இடுகைகள்

கோவிட் 19 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மோடி அரசு 2.0 - நிர்மலா சீதாராமன், அமித் ஷா செய்ததும், காத்திருக்கும் சவால்களும்!

படம்
  பாஜக அரசின் இரண்டாவது ஐந்தாண்டு ஆட்சி! மோடி 2.0 நிதித்துறையில் செய்தது என்ன? 2019ஆம் ஆண்டு நிதித்துறை அமைச்சராக நிர்மலா பதவியேற்றார். அப்போது பொருளாதாரம், சற்று தேக்கத்தில் இருந்தது. உள்நாட்டு தேவை மற்றும் தனியார் முதலீடு ஆகியவற்றில் சுணக்கம் காணப்பட்டது. எந்த நிதியமைச்சரும் சந்திக்காத சவால்களை நிர்மலா எதிர்கொண்டிருக்கிறார். முக்கியமாக கோவிட் 19. 2020ஆம் ஆண்டு மார்ச் 25 அன்று லாக்டௌன் அமலுக்கு வந்தது. இதனால் இரண்டு காலாண்டுகளாக எதிர்மறை ஜிடிபி வளர்ச்சி காணப்பட்டது.  உலக நாடுகள் அனைத்தும் பெருந்தொற்று காலத்தில் மக்களுக்கு நேரடியாக பணத்தை வழங்கின. இதை நிர்மலா சற்று மாற்றியோசித்து செயல்படுத்தினார். பலவீனமாக உள்ள பிரிவினருக்கு பொருளாதார உதவிகளை வழங்கினார். சிறுகுறு தொழில்களுக்கு பல்வேறு நிதி உதவிகளை ஒதுக்கீடு செய்தார்.  இப்போது அவர் செய்த செயல்பாடு, திட்டங்களைப் பார்ப்போம். சுருக்கமாகத்தான்.  செய்தது! மே 2020ஆம் ஆண்டு 20 லட்சரூபாய் மானிய உதவிகளை வழங்கியது இந்திய  அரசு சிறு குறு தொழில்களுக்கான அவசரநிலை கடன் திட்டம் நடைமுறைக்கு வந்தது.  2019-20, 2024-25 காலகட்டங்களில் தேசிய அடிப்படை கட்டும

மக்களுக்காக எந்த துரும்பையும் கிள்ளிப்போடாதவர்கள்தான் எங்களை ஊழல்வாதி என விமர்சிக்கிறார்கள்! - யஷ்வந்த் ஜாதவ், சிவசேனா

படம்
                  யஷ்வந்த் ஜாதவ் சிவசேனா தலைவர் மும்பை முனிசிபாலிட்டி நிலைக்குழு தலைவர் . நீங்கள் மக்களுக்கு பைகளை கொடுத்து ஊழல் செய்ததாக பாஜகவினர் குற்றம் சாட்டுகிறார்களே ? நாங்கள் உதவி தேவைப்படும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறோம் . ம எங்கள் மீது குறைசொல்பவர்கள் பணக்கார ர்களின் பக்கம் நிற்கிறார்கள் . நாங்கள் ஏழைகளின் பக்கம் நிற்கிறோம் . அதுதான் இங்கு வித்தியாசமாக உள்ளது . எனது தொகுதி மட்டுமல்ல தேவையான மக்களுக்கு நாங்கள் உதவிகளை வழங்கியபடியே இருக்கிறோம் . பதினைந்து ஆண்டுகளாக முனிசிபாலிட்டி தலைமைப் பதவியில் இருப்பது சிவசேனா கட்சிதான் ஆனாலும் கூட வெள்ள பாதிப்பை கட்டுப்படுத்த முடியவில்லையே ? நாங்கள் இதற்கான கட்டமைப்பை உருவாக்க முனைந்து வருகிறோம் . நிலத்திற்கு கீழே நீர்த்தொட்டி ஒன்றையும் கட்டி வருகிறோம் . அடுத்து வரும் பருவமழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படாது என நம்புகிறோம் . பலரும் நீங்கள் முடிவை எடுக்கும்போது உறுப்பினர்களுடன் கலந்து பேசவில்லை என்று புகார் கூறியுள்ளனரே ? பெருந்தொற்று காரணமாக வேகமாக செயலாற்ற வேண்டிய சூ்ழ்நிலை . பணத்தை நேரடியாக ந

