எதிர்காலத்தில் ஏற்படும் நீர்தட்டுப்பாட்டை முன்னமே சுட்டிக்காட்டும் நூல்! - நூல் அறிமுகம் நவ.2021
நூல் அறிமுகம் தி புக் ஆஃப் பாஸிங் ஷாடோஸ் சிவி பாலகிருஷ்ணன், டிஆர்எஸ் டிஎம் யேசுதாசன் நியோகி புக்ஸ் 350 மலபார் கிராமம் ஒன்றில் வசிக்கும் யோகண்ணன் என்பவர், மெல்ல வீழ்ச்சிக்கு உள்ளாவதை நூல் விவரிக்கிறது. தனக்கு தெரிந்த பழக்கமான அத்தனை விஷயங்களையும் ஒரு மனிதன் இழக்கும்போது ஏற்படும் வலியை வாசகர்கள் உணரலாம். எ பேர்ட் ஃபிரம் அஃபார் அன்சுல் சதுர்வேதி பான் மெக்மில்லன் 399 1942ஆம் ஆண்டு சுபாஷ் சந்திரபோஸ் ஜெர்மனி தலைவர் ஹிட்லரை சந்தித்து பிரிட்டிஷாரை விரட்ட ஆதரவு கேட்கிறார். தனி ராணுவத்தை அமைத்து போர் செய்ய திட்டமிடுகிறார் இதுதொடர்பான நிகழ்ச்சிகளை நூல் பேசுகிறது. பாய்ஸன் ஃபார் பிரேக்ஃபாஸ்ட் லெமோனி ஸ்னிக்கெட் ஒன்வேர்ல்ட் 499 எழுத்தாளரே பேசுவது போல அமைந்த நூல். அவரின் கதவருகே உங்கள் உணவில் விஷம் கலக்கப்பட்டுவிட்டது என குறிப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னாலுள்ள மர்மங்களை கண்டுபிடித்தால்தான் அவர் உயிர் பிழைக்கமுடியும். என்ன செய்கிறார் என்பதுதான் கதை. தி எக்ஸைல் ஆப் முகுந்தா ஆர்பிட் பக்ஷி ஆலெப் புக் கம்பெனி 395 மகாவிஷ்ணு தொடர் நூல்களின் தொடர்ச்சி இது. கிருஷணனின...