இடுகைகள்

உலகம்-சீனா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீனா, வடகொரியா உறவு எப்படி?

படம்
சீனா - வடகொரியா : இணைந்த கைகள் ! சீனா வடகொரியாவுடன் கொண்ட நட்பு குறித்து மக்களிடம் உரையாற்றிய மாவோ , உதடும் பற்களும் போல நெருக்கமான உறவு என்று குறிப்பிட்டார் . 1950 ஆம் ஆண்டு சீனாவின் மாவோ , கொரியா போரில் வடகொரியாவுக்கு ஆதரவு தெரிவித்து தன் நாட்டு ராணுவப்படைகளை யாலு ஆற்றுப்பாதை வழியாக அனுப்பி வைத்தார் . இப்போரில் துரதிர்ஷ்டவசமாக மாவோவின் மூத்த மகன் படுகாயமுற்று இறந்துபோனார் . 1961 ஆம் ஆண்டு முதல் சீனாவுக்கும் வடகொரியாவுக்குமான ஆயுத உறவு நெருக்கமானது . மேலும் வடகொரியா ஆட்சியாளர்களான இரண்டாம் கிம் சங் தொடங்கி அறுபது ஆண்டுகளாக வடகொரியா கம்யூனிச தோழர்களுடன் உறவை வளர்த்து வருகிறது சீனா . வடகொரியாவின் ஒட்டுமொத்த வியாபாரத்தில் சீனாவின் பங்கு 90 சதவிகிதம் . வியாபார மதிப்பு 6 பில்லியன் டாலர்கள் . எண்ணெய் முதல் விவசாயப்பொருட்கள் வரையிலான அனைத்து தேவையான பொருட்களையும் வடகொரியா சீனாவிடமிருந்து பெற்றுவருகிறது . 2006 ஆம் ஆண்டு வடகொரியா அணுஆயுத சோதனை நடத்தியபோது ஐ . நா சபை பொருளாதார தடைகளை விதித்தபோதும் சீனா தலையிட்டது . இதன் விளைவாக , தடை ஆணையின் வலு குறைந்துப