இடுகைகள்

பட்ஜெட் 2020 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பட்ஜெட் 2020 - மக்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இதுதான்!

படம்
பட்ஜெட்டை இரண்டு மணிநேரம் வாசித்து சாதனை செய்திருக்கிறார் நிதி அமைச்சர். புதிய அறிவிப்புகள் பெரும்பாலும் பற்றாக்குறையை சரிசெய்வதற்கான அம்சங்களாகவே இருக்கின்றன. இந்த பட்ஜெட்டில் சில விஷயங்கள் விலை குறையும். சில விலை ஏறும். அவை பற்றி பார்ப்போம். மதிப்பிற்குரிய பெற்றோர்களே, குழந்தைகளுக்கு இறக்கமதி டின் உணவுகள், பொம்மைகள் வாங்கிக் கொடுத்துத்தான் வளர்ப்போம் என நீங்கள் சொல்ல முடியாது. ஏனெனில் நெஸ்லே நான் புரோ உணவு ரூ.1,200 லிருந்து ரூ.1,340 ஆக விலை உயர்கிறது. பார்பி பொம்மையுஉம் கூட 800 ரூபாய் விலை கூடுகிறது. உடல் ஆரோக்கியத்தை உயிராக கருதுகிறீர்களா? அப்படி உடலைப் பராமரிக்க நீங்கள் சாப்பிடும் பருப்பு வகைகளும், ஷூ, செருப்புகளும் விலை ஏறுகின்றன. கலிஃபோர்னியா வால்நட் பருப்புகள் 850 லிருந்து 1280 ரூபாயாக விலை எகிறுகிறது. நைக் ஷூக்கள் 8,999 ரூபாயிலிருந்து 9,749 ரூபாயாக விலை உயர்கிறது. உள்நாட்டு வரி பர்னிச்சர் பொருட்களுக்கு கூடுகிறது. இதனால் சோபா, மெத்தை, எல்இடி விளக்குகளுக்கு நீங்கள் காசு அதிகம் செலவழித்தால்தான் உங்கள் வீட்டுக்கு வரும். நீங்கள் ஐகியா இறக்குமதி படுக்கை ஒன்றை வாங்க 5

பட்ஜெட்டை தீர்மானிக்கும் நிதி அமைச்சக குழு! - ஐவர் குழு இவர்கள்தான்

படம்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2020 - தீர்மானிப்பவர்கள் இவர்கள்தான். எதிர்வரும் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கலாகவிருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையை இரண்டாம் முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கிறார். இந்த நிதிநிலை அறிக்கையை உருவாக்குவதில் முக்கியமான பங்களிப்பை அளிக்கும் அதிகாரிகள் சிலரைப் பார்ப்போம். ராஜீவ்குமார்,  நிதித்துறை செயலர்  நிதியமைச்சகத்தின் முக்கியமான அதிகாரி. பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக இணைக்கும் சர்ச்சைக்குரிய சீர்த்திருத்தங்களை உருவாக்கி முன்மொழிந்ததில் இவருக்கு முக்கியப் பங்குண்டு. வாராக்கடன் பாதிப்பைக் குறைத்து வங்கிகள் தொழில்துறைக்கு கடன்களை வழங்குவதற்கான முயற்சிகளுக்கான பரிந்துரைகளை இவர் நிதி அமைச்சருக்கு வழங்குகிறார். வங்கித்துறையின் பின்னணியில் இருந்து கடன்களை வழங்க வைத்து மக்களின் நுகர்வு மூலம் பொருளாதாரத்தை மீட்கும் முக்கிய முயற்சியை இவர் செய்து வருகிறார். அதானு சக்ரபொர்த்தி,  பொருளாதார விவகாரங்கள் துறை செயலர். பொதுத்துறை பங்குகளை விற்கும் திறனில் அதானு வல்லுநர். மத்திய அரசு 1 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை இ