இடுகைகள்

ஃபெமினா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களுக்கான எளிமையான இயற்கை இழைகளைக் கொண்ட துணிகளே லட்சியம்! - இந்து ஸ்ரீவஸ்தவா

படம்
  இந்து ஸ்ரீவஸ்தவா ஃபீல்குட் எனும் நிறுவனம் மூலம் கைகளால் நெய்யும் இழைகளைக் கொண்ட துணிகளை தயாரிக்கிறார் இந்து.  பெண்களின் அலமாரியில் 50 சதவீத உடைகளை கைகளால் நெய்த துணிகளாக மாற்றவேண்டும் என்பதே இந்துவின் லட்சியம்.  பிறருக்கு உதவவே தொழிலை தொடங்கினீர்களா என்ன? என்னுடைய மகள் தன்னுடைய உடை பற்றி எப்போதும் குறை சொல்லிக்கொண்டே இருப்பாள்.  வேலை செய்யும் இடம், குடும்ப நிகழ்ச்சிகள் என அவள் அணியும் ஆடைகள் அனைத்தின் மீதும் இப்படி புகார்களை குவித்தாள். மகள் என்பதால் புகார்களை எளிதாக புரிந்துகொள்ள முடிந்தது. பொதுவாகவே நிறைய பெண்களுக்கு தங்கள் உடைமீது குறைகள், புகார்கள் உண்டு. அப்போது இந்திய ஜவுளித்துறை பற்றிய நூலொன்றை படித்தேன். அப்போதுதான் துணிகளில் பிரச்னை இல்லை. அதை நெய்யும் இழைகள் இயற்கையானவையாக இருக்கவேண்டும் என முடிவு செய்தேன். அதை மனதில் வைத்துக்கொண்டுதான் இந்துவை தொடங்கினேன். தொன்மைக்காலத்தில் மக்கள் தங்கள் பகுதியில் என்ன கிடைக்கிறதோ அதைத்தான் வாங்கி உடுத்துவார்கள். நான் தொடக்கத்தில் எனது மகளுக்காகவே உடைகளை வடிவமைத்தேன். அவை எளிமையான அழகுடையவை.  உங்களுடைய ரோல்மாடல் யார்? எனக்கு கோகோ சேனல் என்

தோற்றுப்போவதற்கு பயப்படாதீர்கள்! - ஹேம்லதா முகேஷ் சாங்வி, வர்த்தமான் ஜூவல்லர்ஸ்

படம்
  ஹேம்லதா முகேஷ் சாங்வி துணை நிர்வாகத்தலைவர் - வர்த்தமான் குழும நிறுவனங்கள் படித்தது மென்பொருள் பொறியியல் படிப்பு. ஆனால் செயல்படுவது, தொழிலதிபராக தொழில்துறையில் என்பதுதான் லதாவின் வாழ்க்கை. மும்பையில் செயல்படும் வர்த்தமான் குழுமத்தின் வளர்ச்சிக்கு முதுகெலும்பு என லதாவைக் கூறலாம். வர்த்தமான்  நிறுவனத்தின் முக்கிய வணிகம், நகைகள்தான்.  2016ஆம் ஆண்டு வர்த்தமான் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றார். அதனை தங்க நகைக்கு கடன் கொடுக்கும் நிறுவனமாக வளர்ச்சி பெறச் செய்தார். வர்த்தமான் நிறுவனம், நிலம், வண்டி, வாகனங்கள், ஓவியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றிலும் முதலீடுகளை செய்து வருகிறது. இந்தியாவின் நம்பிக்கையான நூறு நிறுவனங்களைக் கணக்கெடுத்தால் வர்த்தமான் நிறுவனமும் அதில் ஒன்று என்று கூறலாம்.  ஹேம்லதாவிடம் பேசினோம்.  நீங்கள் வணிகத்திற்குள் எப்படி நுழைந்தீர்கள்? 2006ஆம் ஆண்டு எனது மாமனார் மறைவிற்குப் பிறகு எனது கணவர் வர்த்தமான் குழுமத்தின் தலைவராக ஆனார். நான் வணிகத்திற்குள் வர நினைக்கவில்லை. ஆனால் எனது கணவர் நகை தொடர்பான வணிகத்தை கவனித்துக்கொள்ள வலியுறுத்தினார். சந்தையை நன்கு ஆய்வு செய்து

