இடுகைகள்

தொழிலாளர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை தொழிலாளர்களுக்கு முழுவதுமாக கொடுத்த இளைஞர்!

படம்
            காய்கறிகளைத் தொழிலாளர்களுக்கு கொடுத்த இளைஞர் ! கேரள மாநிலம் அண்டை மாநிலங்களிடமிருந்து காய்கறி , அரிசி ஆகியவற்றைப் பெறுகிறது . இதன் காரணமாக பிற மாநிலங்களில் ஏற்படும் விவசாய பாதிப்புகள் கேரள மக்களின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கும் . இம்மாநிலத்தைச் சேர்ந்த யாது எஸ் பாபு , தனது 1.5 ஏக்கர் நிலத்தில் பல்வேறு காய்கறிகளை விளைவித்தார் . அதனை தினக்கூலி தொழிலாளர்களின் உணவுக்காக வழங்கியிருக்கிறார் . இடுக்கி மாவட்டத்திலுள்ள அன்னக்கரா எனுமிடத்தில் வாழும் இருபத்தைந்து வயது இளைஞரான இவர் , இயற்கை முறையில் செயற்கை உரங்களை இடாமல் வளர்த்த காய்கறிகளை தானே முன்வந்து அன்னகோரும்மா எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வழியே தினக்கூலி தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளார் . இவரது தந்தையும் கூட இதே தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் . வாரம்தோறும் நூறு கிலோ காய்கறிகளை பறித்து உணவுக்காக தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளனர் . இவரது தோட்டத்தில் மிளகு , பீன்ஸ் , ஏலக்காய் , பீர்க்கை , கத்தரிக்காய் செடிகளை பயிரிட்டுள்ளார் . பனிரெண்டு ஆண்டுகளாக இயங்கி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான

நான் செய்த விஷயம் காலத்திற்கும் நிலைத்து நிற்கவே நூல் எழுதினேன்! - சோனு சூட் , இந்தி நடிகர்

படம்
                சோனு சூட் திரைப்படங்களில் நடித்து வில்லனாக பெற்ற புகழை விட மனிதநேய உதவிகளால் உலக நாடுகள் வரை பாராட்டப்படும் ஆளுமை . மும்பையில் இவர் செய்யும் உதவிகளைப் பார்த்து அவரிடமே உதவியைப் பெற்றுக்கொள்ளுங்கள் என அமைச்சர்களே சொல்லத்தொடங்கினர் , ஆனால் மாநில அரசு அவரை பாஜகவின் ஆளாக பார்த்து விமர்சித்தது . பின்னர் சோனுசூட் முதல்வரை சந்தித்த பிறகு நிலைமை மாறியது . அதெல்லாம் விடுங்கள் . ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சோனு சூட்டிற்கு மனிதநேய உதவிகளை மக்களுக்கு வழங்கியதற்காக விருது வழங்கப்பட்டுள்ளது . அதேநேரம் ஐயம் நோ மேசியா என தன்னுடைய சுயசரிதை நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார் . இதுபற்றி அவரிடம் பேசினோம் . இப்படி புத்தகம் எழுத உங்களைத் தூண்டியது எது ?   பேராசிரியராக பணியாற்றி என் அம்மாதான் இதனைச் சொன்னார் . உன்னுடைய வாழ்க்கையை நீ காகித்ததில் எழுதி வைக்கவேண்டும் . அதுதான் எப்போதும் நிலைத்து நிற்கும் என்றார் . இந்த நூலின் மூலம் கர் பேஜோ திட்டம் எப்படி செயல்படுத்தப்பட்டவது என பலரும் அறிய வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தேன் . இதன்மூலம் பலரது வாழ்க

வேலைவாய்ப்பு, மேம்பாடு ஆகிய நேர்மறை விஷயங்களை தேஜஸ்வி யாதவ் பேசி வாக்குகளைப் பெற்றார்!

படம்
            சஞ்சய் குமார் பேராசிரியர் சென்டர் ஃபார் தி ஸ்டடி ஆஃப் டெவலப்பிங் சொசைட்டிஸ் காங்கிரஸ் கட்சி தான் நினைத்த இலக்கை எட்ட முடியவில்லை . கூட்டணிக் கட்சியாக இருந்தும் இந்த நிலை . மாநில கட்சிகள் வலுப்பெற்று வருவதை இந்த நகிழவுகள் காட்டுகின்ற்ன என்று கூறலாமா ? பீகாரில் 70 இடங்களை வாங்கி 19 இல் மட்டும் வென்ற காங்கிரஸ் , தனது அந்தஸ்தை இழந்துவிட்டது என்றுதான் கூறமுடியும் . மாநிலங்களில் வலுவாக உள்ள கட்சிகளோடு காங்கிரஸ் கூட்டணி வைத்துத்தான் சில மாநிலங்களை ஆண்டு வருகிறது . அந்த மாநில கட்சிகள் பலம் பொருந்தியவையாக மாறுகின்றன . காங்கிரஸ் அப்படி வலுவாக மாறவில்லை . இதனை பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசியல் நிலையைப் பார்த்தாலே புரிந்துகொள்ளமுடியும் . லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த சிராஜ் பாஸ்வான் மகாபந்தன் கூட்டணியை வெற்றிபெறச்செய்திருப்பாரா ? அப்படி முழுமையாக கூறிவிட முடியாது . நிதிஷூக்கு எதிரான ஓட்டுகளை சிராஜ் பாஸ்வான் பெற்றிருக்கிறார் . ஆனால் இது எப்படி ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சிக்கு உத வும் . அவர்கள் சிராஜின் வாக்குகளைப் பெற முடியாது . பாஜகவின

கொரோனா கற்றுத் தந்த பாடங்களை மறக்க கூடாது!

