம் கேமராக்கள் தனியார் வீடுகள், கடைகளுக்கானவை. இதன்மூலம் கடைகளில் நடைபெறும் திருட்டு, கொள்ளை, வழிப்பறி, நகை பறிப்பு ஆகியவற்றில் தொடர்புடையவர்களையும் காவல்துறையினர் ஸ்மார்ட்டாக பிடித்து வருகின்றனர். கடந்த செப்டம்பரில் நடைபெற்ற 14 கொலைக்குற்றங்களில் தொடர்புடையவர்களை காவல்துறையினர் சிசிடிவி மூலம் கண்டுபிடித்துள்ளனர். இதில் முக்கியமான உதவி சிசிடிவி காட்சிகள் மூலம் கிடைத்துள்ளன. ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை 60 வழிப்பறி கொள்ளையர்கள் இம்முறையில் பிடிபட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். இம்முறையில் அண்மையில் புல்லட்டுகளை திருடி நகருக்கு வெளியில் விற்கும் திருட்டு கும்பலை போலீசார் பிடித்துள்ளனர். எப்படி பிடிக்கிறார்கள்? நகரத்தின் பாதைகள், ஸ்மார்ட்போன், சிசிடிவி கேமராக்கள் ஆகியவற்றை இணைத்து யோசிக்கும் காவல்துறை அதிகாரிகள்தான் இதில் வெற்றி பெறுகின்றனர். அனைவரும் இதனை கவனித்து புரிந்துகொள்ள முடியாது.முதலில் குற்றம் நடந்த இடத்திலிருந்து 50 முதல் 50

கொலையை சாதுர்யமாக பயன்படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பவாதிகளின் சதி, பலியாகும் உயிர்கள்! லாக்கப்

படம்
                      லாக்கப் இயக்கம் சார்லஸ் இசை அரோல் கொரோலி காவல்நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் அவரது வீட்டில் கத்தியால் கழுத்து வெட்டப்பட்டு இறந்து கிடக்கிறார். அவரது கொலையில் துறை சார்ந்த இருவர் சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்கள் யார் என்பதுதான் கதை. இந்த வெப் மூவியை நிச்சயம் வைபவ்விற்காக பார்க்காதீர்கள். வருத்தப்படுவீர்கள். முரளியாக வரும் வெங்கட்பிரபு, தற்காலிக இன்ஸ்பெக்டராக வரும் ஈஸ்வரி ராவ் ஆகியோரின் நடிப்புக்காக பார்க்கலாம். வைபவ், வெங்கட்பிரபு இரண்டுமே பேருமே இன்ஸ்பெக்டரிடம் புரமோஷன் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அது அவ்வளவு எளிதில் கிடைக்காது என இன்ஸ்பெக்டர் கூறிவிட்டு, தனக்கு ஏதாவது அவர்கள் செய்துகொடுத்தால்தான் நான் பரிந்துரைப்பேன் என்கிறார். இதற்கு வெங்கட்பிரபு ஒகே சொல்லி இன்ஸ்பெக்டரின் பெண் ஆசையை தீர்க்க முயல்கிறார். அதில் ஏற்படும் பிரச்னை, அவரையும் வைபவ்வையும் வலுவாக இன்ஸ்பெக்டர் கொலைவழக்கில் சிக்க வைக்கிறது. கூடவே இன்னொரு பிரச்னையாக இன்ஸ்பெக்டரை கொல்ல உள்ளூர் ரவுடி ஒருவர் சமயம் பார்த்து காத்திருக்கிஈறார். அவர் சப் இன்ஸ்பெக்டரான வெங்கட்பிரபுவுக்கு நெருக்கமானவர். இன்ஸ

மனிதநேயத்தை மறைய வைக்கும் பேராசை! - எவரு - குற்றவாளி யார்?

