உயிர் உண்ணும் கண் - எக்ஸ்டென்டன்ட் எடிஷன் டேட்டிங் விதிமுறைகள்
உயிர் உண்ணும் கண் - எக்ஸ்டென்டன்ட் எடிஷன் டேட்டிங் விதிமுறைகள் ஆண் பெண் என இருவரும் திருமணம் செய்வது குடும்பம் என்ற அதிகாரப்பூர்வ அமைப்பிற்குள் வருவதற்கு உதவி புரிகிறது. அதேசமயம், காதலித்து பழகி பிறகு திருமணம் செய்வது இன்று முக்கியத்துவம் பெறுகிறது. டேட்டிங் என்பது மேற்கு நாடுகளில் மட்டுமல்ல ஆசிய நாடுகளிலும் பிரபலமாக உள்ளது. பலரும் அதை நேரடியாக இல்லையென்றாலும் மறைமுகமாக செயல்படுத்த முயல்கிறார்கள். நேரடியான சந்திப்பு என்பது காதலில் நுழைபவர்களுக்கான வாசல். அதற்கு முன்னதாக டின்டர், பம்பிள் என ஆப்கள் மூலம் பேசி அறிமுகமாகி பிறகு டேட் செய்து காதலித்து மணந்தவர்களே புதிய தலைமுறையினர். இணையத்தின் வசதியால் சிலர் தங்களது ஆளுமையை, முழுமையான குண இயல்பை மறைத்துக்கொள்ள முடியலாம். ஆனால், நேரடியான சந்திப்பில் அது சாத்தியமில்லை. டேட் செய்வது திருமண வாழ்க்கைக்கான ஒரு பயிற்சி என்றே வைத்துக்கொள்ளலாம். எப்படி டேட் செய்வது, அதற்கென ஏதாவது வயது தகுதி உண்டா என்று எல்லாம் கேள்வி வருகிறது. இன்று கணவரை இழந்தவர்கள், மனைவியை இழந்தவர்களும் கூட டேட் செய்கிறார்கள். டேட் செய்வது பற்றி இது சரி இத...