எனது முயற்சிகள் அனைத்துமே டிரையல் அண்ட் எரர் தான்! - ஃபேஷன் டிசைனர் அஸ்ரா சையத்

படம்
  அஸ்ரா சையத் சிறுவயதில் படிக்கும்போது நான் வக்கீலாக கனவு கண்டேன், பனிரெண்டு வயதில் டாக்டராக நினைத்தேன் என்று பேசுவார்கள். ஆனால் அப்படி எந்த விஷயமும் அஸ்ராவுக்கு இல்லை. சினிமாவுக்குள் நான் விபத்தாக வந்தேன் என மைதா மாவு அழகிகள் கொஞ்சு தமிழில் பேட்டி கொடுப்பதை படித்திருப்பீர்கள். ஃபேஷன் துறைக்குள் அஸ்ரா வந்ததும் அப்படித்தான். ஃபேஷன் டிசைன் டிகிரி படித்து முடித்து தனது தொழிலை சிறப்பாக செய்து வருகிறார். சொகுசு திருமண உடைகளுக்கான பிராண்ட் ஒன்றைத் தொடங்குவதுதான் அஸ்ராவின் கனவு.  2018ஆம் ஆண்டு அஸ்ரா என்ற பிராண்டை அஸ்ரா சையத் தொடங்கினார். வடிவமைப்பும், அதில் எம்பிராய்டரி வேலைப்பாடுகளும் தான் அஸ்ராவின் தனித்துவ பலம்.  உங்களுக்கு ஊக்கம் தந்தவர் யார்? எனக்கு பாட்டி தான் இத்துறை சார்ந்த ஊக்கம் தந்த முதல் நபர். நான் ஃபேஷன் துறையில் வேலை செய்துவிட்டு காலதாமதமாக வீட்டுக்கு போகும்போதெல்லாம் எனக்காக அவர் காத்திருப்பார். அவரது பொறுமை மற்றும் அன்பும், தாராள மனப்பான்மையும்தான் என்னை இந்தளவு ஃபேஷன் துறையில் வளர்த்திருக்கிறது.  நீங்கள் தொழில்சார்ந்து கற்றுக்கொண்ட பாடம் என்ன? வேகமாக ஒன்றைத் தொடங்குவதை விட அத

பெண்கள் தங்கள் கனவை எப்போதும் விட்டுக்கொடுத்துவிடக்கூடாது! ஃபர்கா சையத், ஃபேஷன் டிசைனர்

படம்
  ஃபர்கா சையத் ஃபேஷன் டிசைனர் சிறுவயதிலிருந்து பொம்மைகளுக்கு துணிகளை பொருத்திப் பார்த்து தைத்துக் கொண்டிருந்தவர், இன்று ஃபேஷன் டிசைனராக மாறியிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லைதான். சிறிய நிறுவனமான தனது தொழிலைத் தொடங்கியவர் இன்று எஃப் எஸ் குளோசட் என்ற நிறுவனமாக வளர்ந்திருக்கிறார். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தனது ஃபேஷன் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார் ஃபர்கா.  தனது திறமையால் இன்று இந்தி திரைப்பட உலகிலும் நுழையவிருக்கிறார். அவரிடம் பேசினோம்.  ஃபேஷன் டிசைனிங் துறைக்குள் வர உங்களைத் தூண்டியது எது? எனக்கு சிறுவயதில் இருந்தே இத்துறையில் ஆர்வம் இருந்தது. எனது டிசைன் சார்ந்த வணிகத்தை 2018இல் தொடங்கினேன். எனக்குப் பிடித்ததை சரியாக செய்யவேண்டும் என்பதுதான் லட்சியம். எனது பிராண்டை பிரபலப்படுத்த நான் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறேன். இன்று என்னுடைய பிராண்ட் பலருக்கும் தெரியும் விதமாக மாறியிருக்கிறது.  இத்துறையில் உங்களுக்கு ஊக்கம் கொடுத்தது யார்? சிக்கலான சவால்களை சமாளித்து தங்களை காத்துக்கொள்ள முன்னிலைப்படுத்திக்கொள்ள போராடும் அனைத்து பெண்களுமே எனக்கு ஊக்கம் கொடுத்தவர்கள் தான். அவர்கள் த