கோவிட் -19 காலத்திலும் தானம் அளிப்பது குறையவில்லை, கூடியுள்ளது! - கிவ் இந்தியா சர்வே

படம்
            கோவிட் -19 பாதிப்பு மக்களை பிறருக்கு தானம் கொடுக்க ஊக்கம் கொடுத்துள்ளதை பெங்களூருவைச் சேர்ந்த கிவ் இந்தியா அமைப்பு தனது சர்வே மூலம் அறிந்துள்ளது.இப்போது அதற்கான டேட்டாவைப் பார்ப்போம். பிறருக்கு பொருட்களை வழ ங்குவதை கோவிட் 19 சூழல் ஊக்கப்படுத்தியுள்ளது என 85 சதவீதம் பேர் கூறியுள்ளனர். கோவிட் -19 இல்லாத விவகாரங்களுக்கு நிதியுதவி அளிக்கிறீர்களா என்று கேட்டபோது, 72 சதவீதம் பேர் அதற்கு ஆம் என்று பதில் அளித்துள்ளனர். 31 சதவீதம் பேர் முன்னர் தாங்கள் நிதியளித்த பல்வேறு விவகாரங்களுக்கு தொடர்ச்சியாக நிதியுதவியை நிறுத்தாமல் செய்து வருகின்றனர். இதில் 24 சதவீத மக்கள் தாங்கள் செய்துவந்த விவகாரங்களுக்கான உதவியை அதிகரித்துள்ளனர். 44 சதவீதம் பேர் தாங்கள் சமூக விஷயங்களுக்கு உதவுவது பற்றிய தெளிவான கருத்துடன் உள்ளனர். 74 சதவீதம் பேர் வெளிப்படையான தன்மையுடன் பணம் செலவிடப்படுவது தானம் அளிப்பதை ஊக்குவிக்கிறது என்று கூறியுள்ளனர். 49 சதவீதம் பேர் தாங்கள் சமூகத்திற்கு திரும்ப உதவிசெய்து நன்றிக்கடனை தீர்க்க நினைக்கிறார்கள் பிஸினஸ் ஸ்டாண்ர்டு கீதாஞ்சலி கிருஷ்ணா    

கொள்ளைநோய் கோவிட் -19 விதிகள் - சட்டத்தை கடைபிடிக்காத மத்திய அரசு

படம்
newslaundry ஸ்பானிஷ் காய்ச்சல், ப்ளூ காய்ச்சல் முதல் ஏராளமான கொள்ளை நோய்களை உலகம் சந்தித்துள்ளது. இதற்கான விதிகளும் இயற்றப்பட்டு அச்சமயங்களில் கடைபிடிக்கப்பட்டது. இந்தியாவில் பொதுவாக இப்பிரச்னைகள் ஏற்பட அதிக வாய்ப்பில்லை. காரணம் காய்ச்சலுக்கு சாகுபவர்களை விட கஞ்சிக்கு செத்தவர்கள் இங்கு அதிகம். அந்தளவு சோற்றுக்காக கஷ்டப்பட்டவர்கள். பசி, பட்டினி பாதிப்பு இந்தியாவில் அதிகம். அதற்காக நோய்களே வரவில்லை என்று கூற முடியாது. அதன் பாதிப்பு மிகவும் குறைவு. பிரிட்டிஷாரின் ஆட்சியில் 1897ஆம் ஆண்டு தொற்றுநோய் சட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் நோய்த்தொற்று ஏற்பட்டவர்களை பிரித்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது நடைமுறைக்கு வந்தது. 1918ஆம் ஆண்டு இன்ஃப்ளூயன்சா பாதிப்பு ஏற்பட்டு பல்லாயிரம் மக்கள் இறந்தபோது இக்கட்டுப்பாடுகளை கடைபிடித்தனர். இன்று இதில் சில மாற்றங்களை ஏற்படுத்தினாலும், 123 ஆண்டுகால சட்டத்தை பெரும்பாலான மாநிலங்கள் அப்படியே கடைபிடித்து வருகின்றன. பொதுமக்களுக்கான சுகாதாரத்தின் கீழ் 2017ஆம் ஆண்டு புதிய விதிகள் இயற்றப்பட்டன. இதில் நோய்களின் பாதிப்பு, அவர்களுக்கான சிகிச்சை