படம்
எவரு - தெலுங்கு  இயக்கம் - வெங்கட் ராம்ஜி ஒளிப்பதிவு  - வம்சி பச்சிபுலுசு இசை - ஸ்ரீசரண் பகலா சமீரா என்ற தொழிலதிபரின் மனைவி, குன்னூர் ரிசார்ட் ஒன்றில் வல்லுறவு செய்யப்படுகிறார். வல்லுறவில் ஈடுபடுபவர் டிஎஸ்பியான அசோக் கிருஷ்ணா என்ற உயரதிகாரி. அவரை சமீரா, துப்பாக்கியால் சுட்டுக்கொல்கிறார். அதாவது தன்னைக் கற்பழித்தார், அதனைத் தடுக்கும் முயற்சியால் அவரைக் கொன்றேன் என்கிறார். ஊடகங்களில் தன்னை பாவமாக காட்டிக்கொள்கிறார். விரைவில் தீர்ப்பு வரவிருக்கிறது. இந்த நிலையில் அவருக்கு உள்ளுக்குள் பதற்றம் அதிகரித்து வருகிறது. காரணம், வழக்கு நகரும் திகுதிகு வேகம்தான. இதற்கிடையே போலீஸ்துறை தங்கள் மீதான களங்கத்தைப்போக்க ரத்னாகர் எனும் தனியார் வக்கீலை  நியமிக்கின்றனர். இதனால் தான் பாதிக்கப்படுவோமோ என சமீரா பயப்படுகிறார். அப்போது அவரைக் காப்பாற்ற, வருகிறார் விக்ரம் வாசுதேவ்.ஆம் லஞ்ச லாவண்யம் வாங்கி குற்றவாளிகளுக்கு உதவுபவர் இவர். இருபது லட்சம் டோக்கன் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு சமீராவுக்கு உதவுகிறார். அரசு வழக்குரைஞரிடம்  எப்படி பேச வேண்டும் என்று கற்றுக்கொடுக்கும்போது வழக்கு தொடர்பான உண்மைய

பொய் சொன்னால் போலீஸ் கண்டுபிடிப்பது இப்படித்தான்!

படம்
இந்துஸ்தான் டைம்ஸ் மிஸ்டர் ரோனி பொய் சொன்னால் எப்படி கண்டுபிடிக்கிறார்கள்? உண்மையைச் சொல்லுங்க சார் என்று சொன்னால் எந்த குற்றவாளியும் தெரிந்த விஷயங்களை சொல்வதில்லை. எனவே குறைந்தபட்சம் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கையை, காலை முறித்துக்கொள்ளுமளவு சுதந்திரம் கொடுத்தால்தான் வேலை நடக்கிறது. மாஜிஸ்டிரேட் கூட மாவுக்கட்டை பார்த்து பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டாயா என்று கேட்பதில்லை. அவருக்கும் பழகி யிருக்கும். நாம் கூறப்போவது சற்று ஜென்டிலமேன் தனமான விசாரணை முறை. இதில் இன்னொரு வகைதான் உண்மை கண்டறியும் சோதனை. இதில் நம் இதயத்துடிப்பு, கண்கள், நாடி என பல்வேறு விஷயங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதற்கு டிமிக்கி கொடுக்கும் விஷயங்கள் அமெரிக்க உளவுத்துறையில் கற்றுத்தரப்படுகின்றன. 1921 ஆம் ஆண்டு ஜான் அகஸ்டஸ் லார்சன், லை டிடெக்டர் கருவியைக் கண்டுபிடித்தார். 1. குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கு தொடர்பான விவரங்களை முதலில் ஆராய்ந்து, கேள்விகளைத் தயாரிப்பார்கள். இக்கேள்வி முழுக்க குற்றம் சாட்டப்பட்டவரை பல்வேறு அடுக்குகளாக ஆராய்வதாக இருக்கும். ராபிட் ஃபயர் ரவுண்ட் போல கேள்விகளை எறிவார்கள

கண்கள் பொய் சொல்கிறதா? - புதிய ஆராய்ச்சிகள்!

