இடுகைகள்

மில்லியனர் வாழ்க்கை! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மில்லியனர் வாழ்க்கை இனிப்பா? கசப்பா?

படம்
21 ஆம் நூற்றாண்டில் மில்லியனர்களின் வாழ்க்கை! - ச.அன்பரசு பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, கடன் உள்ளிட்ட சிக்கல்கள் எளிய மக்களுக்கு மட்டுமல்ல; இந்தியத் தொழிலதிபர்களுக்கும் உண்டு. தங்களுடைய தொழில் கனவுகளை வேற்றுமைகள் நிறைந்த இந்தியமண்ணில் போராடி விதைப்பவர்கள் பல்வேறு காலகட்டத்திலும் சவால்களோடு பயன்களை அறுவடை செய்கின்றனர். அறிவதில்லை. ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமுதாயத்தில் பர்சனல் வாழ்வை படுசீக்ரெட்டாக பராமரிக்கிறார்கள் தொழிலதிபர்கள். பரம்பரைத் தொழில்களையும் தயங்காமல் டிஜிட்டல் பாதைக்கு கைமாற்றியுள்ளது நியூஜென் பிஸினஸ்மேன்களின் சமர்த்து. உல்லாசமே உற்சாகம்! ஹரியானாவின் குர்கானிலுள்ள தீபக் பன்சால், இரண்டு டிஜிட்டல் நிறுவனங்களின் மூலம் கரன்சிக்கு பஞ்சமில்லாத வாழ்க்கை வாழ்கிறார். ஒருகட்டத்தில் பரபர கடிகாரமுள்ளோடு போட்டாபோட்டி போடும் வாழ்க்கை மனதின் அமைதியைக் குலைக்க தவித்துப்போனார். மலேசியாவின் பினாங்கு தீவுக்கு ஜாலி சுற்றுலா சென்ற தீபக், அந்தச்சூழல் பிடித்துப்போக, கடல்புறமாக வீடு ஒன்றை வாங்கிப்போட்டு அங்கேயே பரமானந்தமாக செட்டிலாகிவிட்டார். டிஜிட்டல் தொழிலை உலகில் எ