நூல்களை நாட்டுடமையாக்குதலும் அதன் பின்னணியும்
நூல்களை நாட்டுடமையாக்குதலும் அதன் பின்னணியும் தமிழ்நாடு அரசு, பலநூறு எழுத்தாளர்களது நூல்களை நாட்டுடமையாக்கி, நூல்களுக்கு உரிய வாரிசுகளுக்கு குறிப்பிட்ட தொகையை வழங்குகிறது. இப்படி சட்டப்பூர்வமாக பெறப்பட்ட நூல்கள், தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நூலகத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதை நூல் பதிப்பாளர்கள் பயன்படுத்தி நூல்களை அச்சிடலாம். விற்கலாம். வாரிசுகளுக்கு காப்புரிமை தொகையை தர அவசியமில்லை. இவ்வகையில் எழுத்தாளரது நூல்கள் மக்களுக்கு பரவலாக கிடைக்கும். நூல்களை நாட்டுடமையாக்கம் செய்வது நூலின் பரவலாக்கம் என்ற வகையில் சரி என்றாலும், காப்புரிமை தொகையை எழுத்தாளர்கள் பெறுவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது என மாறுபட்ட விமர்சனக் கருத்துகளும் எழுந்து வருகிறது. அண்மையில் மறைந்த முன்னாள் முதல்வரான மு. கருணாநிதியின் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டன. அதற்கு உரிய தொகையை தமிழ்நாடு அரசு வழங்குவதற்கு முன்வந்தது. ஆனால், கருணாநிதியின் குடும்பத்தார் அதை மறுத்துவிட்டனர். ஏற்பது, மறுப்பது எழுத்தாளரது வாரிசுகளது சொந்த விருப்பம். உரிய தொகையை வழங்க முன்வருவது அரசின் கடமை. இந்த வகையில...