ஜிஎஸ்டி சந்திக்கும் சவால்கள் என்னென்ன?
ஜிஎஸ்டி சந்திக்கும் சவால்கள் என்னென்ன? ஒரே நாடு ஒரே வரி என்று பெருமையுடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி. இன்று நாடு முழுக்க சுணக்கம் கண்டுள்ளது. அரசு பட்ஜெட்டில் எதிர்பார்த்தபடி வரிவருவாய் கிடைக்கவில்லை. ஜிஎஸ்டி வரியைக் கட்டுவதில் தொழில்முனைவோருக்கு ஏற்பட்ட குழம்பம்தான் இதற்கு முக்கியக் காரணம். பிராண்டுகள் இல்லாத பனீர், தேன், சானிடரி நாப்கின், கைத்தறி உடைகள் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட வரி, மக்களின் எதிர்ப்புக்குள்ளானது. பின்னர் அவை வரிபட்டியலிலிருந்து நீக்கப்பட்டன. ஜிஎஸ்டி உருவான விதம் பற்றி சுருக்கமாக பார்ப்போம். 2003 ஆம் ஆண்டு பொருளாதாரவியலாளரான விஜய் கேல்கர் கமிட்டியால், ஜிஎஸ்டி வரி பற்றிய கருத்து வெளியிடப்பட்டது. 2006 ஆம் ஆண்டு நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ஜிஎஸ்டி வரி பற்றிய கருத்தை வெளியிட்டார். 2010 ஆம் ஆண்டு இவ்வரி அமலாகும் என்று கூறப்பட்டது. 2009 ஆம் ஆண்டு மத்திய அரசு, மாநில அரசுகள் இணைந்து ஜிஎஸ்டி வரியை அமல்படுத்துவதற்கான செயற்பாடுகளைத் தொடங்கியது. 2011ஆம் ஆண்டு ஜிஎஸ்டி வரி மசோதா சட்டத்திருத்தமாக, சட்டம் 115படி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இதுபற்றி ஆராய நிதி அமைச்...