படம்
        சின்மய் தும்பே     சின்மய் தும்பே பொருளாதார பேராசிரியர் ஐஐஎம் அகமதாபாத் பெருந்தொற்று காலத்தில் நாம் கற்று்க்கொண்ட விஷயங்களை பின்பற்றுவதுதான் எதிர்காலத்தில் ஏற்படும் பேரிடர்களை காக்கும் என்கிறீர்கள் . இந்தியா அப்படி பாடங்களை கற்றுக்கொண்டது என நினைக்கிறீர்களா ? ஆம் , இல்லை என இரண்டுவிதமாகவும் இதற்கு பதில் சொல்லலாம் . நோய்த்தொற்றுக்கு எதிராக முன்னமே நடவடிக்கை எடுப்பது பெருந்தொற்றை கட்டுப்படுத்த உதவும் . 1817 றற்றும் 1920 ஆகிய ஆண்டுகளில் பெருந்தொற்று ஏற்பட்ட வரலாற்றை இந்தியா அம்னீசியா வந்த து போல மறந்துவிட்டது . இந்த பாதிப்பில் 40 மில்லியன் மக்கள் இறந்துபோனார்கள் . கடந்துபோன பெருந்தொற்றை கவனித்தால் , தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து வருவதை எளிதாக கணித்திருக்க முடியும் . சீனாவில் 1911 ஆம் ஆண்டு ரயில்வே நிர்வாகம் தொழிலாளர்களை சிறப்பாக கையாண்டது . அக்காலகட்டத்தில் நடந்து சென்ற தொழிலாளர்கள் பனியில் சிக்கி இறந்தனர் . நாம் நேரடியாக அதனை எடுத்துக்காட்டாக கொள்ளமுடியாவிட்டாலும் கூட அப்பாடங்களை மறக்க கூடாது . கொரோனா முதலில் சீன வைரஸ் என்று கூறப்பட்டது . பின்னாளில்

கொரோனா பீதியால் விரட்டப்படும் மக்கள்! - இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலம்

படம்
toi வேலைதேடி வெளிமாநிலங்களுக்கு சென்ற வட இந்திய மக்கள் இப்போது தம் மாநிலங்களுக்கு வேகமாக திரும்பி வருகின்றனர். காரணம், கொரோனா வைரஸ் பீதியால் பல்வேறு இடங்களிலும் வேலை இல்லை. அதற்காக பசியோடு கிடக்க முடியுமா? அரசு மக்களுக்கு பயண ஏற்பாடுகள் செய்கிறதோ இல்லையோ அவர்கள் நடக்கத் தொடங்கிவிட்டனர். ஆனால் இப்போது பல்வேறு சோதனைகள் செய்யாமல் அவர்களை கிராம மக்கள் உள்ளே அனுமதிப்பதில்லை என்று முடிவெடுத்து அவர்களை புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர். மேற்கு வங்கம், பீகார், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தராகண்ட் மக்கள் பலரும் ஊர் நோக்கி திரும்பத் தொடங்கியுள்ளனர். ஆனால் இவர்களை ஊருக்குள் விடாமல் கிராம மக்கள் தடுத்து வைத்துள்ளனர். ராஜஸ்தானின் தகவல்லி கிராமத்தைச் சேர்ந்த இடம்பெய்ரந்து சென்ற மக்கள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முறையாக சோதனைகள் நடைபெறாத நிலையில் மூன்று நாட்களுக்கு மேலாக கிராமத்திற்கு வெளியில் காத்திருக்கின்றனர். ”கேரளம் மற்றும் டில்லி ஆகிய மாநிலங்களிலிருந்து வந்த மக்களை சோதித்த பிறகே கிராமத்திற்கு அனுமதிக்க அரசு உத்தரவு. அரசின் உத்தரவுக்கு முன்னர் அங்கு சென்றவர்களையும் அங்கு

மலமள்ளும் தொழிலாளர்களை அதிகரித்த ஸ்வட்ச் பாரத் அபியான்!