படம்
பொய் சொல்லும் கண்கள்? போலீசில் சில பெயர் பெற்ற ஆட்கள் உண்டு. கண்ணைப் பார்த்தாலே தெரியுமேப்பா? திருடனா இல்லையான்னு... இதில் சிலர் மட்டும் விதிவிலக்காக தப்பிப்பார்கள். தற்போது ஜப்பானில் குற்றவாளிகளின் கண்களைப் பின்தொடர்ந்து உண்மை அறியும் சோதனையைச் செய்து வருகின்றனர். இதனை சிஐடி என சுருக்கமாகச்சொல்கின்றனர். இதன்மூலம் குற்றம்நடந்த இடம், ஆயுதம் ஆகியவற்றை அறிய முயற்சிக்கின்றனர். ஆனால் இன்னும் இது மக்களின் முகத்தை அறியப் பயன்படவில்லை. ஸ்காட்லாந்தில் மற்றொரு ஆய்வு, வேறுவிதமாக நம்மை ஈர்க்கிறது. இதில் குறிப்பிட்ட புகைப்படங்களை குற்றவாளிகளைப் பார்க்க வைக்கிறார்கள். அவர் தொடர்புடையவரா, இல்லையான என்றால் அதற்கான பட்டன்களை அழுத்த வேண்டும். கூடவே கண்களின் நகர்வும் பதிவு செய்யப்படுகிறது. இந்த ஆய்வின் பெயர் கான் ஃபேஸ் புராஜெக்ட். இதனை டாக்டர் அலிசா மிலன் செய்கிறார். இதற்கு ஸ்காட்லாந்து பல்கலைக்கழகம் ஸ்டிர்லிங் நிதியுதவி செய்கிறது. இதில் தெரிந்த முகங்களைப் பார்த்து உண்மையை மறைக்க முயன்றால் சோதனையில் தெரிந்துவிடும். ”காவல்துறையில் நடத்தப்படும் சோதனையில் சிலர் வேண்டுமென்றே அல்லது பயத்தால்

குற்றங்களுக்கு மரபணுக்கள் காரணமா?

ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி ஒருவர் மோசமான குற்றவாளி ஆக மரபணுக்கள் காரணமா? இப்படி கேள்வி பிறக்க, தந்தி கட்டுரைகளை தொடர்ந்து படித்தால்போதும். ரத்தம் தெறிக்க ஒன்லைனை வைத்துக்கொண்டு கொலை செய்தவர்களே படித்து சிரிக்கும் கதைகள் அங்குள்ள உதவி ஆசிரியர்கள் எழுதும் திறன் பெற்றவர்கள். சரி அறிவியல் முறைக்கு வருவோம். வெளிப்படையாக சொல்வதென்றால், சமூகம் எப்படி நடந்துகொள்கிறதோ அதன் வெளிப்படை அவர்கள் குற்றச்செயல்களாக வெளிக்காட்டுகிறார்கள். தீவிர தொடர் கொலைகார ர்களை போலீசாரும், உளவியலாளர்களும் ஆராய்ந்தபோது, சிதைந்துபோன அவர்களது குடும்பமும்,  வன்முறையான பெற்றோரின் குணாதிசயங்களும் அவர்களின் மனதை இரும்பாக்கி உணர்ச்சிகளே இல்லாதவர்களாக மாற்றுகிறது. மேலும் சிறுவயதில் தீவிர அவமானங்களை சந்திப்பவர்கள், அதற்கு நிச்சயம் பின்னால் பழிவாங்குவது உறுதி. அது குறிப்பிட்ட சம்பவத்திற்கு காரணமானவர்களாக இருக்கவேண்டுமென்ற அவசியம் இல்லை. அதற்கு சமூகம் பதில் சொல்ல வேண்டும். தவறான நடத்தைகளை திருத்திக்கொள்ள வாய்ப்பு கொடுத்து, குற்றவாளிகளை சமூகத்தோடு இணைத்துக்கொள்வதே நல்லது. காரணம், அவர்கள் செவ்வாய் கிரகத்திலிருந்த