படம்
sanrangindia பாதாளச் சாக்கடைகளை மனிதர்கள் சுத்தம் செய்வது இந்தியாவில் இன்னும் முக்கியப் பிரச்னையாகவே இருக்கிறது. இத்தொழிலை செய்பவர்கள் சாதி ரீதியாக தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் அரசும் கண்டுகொள்வதில்லை. இதற்கான இயந்திரங்களை பல்வேறு அரசு அமைப்புகளும், தனியார் அமைப்புகளும் கண்டுபிடித்தாலும் அதனை வாங்குவதற்கு அரசு முன்வருவதில்லை. 1993இல் சாக்கடைகளை மனிதர்கள் வைத்து சுத்தம் செய்யக்கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு அறிவிப்பை பிப்ரவரி 1 அன்று நிதி அமைச்சர் மக்களவையில் அறிவித்தார். ஆனால் 2019 வரையிலான ஐந்து ஆண்டுகளில் இந்தியாவெங்கும் 300 பேருக்கும் மேற்பட்டவர்கள் சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணியில் பலியாகி உள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 119 பேர் இறந்துள்ளனர். ஆனால் இச்சட்டம் இன்னும் காகிதத்தில் மட்டுமே உள்ளது. நடைமுறைக்கு வர இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ.. அதுபற்றி சில தகவல்களைப் பார்ப்போம். 2013ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதியிலிருந்து இந்தியாவில் மனிதக்கழிவுகளை அகற்றுவது, சாக்கடைகளை சுத்தம் செய்வது போன்றவற்றில் மனிதர்களை ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்

ஸ்டார்ட்அப் இளைஞர்களின் சூப்பர் சாதனை!

படம்
உலக அரங்கில் சாதிக்கும் இந்தியக் கைத்தறி! செய்தி: நொய்டாவைச் சேர்ந்த கைத்தறித் தொழிலாளர்களுக்கு லால் 10 எனும் ஸ்டார்ட்அப் இளைஞர்கள் உதவி வருகின்றனர். நொய்டாவைச் சேர்ந்த லால்10 எனும் ஸ்டார்ட்அப் தொடங்கப்பட்டு நான்கரை ஆண்டுகள் ஆகின்றன. தற்போது இந்த ஸ்டார்ட்அப் இளைஞர்கள், கைத்தறித் தொழிலுக்கு உதவி வருகின்றனர். இதற்கு வாட்ஸ்அப் மற்றும் பிக் டேட்டா போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். மனீத் கோகில், சஞ்சித் கோவில், ஆல்பின் ஜோஸ் ஆகியோர்தான் அந்த இளைஞர்கள். 2015 ஆம்ஆண்டு பெங்களூரில் தொடங்கப்பட்ட இந்த தொழில்முயற்சியில் 1500க்கும் மேற்பட்ட கைத்தறித் தொழிலாளர்கள், கலைஞர்கள் இணைந்துள்ளனர். சிஆர்எம் எனும் ஆப்பை மேம்படுத்தி, விற்பனை வலைப்பின்னலை வலுப்படுத்தியுள்ளனர்.  மேலும் தேசிய வடிவமைப்பு கல்லூரி மாணவர்கள்  16 பேர், நடப்பு டிரெண்டுகளைக் கண்காணித்து தகவல் கொடுக்கின்றனர். அதைப்பின்பற்றி உடைகளைக்  கைத்தறித் தொழிலாளர்கள் வடிவமைத்து வருகின்றனர். ”தற்போது எங்களுக்கு மாதம் 3 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் ஆர்டர்கள் வந்துகொண்டிருக்கின்றன” என்கிறார் லால் 10 நிறுவனர்களில் ஒருவரான சஞ

மடியும் தொழிலாளர்களை பண்டிகூட் காப்பாற்றுமா?

படம்
மனிதக்கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் மற்றும் பாதாளச்சாக்கடைகளை தூர்வாரும் தொழிலாளர்கள் பலரும் இன்றுவரையும் இறந்து வருகின்றனர். அரசு அவர்களுக்கு வழங்கும் இழப்பீட்டைக் கூட நிறுத்தி வைத்து அவர்களை மானத்தை சோதித்து வருகிறது. தமிழ்நாட்டில் கழிவகற்றும் தொழிலாளர்கள் இறந்துள்ள எண்ணிக்கை 203(1995 முதல்) கடந்த ஐந்து ஆண்டுகளில் இறந்துள்ளவர்களின் எண்ணிக்கை 144. அதிகாரப்பூர்வமாக அரசு கூறும் மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 334 கழிவகற்றும் இயந்திரங்களைக் கொண்டுள்ள கார்ப்பரேஷன்கள் - தூத்துக்குடி (1), கும்பகோணம் (1) இந்த வரிசையில் கோவை இரண்டு இயந்திரங்களை வாங்கவிருக்கிறது. கேரளத்தைச் சேர்ந்த ஜென் ரோபோட்டிக்ஸ் நிறுவனம் பண்டிகூட் எனும் கழிவுகளை அகற்றும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. ஐந்து பணியாளர்களின் பணிகளை ஒரே இயந்திரம் ஐந்து நிமிடங்களில் செய்துவிடும். ஒரே வாரத்தில் 400 பாதாளச்சாக்கடைகளை சுத்தம் செய்யும் திறன்பெற்ற இயந்திரம் இது. இப்போது இயந்திரங்களை இயக்க பயிற்சியளித்து வருகிறோம் என்கிறார் கும்பகோணம் துணை ஆட்சியரான பிரதீப் குமார். பண்டிகூட் இயந்திரத்தின் வ